உள்ளடக்கத்துக்குச் செல்

பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள்
நூல் பெயர்:பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள்
ஆசிரியர்(கள்):நெல்லை விவேகநந்தா
வகை:ஆன்மிகம்
துறை:ஆன்மிகம்
இடம்:கௌதம் பதிப்பகம்,
எண். 2, சத்யவதி நகர் முதல் தெரு,
பாடி,
சென்னை - 600 050.
96888-29900,
90422-76544
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:கௌதம் பதிப்பகம்
பதிப்பு:நவம்பர், 2011
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் எனும் ஆன்மிக நூல் டெம்மி அளவில் 96 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல். இது சென்னை, கௌதம் பதிப்பகம் பன்னாட்டுப் புத்தகக் குறியீட்டு எண் 978-93-81134-20-7 கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்

[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் என்கிற கடற்கரையோர கிராமத்தில் பிறந்த ஜெயமுருகானந்தன் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். சென்னையில் ஊடகத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் சுவாமி விவேகானந்தர் மேல் கொண்ட பற்றுதலால் நெல்லை விவேகநந்தா என்கிற புனைப் பெயரில் கட்டுரைகள், தொடர்கள் போன்றவற்றை தமிழில் வெளியாகும் அச்சிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருகிறார்.

உள்ளடக்கம்

[தொகு]

இந்நூலில் தமிழ்நாட்டிலுள்ள சில கோயில்கள் குறித்த வரலாறு உள்ளடக்கமாக இடம் பெற்றிருக்கிறது.