பர்சவ பத்மாவதியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்சவ பத்மாவதியம்மன் கோவில் கிருட்டிணகிரி மாவட்டத்தில் குஜராத்தி மக்கள் கூடுதலாக வழிபடும் கோவில். கிருட்டிணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றிம், சுண்டம்பட்டி அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

அன்னதானம் வழங்குமிடம், சொற்பொழிவு அரங்கம், பூங்கா, சிறுவர் விளையாட்டு மைதானம் போன்றவை இக்கோவிலைச் சுற்றி அமைந்துள்ளன. கருவரையின் சுவரில் கண்ணாடி எநலைப்பாடும் தரையில் பளிங்கு கற்களும் இடம்பெற்றுள்ளன. காலை 7 மணியளவில் கருவரையைத் துாய்மைசெய்து பிறகு அம்மனுக்கு சாம்பிராணி காட்டி தீபம் ஏற்றப்படுகிறது. நண்பகல் 12 மணியளவில் உச்சிவேளை பூசை நடைபெறுகிறது. பக்தர்கள் தேங்காய், பழம், பூ, இனிப்புகள் வைத்து வழிபடுவர். ஆண்டுதோறும் நவராத்திரி 9 நாட்களில் காலை, மாலை, நண்பகல் என மூன்று வேளையும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்பொழுது குஜராத்தி மக்கள் கூடுதலாக விழாக்களில் கலந்துகொள்வர்.

இக்கோவிலுக்கு யாரும் கருப்புநிற ஆடை அணிந்து செல்லக்கூடாது. இஞ்சி, பூண்டு போன்று பூமிக்கடியில் விளையும் பொருட்களை உண்டுவிட்டு இக்கோவிலுக்குள் செல்லக்கூடாது.

உசாத்துணை[தொகு]

  1. பன்முக நோக்கில் கிருஷ்ணகிரி மாவட்டம், முனைவர் கோ.விருது, ஜோதிராஜன் பதிப்பகம், ஓசூர், 2010.