பயனர் பேச்சு:50.73.100.10

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
'கருவி' தோன்றியது இப்படியோ?

தமிழ்ச் செல்வி ஒருவர் கருவி என்ற சொல் குறிப்பாக ஒன்றையும் சுட்டிக்காட்டவில்லையே என்பது கேட்டேன். உணர்ந்து பார்த்தபோது, அதற்கு இப்படி ஒர் இலக்கணம் இருக்கலாம் என்று தோன்றியது.

கருவி என்பது ஓர் ஆகுபெயராக இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் ஓர் உயிர்மொழி (சோற்றுமொழி அன்று) என்று உணரும்போது இந்த ஆகுபெயரில் நம்மொழியின் உயிர்த் துடிப்பைக் காணமுடிந்தது.

கருவியின் இலக்கணத்தை 'ஓர் எண்ணக்கரு (கரு+வி) விரிவடைந்து , பயன் நாடி, உள்ளதென ஆதல்'   என்று கொள்வோமாயின் அதை 'முறை ஆகுபெயர்' எனலாமே!    எண்ணமுண்டாகும் முறையில் (எண்ணக்கரு விரிவடைதல்) எல்லாக்கருவிகளும் பிறப்பனவன்றோ! கல்லும் புல்லும் மனிதனுக்கும் முன்பு தோன்றியவை. ஆனால் பயன் கருதி அவன் கைபட்டு அவன் எண்ணக் கருவின் விரிவினால் பயனுடைய கத்தியாகவும் சுத்தியாகவும் ஆயினவே!  வல்லவன் கைப்பட்ட புல்லும் இவ்வாரு - ஆயுதமாகக் - கருவியானது இந்தக்கருத்தைத் தெளிவாக்குவது பாருங்கள்.

முதலில் தோன்றிய கருவிகள் உருவுடைய இவையன்றோ! கருவிகள் உருவாயும், அருவாயும், அரு-உருவாயும் இருப்பதைத்தான் 'உள்ளதென ஆதல்' என்று மேலே சொல்லப்பட்டது.

முதலில் தோன்றிய கருவிகளின் உருவம் ஆய்ந்தால், அவை உருவுடன் இருப்பது தெளிவு. மனித எண்ண வளர்ச்சியினால் கருவிகளும் வளர்ந்து உருவாயும் (கத்தி சுத்தி எல்லாம்) அரு உருவாயும் (உ: மென்பொருள்) அருவாயும் (உ: மனத்தத்துவத்தில் வரும் எண்ணக்கருவிகள் ) இன்று மிளிர்கின்றனவே!

இப்போது மனிதனின் எண்ணங்கள் மிக வளர்ந்து கருவிகளும் வளர்ந்து 'கருவிக்கூட்டங்களாக' உண்டாகி அவர் நலம் கூட்டுவது தெளிவு. பல கருவிகளை ஒன்றாக்கிப் புதுக் கருவிகள் உண்டாவதும் மேற்காட்டிய இலக்கண ஆகுபெயராக அமைவது தெளிவு.


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:50.73.100.10&oldid=2031675" இலிருந்து மீள்விக்கப்பட்டது