பயனர் பேச்சு:Maruthupandi

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

""தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்திற்கும் இடையில் ஒன்றே ஒன்று இருக்கிறது பாஸ். அது சக்ஸஸ். உங்களுக்கு சக்ஸஸ் கிடைத்தால் அதை தன்னம்பிக்கை என்று சொல்லி கொண்டாடுவார்கள். சக்ஸஸ் கிடைக்கவில்லையென்றால் போதும், அதை திமிர் என்று சிம்பிளாக முடித்துவிடுவார்கள். இதுதான் பாஸ் யாதார்த்தம். இதையும் நான் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறேன். என்று பேச ஆரம்பிக்கிறார் "அசல்' தல.


பட்டர் ஸ்காட்ச் நிற கன்னங்களில் படர்ந்திருக்கிறது ஷார்ப்பான சைடு பர்ன்ஸ். "தல'யின் கேரக்டரை போலவே விறைப்பாக நிற்கிறது ஃபங்கி ஹேர்ஸ்டைல். காதுகளில் மின்னுகிறது இயர் ரிங்ஸ். முன்பைவிட இன்னும் ஹேண்ட்சம்மாக இருக்கிறார்.


அசல் படம் பற்றி?


""ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போது அதைப்பற்றி முழுவதுமாக சொல்வது சரியானதாக இருக்காது. சிம்பிளாக சொல்லவேண்டுமென்றால் நான்தான் அசல்! மற்றவை வெண் திரையில். சிவாஜி புரொடக்ஷனில் நடிப்பது எனக்குப் பெரிய கௌரவம். ஒவ்வொரு முறையும் அன்னை இல்லத்திற்கு நான் செல்லும்போது அவர்கள் என்னை வரவேற்று உபசரிக்கும்விதம், காட்டும் அன்பு, பணிவு இதெல்லாம் அன்னை இல்லத்தின் பாரம்பரித்தைக் காட்டும்.


அஜித் என்றாலே ஒரு சீரியஸான பர்ஸனாலிட்டியாகவே அடையாளப்படுத்தப்படுகிறீர்கள். உங்களுடைய லைட்டர் சைட் ஏதேனும் இருக்கிறதா?

"" (ஹா....ஹா... என வாய்விட்டு சிரிக்கிறார்) பாஸ் நான் சூப்பராக சமைப்பேன். இது பல பேருக்குத் தெரியாது. ஷாலினியிடம் கேட்டால் "குட்' என்று தனி சர்டிஃபிகேட்டே கொடுப்பார். அந்தளவுக்கு நம்ம சமையல் கமகமக்கும். கார் மெக்கானிக்காவும், எக்ஸ்போர்ட் கம்பெனியிலும் வேலை பார்த்த காலங்களில் எப்போதும் என்னுடைய நளபாகம்தான். என்னோட பேச்சிலர் சமையலுக்கு ஷாலினி தீவிர ரசிகை. இப்போது "அசல்' ஷுட்டிங்கிலும் செல்ஃப் குக்கிங்தான். இப்போது டயட்டில் இருப்பதால் வேக வைத்த காய்கறி மட்டுமே சாப்பிடுகிறேன்.


ஷீரடி சாய்பாபா கோயில், திருவனந்தபுரம் தர்ஹா என நீண்டதூரப் பயணமாக எங்குச் சென்றாலும் செல்ஃப் டிரைவிங் செய்கிறீர்களே... கார் ரேஸிங்கை தொடர முடியவில்லை என்ற ஆதங்கமா?


""ஆதங்கம் என்பதெல்லாம் இல்லை. ஏழெட்டு மணிநேரம் பயணங்களில்போது ட்ரெய்னில் போகலாம். யாரோ ஒருத்தர் ட்ரெய்னை ஓட்டுவார். அந்த ஏழெட்டு மணி நேரமும் என்னால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. வெறுமனே எப்படி உட்கார முடியும்? அதனால்தான் டிரைவிங்கையாவது செய்யலாமே என்று நினைக்கிற�ன்.


உங்கள் மீது வைக்கும் கடுமையான விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

--Maruthupandi 14:46, 16 ஜூலை 2009 (UTC)

</gallery> ""இப்பொழுதெல்லாம் என்னைப் பற்றி யாராவது தவறாக அபிப்பிராயம் சொன்னால், நான் அதற்குத் தேவையில்லாமல் விளக்கம் கொடுப்பது இல்லை. நமக்கு சிலரைப் பார்த்தாலே பிடிக்காது. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கூட காரணமே இல்லாமல் நமக்கு பிடிக்காது. இதேபோல் என்னையும் சில பேருக்கு பிடிக்காமல் போகலாம். அதில் தவறில்லை. ஆனாலும் நான் அவர்களை மதிக்கிறேன். நான் எவ்வளவு நல்லது பண்ணினாலும் சிலரை சந்தோஷப்படுத்த முடியாது. இது என் வாழ்க்கையில் நான் ஏற்றுக்கொண்ட விஷயம். அதனால் தற்போது டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்.


நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாக ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறதே....?


""என் ரசிகர்களுடனும் நேரடித் தொடர்புடன் இருக்க விரும்புகிறேன். அதனால்தான் என் ரசிகர் மன்றங்களை சீரமைக்கும் பணிகளை ஆரம்பித்திருக்கிறேன். இது ஒரு வகையில் ஸ்டாக் எடுப்பது போலதான். இந்த முயற்சிகளில் இறங்கியதால், நானும் அரசியலுக்கு வரப் போகிறேன் என்று பேச்சுக் கிளம்பியதில் ஆச்சர்யமில்லை. உண்மையில் தேர்தலின் போது வரிசையில் நின்று ஓட்டுப்போடுகிற சராசரி மனிதன் நான். அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. இந்தப் பேட்டிகூட நான் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலை, அனுபவம் இன்றைக்குள்ள மெச்சூரிட்டியைப் பொருத்து அமையும். இன்னும் ஒரு வருஷத்திற்குப்பிறகு நீங்களே பேட்டி எடுத்தால் அந்த பேட்டி அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி இருக்கும். ஆனால் நான் என்றைக்கும், எதிலும் பின்வாங்க மாட்டேன். I Will not back track. நான் ஒரு முடிவு எடுத்தால் அது சரியோ தவறோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வேன். நம் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுகிற அஜித்திடமிருந்து உறுதியாக வெளிப்படுகின்றன வார்த்தைகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Maruthupandi&oldid=405394" இலிருந்து மீள்விக்கப்பட்டது