பயனர் பேச்சு:பொ.சங்கர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறப்பு 1986 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் நல்லியம் பாளையம் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர்; பொன்னுசாமி- இந்திராணி இளமைக்காலம்

    ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பக்கல்வியையும், மேல்நிலைக் கல்வியையும் பயின்றவர். கோயமுத்தூர்  பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரியில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை பயின்றவர்.  கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர்.  சுற்றுச்சூழல், வரலாறு , தொல்லியல் போன்ற துறைகளில் மிகு ஆர்வமிக்கவர். கொங்கு நாட்டின் சிறப்பும் வேளாண்மையும் , மண்ணின் மைந்தர்கள் போன்றவை இவர் எழுதி வெளியிட்ட நூல்கள். 

தமிழகத் தொல்லியல் வரலாறு என்னும் தலைப்பில் மாபெரும் தொகுப்புப் பணியைத் தற்போது செய்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பொ.சங்கர்&oldid=3825061" இலிருந்து மீள்விக்கப்பட்டது