பலகூட்டு வினை
Jump to navigation
Jump to search
பலகூட்டு வினை (Polyaddition) என்பது பலபடிகளை உருவாக்கும் தனித்தனியான கூட்டு வினைகள் வழியாக பலபடிகளை உருவாக்கும் ஒரு பலபடியாக்கல் வினையாகும். இருபடிகள், முப்படிகள், சிலபடிகளுடன் கூடிய மூலக்கூறுகளின் மீது வேதி வினைக்குழுக்கள் வினைபுரியும்போது இத்தகைய பலகூட்டு வினைகள் தோன்றுகின்றன. இவ்வினைகளில் உயர் மூலக்கூற்று எடை பலபடிகள் உருவாகின்றன. கிட்டத்தட்ட பல்லொடுக்க வினை போலவும் சங்கிலி பலபடியாக்கலுக்கு மாறாகவும் முழுமையான பலபடியாக்க மாற்றம் இவ்வினைகளில் நிகழ்கின்றன [1]. பாலியூரித்தேன் உருவாகும் வினையை பலகூட்டு வினைக்கு உதாரணமாக்க் கூறலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jenkins, A. D.; Kratochvíl, P.; Stepto, R. F. T.; Suter, U. W. (1996). "Glossary of basic terms in polymer science (IUPAC Recommendations 1996. See definition 3.6)". Pure and Applied Chemistry 68 (12): 2287–2311. doi:10.1351/pac199668122287. http://pac.iupac.org/publications/pac/pdf/1996/pdf/6812x2287.pdf. பார்த்த நாள்: 2019-02-02.