பர்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பர்கான் (Barchan) என்று அழைக்கப்படுபவை பாலைவனத்தில் உள்ள மணற்குன்றுகளில் ஒரு வகையாகும். இவை பிறைச்சந்திர வடிவத்தில் உள்ள மணற்குன்றுகள் ஆகும். இவை காற்று வீசும் திசைக்கு ஏற்ப நிலையாக நகரும் தன்மை கொண்டவை. காற்று வீசும் திசையானது வன் சரிவினையும் மற்றும் எதிர் திசையானது மென் சரிவினையும் கொண்டிருக்கும்.[1] 1881 இல் உருசிய நிலவியலாளரான அலெக்ஸாண்டர் வான் மிடென்டோர்ஃப்,[2] துர்கிஸ்தானிலும் பிற உள்நாட்டு பாலைவன பிராந்தியங்களிலும் இவ்வகை வடிவ மணல் குன்றுகளை கண்ணறிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 268.
  2. http://www.britannica.com/EBchecked/topic/53068/barchan
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்கான்&oldid=3314211" இலிருந்து மீள்விக்கப்பட்டது