பயனர் பேச்சு:Manjusindhu/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                '''உலக அதிசயம்''
                                                
                                                
அதிசயம் அமைவிடம் ஆண்டு
தாஜ் மகால் ஆக்ரா, உத்தரப் பிரதேசம், இந்தியா கிபி 1632
கிசா நெக்ரோபோலிசு கிசா, எகிப்து கிமு 2589
சீனப் பெருஞ் சுவர் சீன மக்கள் குடியரசு கிமு 700
பெட்ரா ஜோர்தான் கிமு 312
கொலோசியம் (ரோம்) உரோமை நகரம், இத்தாலு கிபி 70
சிச்சென் இட்சா மெக்சிக்கு கிபி 600
மச்சு பிச்சு பெரு கிபி 1438
மீட்பரான கிறித்து மீட்பரான கிறித்து கிபி 1926

தாஜ்மஹால்'


தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது.

தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது.

1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின.

கிசாவின் பெரிய பிரமிடு

கிசாவின் பெரிய பிரமீடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். கிசா பிரமிடு 2.3 மில்லியன் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அருகில் உள்ள கற்க்குவாரியில் இருந்து எடுத்துவரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது.

இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 - 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. பிராமிட் ஹிம்ஹோடப் என்பவரால் உருவாக்கப்பட்டது.இவர் எல்லா கல்வி துறைகளிலும் சிறந்து விளங்கினார்.அரசர்களுக்கு ஆலோசகராகவும் பணிப்புரிந்துள்ளார்.

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 எக்டேர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது.

சீனப் பெருஞ் சுவர்

சீனா ஒரு "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்துமங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும்.

இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள்பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது.

பெட்ரா

பெட்ரா என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.[2] இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. கோலோஸ்ஸியம் என்ற பெயர் நீரோவின் ஒரு பெரிய சிலையின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது [4] (நீரோவின் சிலை ரோடஸின் கொலோசஸின் பெயரால் அழைக்கப்படுகிறது). இந்த சிலை பின்னர் ஹெரோயோஸ் (சோல்) அல்லது அப்போலோ போன்ற தோற்றத்திலும், சூரியக் கிரீடத்தைச் சேர்ப்பதன் மூலம் சூரியன் கடவுளாகவும், நீரோவுக்கு பின்வந்தவர்களால் மாற்றியமைக்கப்பட்டது,

கொலோசியம்

கொலோசியம் என்பது ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் என்றும் அழைக்கப்படுவது, இந்த அரங்கம், 50,000 முதல் 80,000 மக்கள்வரை இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.[5][6] எனினும் இதில் சராசரியாக சுமார் 65,000 பார்வையாளர்களைக் கொண்டுருக்கலாம்;[7][8] கொலோசியமானது தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும்.

கோசோசியம் இத்தாலியப் பதிப்பைக்கொண்ட ஐந்து செண்ட் யூரோ நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.கோசோசியம் இத்தாலியப் பதிப்பைக்கொண்ட ஐந்து செண்ட் யூரோ நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் நீரோவின் ஆட்சியைத் தொடர்ந்துவந்த ஃப்ளாவியன் வம்சத்தின் பேரரசர்களால் கட்டப்பட்டது.[10] இந்த பெயர் இன்னும் நவீன ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பொதுவாக இந்த அமைப்பு கொலோசியம் என்று அழைக்கப்படுகிறது.

சிச்சென் இட்சா

சிச்சென் இட்சா (Chichen Itza) என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரிகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயன் நாகரிகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான்.

மச்சு பிச்சு

மச்சு பிச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்[1]. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.

இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது[2].

1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. மீட்பரான கிறிஸ்து (சிலை)

மீட்பர் கிறிஸ்து (போர்த்துக்கேய மொழியில்: Cristo Redentor) என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 metres (31 ft) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 metres (130 ft) உயரமும், 30 metres (98 ft) அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700-metre (2,300 ft) உயரமுள்ள கொர்கொவாடோ (Corcovado) மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது. கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது.[1] இது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும் (soapstone) 1922-இல் இருந்து 1931-குள் கட்டட்ப்பட்டதாகும்.[2][3]