பயனர் பேச்சு:செல்வா/பேருள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது வ்க்சனரிக்குப் பொருத்தமாக உள்ளது. நீக்குவதாயின் அதன்முன் செல்வாவின் கருத்தையும் அறிவது நல்லது --கோபி 18:40, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, இதனையும் விக்சனரிக்கு நகர்த்தியபின் நீக்கலாம் என்றே படுகிறது. --கோபி 18:51, 19 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

செல்வா, விக்சனரிக்கு நகர்த்தும் முன் இந்த சொல் குறித்த விளக்கத்தையும் தந்தீர்களானால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள எந்த சொல்லுக்கு இணையானது இச்சொல்? பெரிய பொருள் பேருள் என்பது மிகவும் பரந்துபட்ட வரையறையாக இருக்கிறது போல் படுகிறது. அப்படியென்றால், இதனை நிலத்தில் உள்ள சொற்களுக்கு பயன்படுத்தலாமா? பொருள் என்ற சொல்லின் கடைசியில் உள்ள உள் என்ற அசையை(?) பிரித்து இச்சொல் உருவாக்கப்பட்டதா? இச்சொல் தமிழ் விக்கிபீடியாவில் தான் முதலில் பயன்படுத்தப்படுகிறதா அல்லது வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதா?--ரவி 20:21, 19 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]


ரவி, பேருள் என்னும் சொல் என்னால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு சொல். பொருள் என்னும் சொல் தமிழில் மிகவும் சிறப்பான ஒரு சொல். பொருள் என்றால் கடவுள். பொருள் என்றால் சொல் உணர்த்தும் பொருள் (அர்த்தம்), பொருள் என்றால் கல், மண் போன்ற உயிரற்றப் புறப்பொருள். பொருள் என்றால் செல்வம், பணம். இப்படி மிகச்சிறப்பாக அமைந்திருப்பினும், மிக மிகப்பெரிய புறப்பொருளை (அளப்பரிய மிகப் பெரும் பொருளை)க் குறிக்க பேருள் என்னும் சொல்லை ஆக்கினேன். ஏனெனில், வெறும் கல், பாறை, மண், கண்ணாடி, சிப்பி போன்றில்லாமல், மனதாலும் கருத்தாலும் உட்கொளவே மிக அரிதான அளப்பரிய மிகப்பெரிய பொருள்களை குறிக்க ஒரு சொல் வேண்டும் என்ற உந்துதலினால் உருவான ஒரு சொல். பேரண்டத்தில் உள்ள நாள்மீன் கூட்டத்தில் காணப்படும் பேருலகங்களைக் குறிக்கப் பயன்படுமாறு ஆக்கப்பட்ட சொல். இச்சொல் ஏதும் ஆங்கிலச்சொல்லுக்கு இணையாக இருக்குமாறு ஆக்கபடவில்லை. -- C.R.Selvakumar 02:36, 20 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

செல்வா, கலைக்களஞ்சியத்தில் அனைத்து கட்டுரைகளும் விரிவாக இருக்க அவசியமில்லை தான். ஆனால், தலைப்பையோ சொல்லையோ மட்டும் விளக்குவதற்கு தனிக்கட்டுரைகள் தேவையில்லை. ஒரு வேளை, பேருள் என்ற சொல் உருவாக்கம், பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி ஆவணப்படுத்தப்படக்கூடிய விரிவாக எழுதக்கூடிய விதயங்கள் இருந்தால் தனிப்பக்கம் உருவாக்கலாம். இல்லையென்றால், இச்சொல் வரும் கட்டுரைகளில் அடிக்குறிப்பாகவோ அடைப்புகுறிகளுக்குள்ளோ அருஞ்சொற்பொருள் பட்டியலாகவோ தரலாம். எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச்சொற்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது. அது போலே, எல்லா தமிழ்ச்சொற்களுக்கும் ஆங்கிலச் சொற்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்க கூடாது. ஒரு வேளை இருந்தால், இவ்விதயம் குறித்து மேலும் அறியவும் கட்டுரையை விரிவாக்கவும் உதவும் என்ற நோக்கில் தான் உங்களிடம் கேட்டேன். பேருள் என்பதை celestial body என்பது போல் பிழையாகப் புரிந்து வைத்திருந்தேன். இப்பொழுது திருத்திக் கொண்டேன். பொருள் என்று சொல்லுக்கு உருவாக்க logic ஏதும் இருக்கிறதா? பொருண்மை உடையது பொருள் என்பது போல் புரிந்து கொள்ளலாமா? இது போல் இராம. கி அவர்களின் வலைப்பதிவில் படித்த நினைவு. வழக்கமாக பெரிய+ஊர்=பேரூர் என்பது போல் தான் சொற்கள் புணரும். அதனால் பெரிய+பொருள்=பெரும்பொருள் என்று தான் வரும். ஆனால், இப்படி புணர்ச்சி விதிகளை கொண்டன்றி, நீங்கள் நேரடியாகவே புதிய சொல்லாகத் தான் இதை உருவாக்கி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் (பொருண்மை உள்ளது பொருள் - > பெரிதாக உள்ளது பேருள்? பெரிய+உள்=பேருள்?) மனதாலும் கருத்தாலும் பெரிய பொருள் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் subjective விதயம். இந்த பேருளை விண்வெளிப் பொருட்களுக்கு மட்டும் தான் குறிக்கப் பயன்படுத்த வேண்டுமா? எந்தெந்த அளவுகள், எந்தெந்த பொருட்களுக்கு பயன்படுத்த வேண்டும்? இல்லை, பூமியை விட பெரிதானது எல்லாம் பேருளா? இல்லை, எதை விட பெரியவற்றை பேருள் என்று அழைப்பது. சில சமயம் உங்களிடம் துணிந்து ஐயங்களை கேட்பதற்கு தயக்கமாக இருக்கிறது..(என் அறியாமை, உங்கள் அனுபவம் காரணமாக..)..இருந்தாலும், வழக்கம் போல் கனிவுடன் மறுமொழி அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். --ரவி 13:42, 20 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

ரவி, இக்குறுங்கட்டுரையை விரிவாக்க இருக்கிறேன். விளக்கங்களும் தர இருக்கிறேன். இதனை, நீக்க வேண்டாம் என வேண்டுகிறேன். ஒரு கிழமை காலக்கெடு மிகக் குறைவு. இப்படி வலியுறுத்துவது சரியில்லை. --C.R.Selvakumar 18:04, 22 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா[பதிலளி]

செல்வா, எப்போதாவது தளத்துக்கு வந்து போகும் அல்லது வராமலே போகும் பயனர்கள் தொடங்கிய கட்டுரைகளுக்கு மட்டுமே இக்காலக்கெடுவை பின்பற்றுகிறோம். அதுவும், இயன்ற அளவு அவற்றை அழிக்காமல் அவற்றை மேம்படுத்தவே முனைகிறோம். மற்றபடி, மயூரனாதன் மற்றும் உங்களைப் போன்றோர் உருவாக்கிய கட்டுரைகளில் இவ்வார்ப்புரு இடுவது ஒரு கவன ஈர்ப்புக்காகவே. ஒரு வார காலத்துக்குள் இல்லாவிட்டாலும், முன்னுரிமை கொடுத்து இக்கட்டுரையை மேம்படுத்துமாறு வேண்டுகிறேன். வெறும் பொருள் மட்டும் தரும் கட்டுரையாக இருந்ததாலே நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது. மாதிகை கட்டுரையை போல் இக்கட்டுரையையும் நீங்கள் விரிவாக்குவீர்கள் என்றால் வரவேற்புக்குரியதே. நன்றி--ரவி 19:02, 22 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]