உள்ளடக்கத்துக்குச் செல்

பரிகாரம் (இந்து மதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிகாரம் என்பது இந்து சமயத்தில் பக்தர்களின் பிரட்சனைகளை தீர்க்க செய்யப்படும் செயலாகும். இவை நம்பிக்கை அடிப்படையிலேயே நிகழ்த்தப்படுகின்றன. சில கோயில்களின் தலப்புராணங்கள் மற்றும் செவிவழிச் செய்திகள் மட்டுமே பரிகாரங்களுக்கான வழிகாட்டுதலாக உள்ளது. குழந்தையின்மை, திருமணத்தடை, ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் மற்றும் ராகு கேது தோசங்கள் போன்றவற்றுக்காக பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

பாவங்களை செய்தமைக்காக செய்யப்படும் பரிகார்களை பிராயச்சித்தம் என்று அழைக்கின்றனர். இவற்றில் கொலை முதலிய கொடிய பாவங்களுக்கும் அவற்றின் பாவங்களிலிருந்து விடு பட வழிவகை கூறப்பட்டுள்ளன.

சில பரிகாரங்கள்

[தொகு]
  • அன்னதானம் [1]
  • பிதுர் தானம்
  • பசு தானம்
  • புனித நதிகளில் நீராடுதல்
  • பசுக்களுக்கு அகத்திக்கீரை தருதல்
  • அம்மாவைசையன்று உணவிடுதல் [2]
  • சாதுக்களுக்கு உடையளித்தல்
  • ஏழைகளுக்கு பணம்தருதல்

பரிகாரப் பூசைகள்

[தொகு]

சந்திர சூரிய கிரகணங்கள் ஏற்படும் போதும், [3] சோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் ஏற்றார் போல இல்லாக் காலங்களிலும் பரிகாரப் பூசைகள் நடத்தபடுகின்றன. இந்த பரிகாரப் பூசைகள் தாந்தீக சமயமான சாக்தத்தில் மிக அதிகமாக கடைபிடிக்கப்படுகின்றன.

ஆதாரங்கள்

[தொகு]
  1. தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவம் தீர செய்ய வேண்டியது
  2. பலன் தரும் பரிகாரங்கள் - தினமலர் கோயில்கள்
  3. http://temple.dinamalar.com/news_detail.php?id=53317
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிகாரம்_(இந்து_மதம்)&oldid=2089031" இலிருந்து மீள்விக்கப்பட்டது