பயனர் பேச்சு:Rajkumaradhiyaman/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
					தமிழ்--- திராவிடமா? தமிழா?.

கடந்த நூற்றாண்டு முதல் தமிழ் மொழியை திராவிடம் என்று அழைக்கின்றனர். இதன் உண்மை தன்மையை ஆராய்வது இவ்வாய்வின் நோக்கம். திராவிடம் தான் தமிழ் இதோ ஆதாரம் என்கிறார்கள் . ஒவ்வென்றையும் அலசுவோம். திராவிடம் பற்றி முதன்மை ஆதாரங்கள். கால்ட்வெல் கூற்று திராவிடவேதம் குமரிலபட்டர் குறிப்பு திராவிட சிசு திராவிடம் சொல்லாரச்சி சமஸ்கிருத குறிப்புகள். எழுத்துகள்

கால்டுவெல் கூற்று

தமிழ் மொழி இந்நிலை அடைவதற்கு காரணமான கருத்தாக்கத்தை தொடங்கி வைத்த மாக புண்ணியவான் இந்த கால்டு வெல்தான் இவர் நோக்கம் சமஸ்கிருதம் அல்லாத மொழிகளின் இயல்புகளை ஒப்புமையை செய்வதே ஆகும். இவர் தம் நூலிலே திராவிடம் என பெயர் வைத்த விதத்தையும் இவரே கூறியுள்ளார். அது “இம்மொழி இனத்தைக் குறிக்க வடமொழியில் வழங்கிய மிகப் பழைய சொற்களுள் ஒன்று ஆந்திர- திரவிட பாஷை என்பது. இத்தொடர் கி.பி. 8 ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த குமரிலபட்டரால் ஆளப்பட்டது. இப்பெயர் தெளிவற்ற பெயரே யென்றாலும், தென்னாட்டு மக்களில் பெரும்பாலோரால் வழங்கப்பெற்ற மொழி இவை இரண்டே ஆதலாலும், கன்னடம் தெலுங்கிலும், மலையாளம் தமிழிலும் சேர்க்கப்பட்டன ஆதலாலும், இப்பெயர் தவறாகச் சூட்டப்பட்ட பெயரன்று என்றே கருத வேண்டும். என்றாலும் நான் மேற்கொண்ட சொல் திராவிடம் என்பது. இறுதியாக என்னால் காணக்கூடிய தகுதிமிக்க சொல் இதுவே என்றாலும் இதுவும் கவர் பொருள் உடையதே என்று நானே ஏற்றுக்கொள்ளும் வகையில் தழிழ் என்ற சொல்லைப் போலவே இதுவும் வரையறுக்கப்பட்ட பொருள் நிலையிலேயே ஒரு காலத்தில் ஆளப்பட்டிருந்தது”. (பக்கம்.8 திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்;. கோவேந்தன், ரத்தினம் மொழி பெயர்ப்பு.; பழனியப்பன பதிப்பகம்). இவர் குறிப்பே தமிழ் வேறு, திராவிடம் வேறு என்று கூறுகிறது.

திராவிடவேதம்

திராவிட வேதம் என்று நாலாயிர திவ்விய பிரபந்ததை கூறுகின்றனர். நாலாயிர திவ்விய பிரபந்ததின் திருமொழியின் சிறப்பு பாயிரம் தமிழ் மறை என்றே தான் இடம் பெற்றுள்ளது. திரவிட மறை என்று அல்ல. இந்நூலின் உரையாசிரியரான 16 நூற்றாண்டில் வாழ்ந்த லோகாச்சாரி ஐயர் அவர்கள் திராவிட வேதம் என்று உரை வகுக்கிறார். மூல படியில் திராவிட வேதம் என்று இல்லை. குமரிலபட்டர் குறிப்பு குமரிலபட்டர் தெலுங்குமொழியை ஆந்திர- திராவிட பாசை என்கிறார் தமிழை அல்ல.

திராவிட சிசு

திராவிட சிசு என்று சௌந்தரியலா ஹரி பாடல் 75 ல் ஆதி சங்கரர் கூறுகிறார். ஆந்திர மாநிலத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் திராவிட புத்திரலு என்று புதியதாக குடியேறிய பிரமாணர்கள் பற்றிய செய்தி பதிவாகியுள்ளது. ஆரியர் இனத்தின் ஒரு குறிப்பட்வர்களையே திராவிடர் என்று குறித்துள்ளனர். தெலுங்கு பகுதியில் வாழ்ந்த ஆதி சக்ரர் (இவரும் பிரமணரே) ஒரு பிரமணரை திராவிட சிசு என்று கூறியதில் பிழை எதும் இல்லை. எனினும் இப்பாடலானது தமிழ் ஞணசம்பந்தரை குறிக்காது ஏன் எனில் ஆதி சங்கரர் காலம் கி.மு என்றும், கி;.பி 5 ம் நூற்றாண்டு என்றும் வரலாறுகள் கூறுகின்றன. எனவே இப்பாடல் ஆதிசங்கரரை தான் குறிக்கும் என்போரும் உள்ளனர். தமிழ் ஞணசம்பந்தர்; காலம் 6 ம் நூற்றாண்டு என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இது தழிழரை குறிக்கவில்லை. திராவிட் என்று இன்றும் பட்டம் கொண்டுள்ள பிராமணர்களை காணமுடிகிறது. சான்றாக இராகுல் திராவிட் இவரும் ஒரு பிராமணர்.

திராவிடம் சொல்லாரச்சி திராவிடம்- திரமிடம்- திரமிளம்- தமிழ். . இது சொல்லாரச்சி இதுவல்லாம் ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ள இலாது. காரணம், சான்று எதுவும் இல்லை இது வெறும் யூகம் மட்டுமே. உண்மை அல்ல. எந்த நூற்றாண்டில் இவ்வாறு மருவியது என்பதை காட்ட எவ்விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. கற்பனை கதை போல உள்ளது. நிலா வை காட்டி சோரு ஊட்டும் கதை போன்றதே இதுவும். அடுத்து சமஸ்கிருத குறிப்புகள். தக்காணத்தில் கிழக்கு கடற்கரையே.(மனு. நூல்) ஒரிசா பகுதி தென்னிந்தியாவின் கடற்கரைப் பகுதிகளே(முசுகுந்த புராணம்) மகராஸ்டிரா பகுதி குசராத் முதல் ஒரிசாவரையிலான கடற்கரைப் பகுதிகளே(மகாபாரதம்) பஞ்ச திராவிடத்தில் திராவிடர் என்போர் ஆரியரே.(சமஷ்கிருத பண்டிதர்கள்) திராவிடத்தில் ஆந்திர திராவிட பாஷா பேசப்பட்டது ( குமரிலபட்டர்) மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் திராவிட நாடு பற்றி கூறுகிறதே ஒழிய தமிழ் நாட்டை குறிக்கவில்லை. எழுத்துகள் --- லலிதவிஷ்தார எனும் புத்தமத நூல் தெளிவாக திராவிட லிபி மற்றும் தமிழ் பிராமி லிபி பற்றி கூறுகிறது. தமிழ் மொழி எழுத்துக்களோ பிராமி எழுத்து வடிவத்தை சார்ந்தது. இந்தியாவில் மட்டும் இல்லை இலங்கையில் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தூம் கூட தமிழ் பிராமி தான். இந்தியாவில் உள்ள ஒரு இலச்சம் கல்வெட்டில் அறுபது ஆயிரம் கல்வெட்டு தமிழ் கல்வெட்டு தான். தமிழன் என்று செல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இது தமிழன் ஆய்வு முடிவுகள் சங்க இலக்கியத்தில் காப்பிய இலக்கியத்தில், பக்த்தி இலக்கியத்தில் திராவிடர் எனும் சொல்லே இல்லை.என்பதனாலும் தமிழ் வேந்தர்கள் ஆரசாச்சி செய்த இறுதி காலம் கி.பி 12;-ம் நூற்றாண்டு வரை உள்ள எந்த தமிழ் நூலிலும் திராவிடம் பற்றிய குறிப்பு துளியேனும் இல்லை. என்பதாலும். லலிதவிஷ்தார எனும் நூல் தெளிவாக எழுத்தை வேறுபடுத்தி காட்டியுள்ளது. ; மேலும் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் தெளிவாக வடசொல் பற்றி கூறியுள்ளார் வட வேங்கடத்திற்கு அப்பால் உள்ளவர்கள் வடவர்கள் அல்லது வடுகர்கள், அவர் தம் மொழி வடமொழியே என்று தெளிவாக உரைக்கிறார். சமஷ்கிருத குறிப்புகளில் தமிழ்நாட்டின் நாடுகளை சோழ நாடு, பாண்டிய நாடு என்று தெளிவாக கூறுகிறது. அதே நேரத்தில் திராவிட நாடு பற்றியும் வேறுபடுத்தி தான் கூறியுள்ளது. (மகா பாரதம் 56 தேசம்)

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் தௌ;ள தெளிவாக திராவிடம் என்பதற்கும் தமிழுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என நிறுபிக்கலாம்.

தமிழ் மொழியில் திராவிடம் பற்றிய சொல்லாடல் அனைத்தும் தமிழர் விழ்சியடைந்த பிறகு ஐரோப்பியர் காலத்தில் தான் பயின்று வந்துள்ளது. திராவிடர் என்பது இலக்கிய கல்வெட்டுபடி ஆரியர் அல்லது அந்தணர்களைதான் குறிக்கிறது. இன்றைய ஆதி திராவிடர் இனத்தவர்க்கு முன்பு அப்பெயர் இல்லை. தென்னிந்தியாவில் தமிழ் மொழியின் தாக்கம் மற்ற மொழியில் இடம் பெற்றுள்ளது உண்மையே. மலையாள பகுதி தமிழ் நாடே, மேலும் வட வேங்கடத்திற்கு அப்பால் இருந்த பகுதிகளில் சில இடங்களில் இடப்பெயர்வு, போர்காரணமாக தமிழ் மொழி பரவியது என்பதுதான் நிசம். சாளுக்கிய நாடு பல்லவர், சோழர் காலத்தில் பல முறை அழிக்கப்பட்டு தமிழர் ஆட்சி நிறுவப்பட்டதை கல்வெட்டுகள் உறுதிபடுத்துகிறது.

வட வேங்கடத்திற்கு அப்பால் உள்ள பகுதியே திராவிடநாடு என தௌ;ள தெளிவாக நிறுவலாம், அதற்கு கல்வெட்டு, இலக்கிய ஆதாரம் ஏராளம் உள்ளது.

இருதியாக திராவிடர்களுக்கும் சிந்துசமவெளிக்கும் எவ்வித சம்மதமும் இல்லை. அது தமிழ் நாகரீகம். திராவிடர்கள் என்றால் வரலாற்று நோக்கில் தமிழர் அல்லாதவர்கள், திராவிடர் என்றால் பெரியார் நோக்கில் அல்லது அவர்தம் காலத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப்ப விரித்துக்கொண்ட பொருளின் படி ஆரியர் அல்லாத வகுப்பினர் தமிழ் வேந்தர்கள் ஆரசாச்சி செய்த இறுதி காலம் கி.பி 12;-ம் நூற்றாண்டு வரை உள்ள எந்த நூலிலும் திராவிடம் பற்றிய குறிப்பு துளியேனும் இல்லை. 16ம் நூற்றாண்டில் நாலயிர திவ்விய பிரபந்த உரையில் தான் முதன் முதலில் திராவிடம் என்றசொல் தமிழ் மொழியில் பயின்று வந்துள்ளது.

துணை நூல் 1) மா.சே விக்டர்- தொல் தமிழரின் வழுக்குகளும் வழக்காறுகளும் 2) கால்டு வெல். -- திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்;. கோவேந்தன், ரத்தினம் மொழி பெயர்ப்பு.; பழனியப்பன பதிப்பகம்;. 3) திராவிடனா? தமிழனா?-- இணையதளம் 4) புராதாண இந்தியாவின் 56 தேசங்கள்.