உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Bharathigeologist

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜியாலஜி (GEOLOGY )

பூமியில் உள்ள திடப்பொருட்கள் பற்றிய அறிவியல் படிப்பே ஜியாலஜி. கற்கள், பாறைகள், மண் ஆகியவற்றின் தோற்றம், இயற்பியல் தன்மை ஆகியவை குறித்து இதில் கற்றுத்தரப்படுகிறது. பூமி, பூமியில் உள்ள பருப்பொருட்கள், அவற்றின் வடிவம், அவற்றின் மீதான இயக்கம் குறித்த படிப்பாக ஜியாலஜியை கூறலாம். கால மாற்றத்தில் புவிப்பொருட்கள், உயிரினங்கள், கட்டமைப்புகள் எவ்வாறு மாற்றமடைந்தன என்பது இதில் முக்கியமான அங்கம். நிலச்சரிவு, பூகம்பம், எரிமலை வெடிப்பு போன்றவற்றால் பூமியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதன் மூலமாக பாதிக்கப்பட கூடிய இடங்களை கண்டறிந்து, அங்கு முக்கியமான கட்டமைப்புகள் கட்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. கடந்த காலத்தில் எரிமலைக் குழம்பு சென்ற பாதைகளை குறித்து நன்கு அறிந்த ஜியாலஜிஸ்டால் பின்னர் எரிமலை வெடிக்கும் போது எந்த பகுதி ஆபத்தை சந்திக்கும் என்பதை கணிக்க முடியும். கண்டங்களில் ஒரங்களில் தாழ்வான கடல் பகுதிகளில் உள்ள உயிர்ம பொருட்களை ஆராய்வதன் மூலமாக இயற்கை வாயு மற்றும் எண்ணெய் கிடைக்கும் இடத்தை பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். கடற்கரையை ஒட்டியுள்ள பாறைகளை வகைகளையும் அறிகின்றனர். இதன் மூலமாக எண்ணெய் மற்றும் இயற்கை வாயு பெற உதவும் பாறைகளை அறிய முடிகிறது. ஜியாலஜி மிகவும் சுவாரஸ்யமான, வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள துறை. சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனங்கள், இயற்கை வள நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. பேலன்டாலஜி, மினராலஜி, ஹைட்ராலஜி, வல்கனாலஜி போன்ற பிரிவுகளிலும் படிப்பை தொடரலாம். மேற்பார்வை, ஆய்வு, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் என பல்வேறு ‘ஜியாலஜி’ எனும் சொல் கிரேக்க மொழியிலிருந்து தோன்றியது. பூமியின் கட்டமைப்பு, இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், வரலாறு, உருவான வழிமுறைகள் போன்றவற்றை ஆராய்ந்து அவற்றில் ஆய்வு மேற்கொள்ளும் துறை ‘நிலவியல்’ எனப்படும். இது புவியை <உருவாக்கிய திட மற்றும் திரவப்பொருட்களை படிக்கும் அறிவியல் துறையாகும். இத்துறையின் அறிவினைக் கொண்டு புவியில் இருக்கும் நிலக்கரி, இரும்பு, செம்பு, யுரேனியம், உள்ளிட்ட இயற்கை வளங்கள் அடையாளம் காணப்படுகிறது. நிலவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி சூரிய குடும்பத்திலுள்ள கோள்கள் ஆராயப்படுகின்றன. இதன் பெயர் ‘விண்நிலவியல்’ (அஸ்ட்டிராலஜி) வரலாறு ‘தியோபிரேஸ்டஸ்’ என்பவர் எழுதிய பெரிலித்தோன் என்ற புத்தகமே பாறைகள் பற்றிய அதிகாரப்பூர்வமான நூலாக இருந்தது. இவர் அரிஸ்டாட்டிலின் சிஷ்யனாவார். 1788 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஹூட்டன் என்பவர் பூமியின் கோட்பாடுகள் பற்றிய கட்டுரை வெளியிட்டார். இவர் முதல் ‘நவீன நிலவியலாளர்’ என்று அழைக்கப்பட்டார். 1769 - 1839க்கு இடைப்பட்ட காலங்களில் வில்லியம் ஸ்மித் என்பவர் புவியின் அமைப்பு, பாறைப்படிவங்கள் ஆகியவற்றின் வரைபடங்களை வரைந்ததுடன் அவற்றில் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். நிலவியல் துறையானது 19ம் நூற்றாண்டில் பெரும் மாற்றங்கள் கண்டது. புவியின் வயதை பற்றிய ஆய்வுகள் இந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்டன. 20ஆம் நூற்றாண்டில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1960களில் புவித் தட்டின் கட்டமைப்பு ( பிளேட் டெக்டானிக்ஸ்) என்ற கோட்பாடு உருவானது முக்கிய நிகழ்வாகும். இதன் பின் இத்துறை பெரும் வளர்ச்சி பெற்றது.

பூமி, கடல், வளிமண்டலம் ஆகியவற்றோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களைப் பற்றிப் படிக்கும் பிரிவு புவி அறிவியல் அல்லது ஜியோ சயின்ஸ் என அழைக்கப்படுகிறது. பூமியிலிருந்தே நாம் அனைத்து வளங்களையும் பெறுவதாலும் இவை கிடைப்பது குறிப்பிட்ட அளவில் என்பதாலும் இவை தொடர்பான படிப்புக்கான முக்கியத்துவம் நாளாக நாளாக அதிகரித்து வருகிறது.

ஜியோ சயின்ஸ் துறையானது எண்ணெய், இயற்கை எரிவாயு, எரிபொருள், மினரல், நீர், மண் போன்ற வளங்களை ஆய்வு செய்வது, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது, இயற்கையின் சீற்றங்களான நில நடுக்கம், மண் சரிவு போன்றவற்றிலிருந்து புவியைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களில் தனது கவனத்தை செலுத்துகிறது.

நிலவியலின் வழிமுறைகள் புவியை ஆய்வு செய்வதற்கும், அவற்றின் வரலாறை அறிவதற்கும் நிலவியல் வல்லுனர்கள் களப்பணி , ஆய்வகப்பணி போன்ற வழிமுறைகளை கையாளுகின்றனர். இவ்விரு வழிமுறைகளும் பல துறைகளை உள்ளடக்கியது.

பணித் தன்மை ஜியோ சயின்டிஸ்டுகளாகப் பணி புரிபவர்கள் மனித இனம், தகவல், புதிய சிந்தனைகள், தொழில்நுட்பம் போன்றவற்றை இணைத்துபணி புரிகிறார்கள். ஆய்வுக் கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் இவர்கள் பணிபுரிகிறார்க்ள. பணி நிமித்தமாக வெளியிடங்களுக்குச் சென்று பணி புரிவதும் கட்டாயத் தேவையாக இருக்கிறது. இதே போல மாறுபட்ட பருவநிலைகளில் பணி புரிவது, நிலநடுக்கம், எரிமலை இருக்கும் பகுதிகளில் பணி புரிவது போன்ற அபாயகரமான சூழல்களையும் சந்தித்து தகவல்களை சேமிப்பது இவர்களின் பணித் தன்மையாக உள்ளது.

துறைப் பிரிவுகள் ஜியோ சயின்ஸ் துறையில் பல்வேறு மாறுபட்ட உட்பிரிவுகள் உள்ளன. புவியின் இயற்கைத் தோற்றங்களைப் படிப்பதற்காக பாறைகள், மண் போன்றவற்றைத் தோண்டி ஆய்வு செய்வது இதில் ஒன்று. வளி மண்டலம், ஹைட்ரோஸ்பியர், பூமி போன்றவற்றின் தன்மையை அறிவதற்காக ஜியோசயின்டிஸ்டுகள் இயற்பியல், கணிதம், வேதியியல் போன்ற தத்துவங்களை பயன்படுத்துகிறார்கள். நிலத்தடி நீரிலுள்ள வேதிப் பொருட்கள் மற்றும் கனிமங்களின் அளவையும் இவர்களே ஆய்வு செய்கிறார்கள்.

ஹைட்ரோஜியாலஜிஸ்டுகள் நிலத்தடி நீரையும் ஓசனோகிராபர்கள் கடல் தொடர்புடைய ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். பெட்ரோலியம் ஜியாலஜிஸ்டுகள் இயற்கை எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பிடம் மற்றும் உற்பத்தி குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். சீஸ்மாலஜிஸ்டுகள் உபகரணங்களின் உதவியோடு நில நடுக்கம் மற்றும் அது தொடர்பான காரணங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.

கடுமையான தட்பவெப்பத்தில் பணி புரிவது, பூமிக்கு அடியில் பணி புரிவது போன்ற சவாலான பணிகள் நிறைந்த இத் துறையில் பணியாற்ற மிக நல்ல உடல் தகுதி பெற்றிருப்பது அவசியத் தேவைகளாகும். மேலும் குழு மனப்பான்மை, நிர்வாகத் திறன் மற்றும் தலைமைப் பண்புகளைப் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது.

களப்பணி களப்பணி கீழ்கண்ட துறைகளை உள்ளடக்கியது.

  • நிலவியல் தொடர்பான வரைபடம் வரைதல்
  • டோபோகிராபி எனப்படும் இடக்கிடப்பியல் சிறப்புகளை அறிதல்
  • புவிஇயற்பியல் ஆராய்தல்
  • நில அடுக்குகளை ஆராயும் ஸ்டிராடிகிராபி
  • நிலவியல் சார்ந்த உயிர்வேதியல் மற்றும் நுண்ணுயிரியல்
  • பழம்பொருட்களை கண்டறியும் மற்றும் ஆய்வு செய்யும் ‘பேல்ஆன்டாலஜி’
  • புவியின் காலத்தை கணக்கிடும் ‘ஜியோ குரோனாலஜி’ மற்றும் ‘தெர்மோ குரோனாலஜி’
  • பனிப்பாறைகளின் தன்மைகளையும் அதன் இயக்கத்தையும் கணக்கிடும் ‘கிளாசியாலஜி’

ஆய்வகப்பணி ஆய்வகப்பணி கீழ்கண்ட துறைகளை உள்ளடக்கியது.

  • பாறைகள் ஆய்வு (பெட்ராலஜி)
  • கோள்கள் நிலவியல் (பிளானட்டரி ஜியாலஜி)
  • அப்ளைடு ஜியாலஜி
  • சுரங்க நிலவியல் (

என்ன படிக்கலாம் சில பள்ளிகளில் பிளஸ் 2 நிலையிலேயே ஜியாலஜி ஒரு பாடமாக உள்ளது. பி.எஸ்சி.,யில் ஜியாலஜி படிக்க +2வல் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் படித்திருக்க வேண்டும். நாடெங்கும் 70 பல்கலைக்கழகங்களில் இப் படிப்பு உள்ளது. பிளஸ் 2வுக்குப் பின் அப்ளைட் ஜியாலஜி, பி.எஸ்சி., ஜியோகெமிஸ்ட்ரி, பி.எஸ்சி., ஜியோபிசிக்ஸ், 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகள் இத் துறையில் நடத்தப்படுகின்றன. இதை தொழில்நுட்பப் படிப்பாக மேற்கொள்ள நினைத்தால் பட்ட மேற்படிப்பாக இதை முடிக்க வேண்டும். இப்படிப்பில் களப்பணி என்பது அடிப்படையாகும். இத்துறையில் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்ற பிஎச்.டி., அவசியம். இத்துறையில் அப்ளைட் ஹைட்ராலஜி, அப்ளைட் ஜியோ கெமிஸ்ட்ரி, அப்ளைட் குவார்ட்டர்னரி ஜியாலஜி, என்விரான்மென்டல் ஜியாலஜி போன்ற பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

துறை எதிர்காலம் யு.பி.எஸ்.சி., நடத்திடும் சிவில் சர்விசஸ் மற்றும் இந்திய வனச் சேவைத் தேர்வுகளில் இத் துறையில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு தகுதி பெற்றிருப்பவர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த குரூப் ஏ அதிகாரிகளாகப் பணியாற்றலாம். ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் தேர்வில் ஜியாலஜி, அப்ளைட் ஜியாலஜி, மரைன் ஜியாலஜி, மினரல் எக்ஸ்புளோரேஷன் இவற்றில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர் கலந்து கொள்ளலாம். இதில் ஆங்கிலத் திறன், பாடத்திறன் பரிசோதிக்கப்படுகின்றன. நேர்காணலும் உண்டு. இவை பற்றிய தகவல்களை தீதீதீ.தணீண்ஞி.ஞ்ணிதி.டிண தளத்தில் அறியலாம்.

ஜியோ சயின்டிஸ்டுகளுக்கு பிற இடங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. இந்தியன் பீரோ ஆப் மைன்ஸ், மினரல் எக்ஸ்புளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடட், இந்திய வானிலை மையம், ஓ.என்.ஜி.சி., ஜெம் இண்டஸ்ட்ரி, கட்டுமானத் துறை, கனிம ஆய்வு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் என எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. மைனிங் ஜியாலஜி)

  • பெட்ரோலியம் நிலவியல்
  • இன்ஜினியரிங் நிலவியல்
  • ஹைட்ராலஜி

படிப்புகள் இத்துறையில் இளநிலை மற்றும் முதுகலைப் படிப்புகள் உள்ளன. பி.எஸ்சி., ஜியாலஜி எம்.எஸ்சி.,ஜியாலஜி எம்.எஸ்சி., அப்ளைடு ஜியாலஜி எம்.டெக்.,ஜியாலஜி எம்.பில்.,ஜியாலஜி

கல்வி நிறுவனங்கள் இத்துறையின் சிறந்த கல்வி நிறுவனங்கள் சில இங்கே குறிப்பிடப்படுகின்றன. பயிலும் நிறுவனங்கள்: டில்லி பல்கலைக்கழகம், புதுடில்லி சென்னை பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை வ.உ.சிதம்பரம் கல்லூரி, தூத்துக்குடி பிரெசிடென்சி கல்லூரி, சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் ஸ்ரீமீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, மதுரை பெரியார் பல்கலைக்கழகம், சேலம் ISM University, Dhanbad Indian Institute of Technology, Kharagpur Indian Institute of Technology, Roorkee University of Pune, Pune Cochin University of Science & Technology, Kochi.

வேலைவாய்ப்புகள் நிலவியல் வல்லுனர்களின் சம்பளம் அனுபவத்தையும், பதவியையும் பொறுத்து ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரை அமையும். இத்துறை பயின்றவர்கள் யு.பி.எஸ்.சி.,தேர்வின் மூலம் மத்திய நிலத்தடி நீர் வாரியம், ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா போன்ற அரசு நிறுவனங்களில் பணியில் அமரலாம். மேலும் நிலக்கரி சுரங்கம், இந்துஸ்தான் சிங்க், ஓ.என்.ஜி.சி.,, மினரல் எக்ஸ்புளோரேஷன் அதாரிட்டி போன்ற நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொறுப்புகளில் பணிவாய்ப்புகள் ஜியாலஜிட்களுக்கு கிடைக்கிறது.


OFFICE:

P.Sivanbharathi Ramachandran C/o-Kalinga Mining Corporation At: Jalahari, Po: Jajang Dist: Keonjhar (Odisha) Pin-758052 E-mail:bharathigeologist@gmail.com 09994282391.

House :

P.S.Bharathi @ Raja Mainroad,Maruthupuram Parankuntrapuram Post Veerakeralampudur TK Tirunelveli District Tamilnadu - 627859 09994282391.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bharathigeologist&oldid=1093924" இலிருந்து மீள்விக்கப்பட்டது