பயனர் பேச்சு:TNSE CHELLAMANI DIET MDU/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சங்க இலக்கியத்தில் பாவைகள்[தொகு]

பாவை” எனும் சொல் பொம்மையையும், சித்திரத்தில் உள்ள பெண் உருவத்தையும் குறிப்பதாச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெண்கள் தங்கள் விளையாட்டுகளில் பலவிதப் பாவைகளை பயன்படுத்தியுள்ளனர். 

அப்பாவைகள் மரம், மண், கல் மற்றும் பொன்னால் செய்யப்பட்டனவாக இருந்துள்ளன என்பதை “வழுஅறு மரனும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும்” என மணிமேகலையும் “பசும்பொன் புனைந்த பாவை” என்று மதுரைக் காஞ்சியும் கூறுகின்றன. பாவைகளை விளையாடு பொருளாகவும், விளக்ககாகவும், தெய்வசக்தி வாய்ந்ததாகவும் கையாண்டுள்ளனர். “பாவை” எனும் பதம் பொம்மையை மட்டும் குறிக்காமல் ஓவியத்தையும் நிழலுருவத்தையும் குறிப்பனவாக உள்ளன. “சித்திரப்பாவையின் அத்தகவடங்கி” என நன்னூலும், “கையும் காலும் தூக்கத்தூக்கும் ஆடிப்பாவை போல” என நன்னூலும் வெளிப்படுத்துகின்றன. பாவைகள் மனிதர்களால் செய்யப்பட்டதை நெடுநல்வாடை “யவனர் இயற்றிய வினைமான் பாவை”என்றும் சித்திரகாரிகள் பாவைகள் வரைந்ததை “வல்வோன் தைஇய வரிப்புனை பாவை” என மதுரைக் காஞ்சியும், இயற்கையாய் அமைந்த பாவைகள் குறித்து மலைபடுகடாம்

“செய்யாப் பாவை வளர்ந்து கவின்முற்றாக காயம் கொண்டன இஞ்சி” என்றும், தெய்வத்தால் செய்யப்பட்ட பாவை குறித்து “தெய்வம் எழுதிய வினைமான் பாவை அன்னோள்” என நற்றிணையும், திருமகளே கொல்லிப் பாவையின் வடிவில் அவுணரை வீழச் செய்த நிகழ்வைச் சிலம்பு “செருவெங் கோலம் அவுணர் நீங்கத் திருவின் செய்வோன் ஆடிய பாவையும் எனவும் பாடுகின்றன. பாவைகள் அநீதிகளைச் சுட்டிக் காட்டும் பொறுப்பினை ஏற்று நடந்தமையை மணிமேகலையில் கந்திற்பாவையும், குறுந்தொகை குறிப்பிடும் கொல்லிப் பாவையும் தெய்வப் பாவைகள் எக்காலத்தும் தங்களின் நிலைநிறுத்ததப்பட்ட உறைவிடங்களைவிட்டு அகலாமல் இருந்தன என்பதையும் இவற்றின் வழி அறியலாம்.

                                  துணை நூல்கள்: 

1. உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பத்திகாரம் மூலமும் உரையும் 2. உரை.வ.த. இராமசுப்பிரமணியம், மணிமேகலை மூலமும் உரையும் 3. உரை. புலவர்.அ. மாணிக்கம், சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும்.

சங்ககால நீர்த்துறைக் கடவுள்கள்[தொகு]

நீர்;த்துறைகளில் கடவுளின் உறைவிடம் அமைந்துள்ளதை சங்க இலக்கியங்கள் வழி அறியலாம். ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும்போதுதான் மண்ணில் விழாக்களும் மக்களின் கொண்டாட்டங்களும் நடைபெற்று வந்திருப்பதைக் காண்கிறோம். சிலப்பத்திகாரத்தில் “காவரியின் புண்ணிய நன்னீரைப் பொற்குடங்களிற் கொணர்;ந்து இந்திரனை நீராட்டுகின்றனர்”.

1.ஆறு, குளம், சுனை, கடல் போன்ற இடங்கள் கடவுளர்களின் உறைவிடங்கள் இருந்தமையையும் அவை மக்களின் வழிபாட்டுத்தளங்களாக விளங்கியமையையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆறுகளில் உறைந்த தெய்வம் பற்றி,

“ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்”

                   (பரி. 4:67) 

“காடும் காவும் கவின்பெறு துருத்தியும்”

                 (முருகு: 223) 

எனப் பரிபாடலும் முருகாற்றுப் படையும் பாடியுள்ளன. சுனைக் கடவுள் பற்றி,

“கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த

                       (நற்: 34.1) 

“அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் ஆர்ச்சுனை தழையி நிர்ப்பயம் காணாது”

                    (அக: 91:4) 

என நற்றிணையும் அகநானூறும் குறிப்பிடுகின்றன. கழிமுகத் தெய்வம் பற்றி, “கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி கடுஞ்சூழ் தருகுவன், நினக்கே”

                     (அக: 110:4-5) 

என்று அகநானூறு பாடுகிறது. நெய்தல் நிலக் காட்சிகளைப் பாடும் புலவர்கள் கடல் தெய்வத்தை,

“முந்நீர் விழவின் நெடியோன்”

        (புறநானூறு 9:10) 

எனப்புறமும் “பெருங்கடற் தெய்வம் நீர் நோக்கி”

       (கலித்தொகை: 131: 1-2)

எனக் கலியும் “கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு”

         (அகநானூறு: 270: 9-12) 

என்று அகநானூறும் பாடுகின்றன. காலந்தோறும் நம் மண்ணில் நீர்த்துறைகள் வழிபடுதளங்களாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

துணை நூல்கள்:

1. உரையாசிரியர். புலவர் அ.மாணிக்கம், சங்க இலக்கியங்கள் மூலமும் உரையும்

1-15 தொகுதிகள் வர்த்தமானன் பதிப்பக வெளியீடு

அடிக்குறிப்பு:

1.ந.மு.வெங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பத்திகாரம் மூலமும் உரையும், ப.102.