பர்மிலா தோகாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்மிலா தோகாசு
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), ஆறாவது சட்டப்பேரவை, தில்லி
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 2015
முன்னையவர்அணில் சர்மா
தொகுதிஆர்.கே.புரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதான்சா, புது தில்லி
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
துணைவர்தீரஜ் குமார் தோகசு (கணவர்)
வாழிடம்புது தில்லி
தொழில்வணிகர், அரசியல்வாதி

பர்மிலா தோகாசு (Parmila Tokas) ஓர் இந்திய அரசியல்வாதியும் தில்லியின் ஆறாவது சட்டமன்றம் மற்றும் ஏழாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் மற்றும் தில்லியின் ஆர். கே. புரம் சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இளமை[தொகு]

பர்மிளா தோகாசு தில்லியில் உள்ள தன்சா கிராமத்தில் பிறந்தார். தன்சாவில் உள்ள அரசு சர்வோதயாப் பெண்கள் மூத்தோர் மேனிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். தோகாசு ஒரு தொழிலதிபர். 2013-ல் இவரது கணவர் தீரஜ்குமார் தோகாசு ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். [1] [2]

அரசியல்[தொகு]

பர்மிலா தோகாசு ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர். தில்லியின் ஆறாவது சட்டப் பேரவையில் இவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றது முதல் முறையாகும். 2015 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பா. ஜ. க.வின் அனில் குமார் சர்மாவை 19,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3][4] இவர் தில்லியின் ஆர். கே. புரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.[5]

22 திசம்பர் 2015 அன்று, ஆம் ஆத்மி கட்சியின் பெண்கள் பிரிவைச் சேர்ந்த பலர் பங்கேற்ற தொழிலாளிக்கு எதிரான தாக்குதலுக்காக தோகாசு மற்றும் அவரது கணவர் மீது மத்திய பொதுப்பணித் துறையின் இந்தியப் பணியாளரால் புகார் அளிக்கப்பட்டது.[6]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

2015 முதல் இவர் தில்லியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் (2020 - தற்போது)[தொகு]

இரண்டாவது முறையாக 2020ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டு 7வது தில்லி சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.

தில்லி சட்டப் பேரவையின் குழு ஒதுக்கீடு குடுவின் உறுப்பினராக உள்ளார்.[7] இவர் (2022-2023), அரசாங்க முயற்சிகளுக்கான குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[8]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Brief profile". myneta.info. http://myneta.info/delhi2015/candidate.php?candidate_id=219. 
  2. "Husband's profile". myneta.info. http://myneta.info/delhi2013/candidate.php?candidate_id=303. 
  3. "Mukesh Kumar Ahlawat (AAP) Election Result 2020 Live Updates: Mukesh Kumar Ahlawat of AAP Wins". News18. பார்க்கப்பட்ட நாள் 9 September 2020.
  4. "Mukesh Kumar Ahlawat Election Results 2020: News, Votes, Results of Delhi Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 September 2020.
  5. "Sultanpur Election Result 2020: सुल्तानपुर माजरा से AAP प्रत्याशी मुकेश कुमार अहलावत जीते". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 9 September 2020.
  6. "FIR filed against AAP MLA". The Times of India (in ஆங்கிலம்). 22 December 2015. பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.
  7. "Committee System in Legislative Assembly of National Capital Territory of Delhi" (PDF). Legislative Assembly National Capital Territory of Delhi. பார்க்கப்பட்ட நாள் 17 September 2022.
  8. "Delhi Legislative Assembly National Capital Territory Of Delhi Composition Of House Committees 2021-2022". Archived from the original on 26 December 2021. பார்க்கப்பட்ட நாள் 17 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மிலா_தோகாசு&oldid=3895161" இலிருந்து மீள்விக்கப்பட்டது