பரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
pBSK பரப்பி வரைபடம்

மூலக்கூற்று உயிரியலில் பரப்பி (vector) என்பது ஒரு மரபணுவை பக்டிரியல் படிவாக்கம் (bacterial cloning) செய்யப்படும் கணிமி (பிளசுமிட்) என்பதை குறிக்கும். மேலும் தீ நுண்ம நோய்களை பரப்பும் பூச்சிகளையும் பரப்பி (vector) என்ற பொருளில் ஆங்கிலத்தில் கொள்வார்கள்.ஒரு பரப்பியில் நகலாக்கம் (replication) செய்வதற்கு என்று தொடங்க புள்ளி (origin region), தேர்ந்தெடுப்பதற்கு என்று ஒரு தேர்ந்தெடுக்கும் முகவர் (selectable markers) எதிர்த்து வாழ்வதற்கான மரபணு பகுதியும் இருக்கும். மேலும் படிவாக்கம் புரிய ஒரு பல் படிவாக்க இடம் (multiple cloning site, MCS) என்ற பகுதி இருக்கும். இவ்விடத்தில் பல கட்டுள்ள (வரையறுக்கப்பட்ட) நொதிகளின் (restriction enzyme) வெட்டும் வரிசைகள் உள்ளன. நாம் படிவாக்கம் செய்ய விரும்பும் கட்டுள்ள நொதிகளின் வரிசைகளை தேர்ந்தெடுத்து பக்டிரியல் படிவாக்கம் செய்யலாம். மேலும் இவ்விடத்தில ஒரு மரபணு தொடரிகள் (தொடரி) (gene promoter) அமைந்து இருக்கும். படிவாக்கம் செய்ய விரும்பும் கணிமியெய் பொருத்து, பக்டரியல் படிவாக்க பரப்பிகள் (bacterial cloning vector) பல வகைப்படும்.

  1. படிவாக்க பரப்பி (cloning vectors)
  2. டி. முனை அல்லது வால் பரப்பி (T-tail vector)
  3. புரத வெளிப்படுத்தல் பரப்பி (expression vector)
  4. இரு வாழ் பரப்பி (இவைகள் இரு தொடக்க புள்ளி (replication origin or ori region) மற்றும் கோலுயிரிலும் (E.coli) மற்றும் கொதியம் (yeast) அல்லது பயிர்க் கோலுயிரிலும் (Agrobacterium) வாழும் (replicate) தன்மை கொண்டுள்ளது)- (binary vector)
  5. கொதிய பரப்பி (yeast vector)
  6. பயிர்க் கோலுயிரி பரப்பி (Agrobacterium vector)
  7. பாலூட்டி வெளிப்படும் பரப்பி (mammalian (cell) expression vectors)
  8. மாற்றப்பட்ட தீ நுண்ம பரப்பி (modified virus vectors)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பி&oldid=2752219" இலிருந்து மீள்விக்கப்பட்டது