பறவைகளின் கூர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்கியோப்டைரிக்ஸ் என்ற பழங்கால வகைப் பறவையின் எச்சங்கள்

பறவைகளின் கூர்ப்பு என்பது, வெகுகாலமாக பரிணாம உயிரியலில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான அறிவியல் ஆய்வாளர்கள், பறவைகளாவன தொன்மாக்களில் இருந்து கூர்ப்படைந்த ஓர் உயிரியல் வகுப்பு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இவை மிசொசோய்க் காலத்தில் உருவான ஒரு தொன்மாப் பிரிவெனவும் பல அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆர்கியோப்டைரிக்ஸ் என்ற பழங்கால வகைப் பறவையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவை தொன்மாக்களில் இருந்தே கூர்ப்படைந்துள்ளன என்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் இது தொடர்பான வாதங்கள் இன்னும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவைகளின்_கூர்ப்பு&oldid=2135582" இருந்து மீள்விக்கப்பட்டது