பலதட ஒலிப்பதிவு
பலதட ஒலிப்பதிவு என்பது பல ஒலி மூலங்களை தனித்தனியாக பதிவு செய்து பிறகு கலந்து இசையை பதிவு செய்யும் முறை. இதில் ஒவ்வொரு ஒலி மூலம் "தடம்" (track) எனப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பல ஒலித் தடங்கள் ஒத்தியக்கப்பட்டு (synchronized) இசை உருவாக்கப்படுகிறது.
செய்முறை
[தொகு]பலதட ஒலிப்பதிவு ஒலிப்பேழை, நான்கு அல்லது எட்டுத் தடப்பேழைகள் (4-track/8-track cassettes), 2" இருசுருள் 24-தடம் ( 2" reel-to-reel 24-track) சார்ந்தத் தளவாடங்கள், எண்ணியல் ஒலிப்பதிவு தளவாடங்கள் (digital recording equipment), ADAT (அலெஸிஸ் எண்ணியல் ஒலிநாடா) எட்டுத் தட இயந்திரங்கள், நிலைவட்டு சார்ந்தத் தளவாடங்கள் ஆகியவை மூலம் சாதிக்கப்படுகிறது. மிகப் பெரிய ஒலிப்பதிவுக் கூடங்கள் பல 24-தட இயந்திரங்களை ஒத்தியக்குகின்றன. எனவே, இவை நூறு ஒலித்தடங்களைப் பதிவு செய்து கலக்கின்றனர்.
கணினி சார்ந்த ஒலிப்பதிவு தளவாடங்களில் ஒலியட்டையின் எண்ணியல் அல்லது ஒப்புமை உள்ளீடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
பதிவு நிறைவடைந்ததும், ஒலிப்பதிவு செய்யப்பட்டத் தடங்கள் இருபிரிப்பிசை (Stereo) என்கிற இரண்டு தடங்களாக இருபிரிப்பிசைப் பதிவி (stereo recorder) மூலம் கீழ்க்கலக்கப்பட்டு ("down-mixing") ஒலிப்பேழைகள், குறுவட்டுகள் ஆகிய ஊடங்களில் படியெடுப்பதற்கும் விநியோகப்படுத்துவதற்கான வடிவத்தில் மாற்றப்படுகிறது.
பெரும்பாலுமானக் கலைஞர்கள் தொற்கருவிகள், இசையெழுப்புகள் ஆகியவற்றை முதல் தடங்களாக பதிவு செய்கின்றனர். தொற்கருவிகள் இரண்டே தடங்களாக கீழ்க்கலக்கப்படலாம, அல்லது பல தடங்களாக விட்டு வைக்கப்படலாம். பலதட ஒலிப்பதிவில் இறுதியாக பதிவு செய்யப்பட்டத் தடங்கள் குரலிசையாக அமைகின்றன.
கணினி முறை
[தொகு]2000களுக்குப் பிறகு தனிநபர் கணினி ஒரு முக்கியமான ஒலித்தடப் பதிவியாக உருவாகியுள்ளது. கணினியுடன் ஒரு ஒலியட்டை பயன்படுத்தப்படுகிறது. ஒலியட்டையின் ஒலிவாங்கி உள்ளீட்டில் குரலிசையைப் பதிவு செய்ய ஒரு ஒலிவாங்கியும். தட உள்ளீட்டில் (line input) கித்தார் மிகைப்பி (guitar amplifier), இசையுருப்பி (synthesizer), இசைப்பலகை (music keyboard) அல்லது கேட்பொலி இடைமுகத் தளவாடங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்படுகிறது. கேட்பொலி இடைமுக வன்பொருள் கேட்பொலிக் குறிகைகளை PCI, USB, Firewire இணைப்புகள் மூலம் கணினிக்கு அனுப்புகிறது. Apogee, Digidesign, Mouth of The Unicorn (MOTU), RME, M-Audio, Presonus ஆகிய நிறுமங்கள் இத்தகையத் தளவாடங்களைத் தயாரித்து வருகின்றனர்.
பலதடப் பதிவு மென்பொருள்களில் Adobe Audition, Avid நிறுமத்தின் Pro Tools, Merging Technologies நிறுமத்தின் Pyramix, MOTU நிறுமத்தின் Digital Performer, Cakewalk நிறுமத்தின் SONAR, Magix நிறுமத்தின் Samplitude, Steinberg நிறுமத்தின் Cubase ஆகியவை சில உதாரணங்கள் ஆகும்.