உள்ளடக்கத்துக்குச் செல்

பயிர் வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயிர் வகைகள் உலகில் உள்ள விலங்கின வகைகள் போல எண்ணற்றவைகள் இருக்கின்றன. அவற்றுள் நமக்கு உபயோகமான தாவரங்கள் மட்டும் பயிரிடப்படுகின்றன. அவைகள் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.[1]

தானியப் பயிர்கள்

[தொகு]

உணவுத் தேவைக்காக அதிக அளவில் சாகுபடி செய்யபடும் மாவுச்சத்தை கொண்ட பயிர்கள் தானியப் பயிர்கள் ஆகும்.

 • நெல்
 • கோதுமை
 • பார்லி
 • ஓட்ஸ்
மக்காச்சோளம்

சிறுதானியப் பயிர்கள்

[தொகு]

குறைந்த அளவு பரப்பளவில் பயிரிடப்படும் புல் வகை குடும்பத்தைச் சார்ந்த பயிர்கள்

 • மக்காச்சோளம்
 • கம்பு
 • ராகி
திணை

குறு தானியப் பயிர்கள்

[தொகு]

வறட்சியைத் தாங்கி குறைந்த மழை பெய்யும் இடங்களில் பயிரிடப்படும் பயிர்கள்

 • திணை
 • சாமை
 • வரகு
 • குதிரைவாலி

பயறு வகைப் பயிர்கள்

[தொகு]

புரதச் சத்தைக் கொடுக்கக்கூடிய லெகூம் வகைப் பயிர்கள்

 • துவரை
 • அவரை
 • உளுந்து
 • மொச்சை

எண்ணெய் வித்துப் பயிர்கள்

[தொகு]

கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்கள்

 • நிலக்கடலை
 • எள்
 • தென்னை
 • சூரியகாந்தி

மேற்கோள்கள்

[தொகு]
 1. முனைவர் ச.மோகன் (2015). வேளாண் செயல்முறைகள். தமிழ்நாடு பாடநூல் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிர்_வகைகள்&oldid=4045052" இலிருந்து மீள்விக்கப்பட்டது