பயனர்:Vishwarajar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[haiu]தமிழ் ஹைக்கூ தோற்றமும் வளர்ச்சியும்!

http://www.madrasmusings.com/vol-25-no-14/the-fathers-of-tamil-childrens-writing/கன்னிக்கோவில் இராஜா


தமிழ் இலக்கியம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. சங்கங்கள் வைத்து மொழியை வளர்த்தவர்கள் தமிழர்கள்தான் முதன்மையானவர்கள். மரபுக் கவிதை, வசனக்கவிதை, புதுக்கவிதை என காலமாற்றத்தில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்த வடிவம் ஹைக்கூ. இது ஹைக்கூ காலம் என்றால் மிகையாகாது. புத்தமத ஜென் தத்துவத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் ஹைக்கூ பலரையும் கவர்வதற்கு காரணம் அது குழந்தையின் அழகையும், துள்ளலையும், குறும்பையும் கொண்டதுதான். தமிழ் மொழிக்கு மரபுதான் அடிவேர் என்றாலும் புதுக்கவிதையும், வசனக் கவிதையும் கிளைகளாகவும் இலைகளாகவும் இருந்து வந்தன. ஜப்பானிலிருந்து இறக்குமதியான ஹைக்கூ கவிதைகள் மரத்தின் பூக்களைப் போன்று தமிழ்மண்ணில் பூத்துக் குலுங்கி மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. அருவியில் குளிப்பது எப்படி சுகமானது; ஹைக்கூ எழுதுவதும் அவ்வாறானதே. முதலிரண்டு வரிகளில் ஒரு எதிர்ப் பார்ப்பையும், மூன்றாம் வரியில் ஒரு இன்ப அதிர்ச்சியையும் உண்டாக்குவதே சிறந்த ஹைக்கூ. ஒரு குளத்தில் எரியப்படும் கல்லானது எப்படி பல வட்டங்களை உருவாக்குகிறதே அவ்வாறு ஒரு சிறந்த ஹைக்கூ; வாசிப்பவர் களின் மனங்களில் பல புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்பதே ஹைக்கூவின் கோட்பாடு. ஹைக்கூ... புதுக்கவிதையல்ல. ஜப்பானின் மரபுக் கவிதையானது. பதினேழு அசைகளைக் கொண்டது. மூன்றடிகளைக் கொண்ட ஹைக்கூ 5-7-5 சீர்களை கொண்டது. தமிழ் மொழில் ஓரடி ‘ஆத்திசூடி’, ஈரடி ‘திருக்குறள்’, மூவடி ‘சிந்தர்’ ஆகியவை இருக்கின்றன. மூவடி இருந்தாலும் அவை ஹைக்கூவாக ஆகிவிடுவதில்லை. கல்கத்தாவில் வெளிவந்து கொண்டிருந்த ‘மாடர்ன் ரிவ்யூ’ (Modern Review) பத்திரிகையில் கவிஞர் ‘யோநே நோகுச்சி’ (Yonenaguch) எழுதியிருந்ததின் அடிப் படையில் ‘சுதேசமித்திரன்’ (Sudesamithran) இதழில் ‘ஜப்பானிய கவிதை’ என்கிற தலைப்பில் 16-10-1916இல் ஹைக்கூ கட்டுரையை எழுதினார். அதில் இரண்டு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழி பெயர்த்திருந்தார். இதுவே தமிழுக்கு ஹைக்கூ குறித்தான முதல் அறிமுகத்தைத் தந்தது.

பருவ மழையின் புழையொலி கேட்பீர் இங்கென் கிழச் செவிகளே - பூஸோன் யோ ஸாஹோ

தீப்பட்டெரிந்தது வீழுமலரின் அமைதி யென்னே - ஹோ கூஷி

அந்தக் கட்டுரையில்... ‘வானத்துன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கை யுடனே ஒன்றாக வாழ்பவனே கவி...’ என்று எழுதிய மகாகவி பாரதியார் ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானிய கவிதையின் விசேஷத்தன்மை’ என்று நோகுச்சிப் புலவர் சொன்னதையே திரும்பக் கூறி, சிலாகித்துப் போகிறார். மகாகவி பாரதியாரை குருவாக ஏற்றுக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் தனது ‘குயில்’ இதழில் ஹைக்வ மொழிபெயர்ப்பு கவிதைகளை வெளி யிட்டார். ஆனால் இவர்கள் இருவரும் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்புக் கவிதைகளை மட்டுமே வெயிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாகவி பாரதியின் கட்டுரை வெளியாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 1966 ஜனவரியில் ‘கணையாழி’ இதழில் மீன்கள் துள்ளுகிறது ஜலத்தில் மேகங்கள் சலசலக்கின்றன

     றீ

விழுந்த மலர் கிளைக்குத் திரும்புகிறது இல்லை, அது வண்ணத்துப்பூச்சி போன்ற சில ஹைக்கூ கவிதைகளை மொழி பெயர்த்தார் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். அதே காலகட்டத்தில் 1968 அக்டோரில் ‘நடை’ இதழில் ஆங்கிலப் பேராசிரியர் சி. மணி அவர்களால் திருடன் விட்டுச் சென்றது இதுவே பலகனி நிலவு

 றீ

புதர் வெளிக்கதவு அதற்குப் பூட்டாய் இந்த நத்தை போன்ற பத்து ஹைக்கூகளை மொழிபெயர்த்தார்.

1972 ஆம் ஆண்டு ‘தீபம்’ இதழில் எழுத்தாளர் தமிழ்நாடனின் ‘ஜப்பானிய கவிதை வடிவங்கள்’ என்கிற கட்டுரையும், எழுத்தாளர் மாலன் அவர்கள் கட்டுரையும்,  ‘கண்ணதாசன்’ இதழில் 35 மொழிபெயர்ப்பு ஹைக்கூ கவிதைகளும் வெளியாகி தமிழ்க்  கவிஞர்கள் தன்பால் ஈர்த்தது. ஆனாலுங்கூட 1970க்கு பின்னரே மொழிபெயர்ப்பில்லாத தமிழ் ஹைக்கூ கவிதைகள் உருவாகின.

தமிழ் மரபுக் கவிதைகளுக்குப்பிறகு, புதுக்கவிதை மிகப் பரவலாக பரவத் தொடங்கியது. ‘வானம்பாடிக் கவிஞர்கள்’ அதனை ஓர் இயக்கமாக கொண்டு சென்றனர். “புதுக்கவிதை தமிழுக்கு தேவையில்லை” என கவிஞர்களில் ஒரு பிரிவினர் அதனை எதிர்க்கவும் தொடங்கினர். அக்காலகட்டத்தில் தனது 1974 ஆம் ஆண்டு ‘பால்வீதி’ என்கிற தொகுப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான் தனது 6 ஹைக்கூகளை எழுதியிருந்தார். அதுவே தமிழில் முதல் ஹைக்கூ கவிதைகள் என்கிற அடையாளத்தை தந்தது. ஆனாலும் 1984ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘புள்ளிப்பூக்கள்’ (றிuறீறீவீஜீஷீஷீளீளீணீறீ) என்கிற ஹைக்கூ கவிதை நூலை வெளியிட்டார் ஓவியக்கவிஞர் அமுதபாரதி அவர்கள். இதுவே தமிழில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூலாகும். இதில் வெளிவந்த அந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? என்கிற கவிதை இன்று வரை பலராலும் பாராட்டப்பெறும் கவிதையாக வலம் வருகிறது. 1984ல் புள்ளிப்பூக்கள் நூல்வெளியாகி சரியாக 30 ஆண்டுகளில் (2014) சுமார் 500 நூல்கள் வந்திருப்பது தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த சிறப்பாகும். அதுமட்டுமின்றி இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிக ஹைக்கூ நூல்கள் வெளியிடப்பட்டிருப்பதும், கவிதை எழுதுபவரின் முதல் நூலாக ஹைக்கூ நூல் வருவதும், அதிக மாணவர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதும் ஹைக்கூ கவிதைகள்தான். ஹைக்கூ என்பதை தமிழில் ‘துளிப்பா’ என்கிறோம். துளி (சிறியது) + பா (கவிதை) = துளிப்பா. 1990 ஆம் ஆண்டு டாக்டர் தி. லீலாவதி அவர்களால் ‘இதுதான் ஹைக்கூ’ என்னும் ஹைக்கூ குறித்த கட்டுரை நூல் வெளியானது. இதுவே தமிழில் வெளிவந்து முதல் ஹைக்கூ கட்டுரை நூலாகும். இதில் ஹைக்கூ குறித்த பல்வேறு செய்திகள் உள்ளடக்கி இருந்தது. இந்நூல் 1949ஆம் ஆண்டு வெளிவந்த ஆர்.எச். பிளித் அவர்களின் ஆங்கில நூலின் தழுவல் ஆகும். ஆனாலும் டாக்டர் தி. லீவாவதி அவர்கள் ‘இந்நூல் ஆர்.எச். பிளித்தின் நூலின் மொழிபெயர்ப்பு அல்ல’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 1991 டிசம்பரில் ‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ என்ற நூலை எழுத்தாளர் சுஜாதா அவர்களும், 1994ல் நெல்லை சு. முத்து அவர்கள் ‘தமிழில் ஹைக்கூ’ மற்றும் ‘புத்தாயிரம் ஹைக்கூ’ என்ற ஆய்வு நூல்களையும், 1997ஆம் ஆண்டு கவிஞர் நிர்மலா சுரேஷ் ‘ஹைக்கூ கவிதைகள்’ என்ற ஆய்வு நூலையும் வெளியிட்டு தமிழ்க் கவிஞர்களுக்கு அடித்தளம் அமைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக இன்று ஹைக்கூ குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளும், ஆய்வாளர்களும், கருத்தரங்கமும், விவாதமுமாக உருவாகி சிறப்பாக இயங்கி வருகின்றனர். “ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் உள்ளடக்கத்தினால் தமிழ்ப் படுத்துவதன் மூலம் தமிழ்ப்பண்பாடு அல்லது தமிழர் வாழ்வியலோடு ஒத்தியயைந்த வெளிப்பாடாகப் பிறக்கும் போது மட்டும் தமிழ் ஹைக்கூ நிலை பெறும்” என்று கூறுவார் விஞ்ஞானி நெல்லை சு. முத்து அவர்கள். அவர்களின் கூற்றை அப்படியே உள்வாங்கி இன்றும் தமிழ் ஹைக்கூ படைத்துக் கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள். 1994 ஆம் ஆண்டு முதல் எண்ணற்ற மாணவர்கள் ஹைக்கூ குறித்த ஆய்வினை மேற்கொண்டு, முனைவர், இளமுனைவர் பட்டங்களும் பெற்று வருகின்றனர். பேராசிரியர் இராம.குருநாதன் மற்றும் பேராசிரியர் இரா. மோகன் ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகின்றனர். சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக் கழகங்களிலும் பல கல்லூரி பாட நூல்களிலும் ஹைக்கூ தனக்கென ஓர் இடத்தை நிலையாக பிடித்துள்ளது. தமிழில் ஹைக்கூ மட்டுமின்றி அதன் கிளைவடிவங்களான சென்ரியு, ஹைபுன், ஹைகா வடிவங்களோடு புதிய வடிவங் களான லிமரைக்கூ (லிம்ரிக் + ஹைக்கூ), லிமர்சென்ரியு (ஹைபுன் + சென்ரியு), லிமர்புன் (ஹைபுன் + லிமரைக்கூ) போன்ற சோதனை முயற்சிகளும் நடந்து வருகின்றன. தமிழில் ஹைக்கூ மற்றும் அதன் கிளைவடிவங்களுக்கென்றே 1988ல் வந்த முதல் இதழ் ‘கரந்தடி’ (ரிணீக்ஷீணீஸீtலீணீபீவீ). இதனை புதுச்சேரியிலிருந்து கொண்டு வந்தவர் புதுவை சீனு. தமிழ்மணி அவர்கள். அவரைத்தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்து இதழ்கள் வரத் தொடங்கின. இதழ் ஆசிரியர், ஊர் ஆண்டு கரந்தடி சீனு. தமிழ்மணி, புதுச்சேரி 1988 பட்டாம்பூச்சி கனகராஜ், பொள்ளாச்சி 1993 இனிய ஹைக்கூ மு.முருகேஷ், வந்தவாசி 2000 மேகங்கள் விஜய், கும்பகோணம் 2001 மூவடி கு.அ.தமிழ்மொழி, புதுச்சேரி 2007 நடுநிசி குமாரராஜன், பொள்ளாச்சி 2007 மின்மினி கன்னிக்கோவில் இராஜா, சென்னை 2009 துளிப்பா நாளிதழ் புதுவைத்தமிழ்நெஞ்சன் (இணைய இதழ்) கன்னிக்கோவில் இராஜா 15.09.13 துளிப்பா வாரஇதழ் புதுவைத்தமிழ்நெஞ்சன் (இணைய இதழ்) கன்னிக்கோவில் இராஜா 20.10.13 கவிச்சூரியன் பி. கண்ணன்சேகர் டிசம்பர் 2013 (இணைய இதழ்) பாஷோ கவின் 2015 பாரதி (அஞ்சல்அட்டை) மா. தாமோதரக்கண்ணன் 2016 இந்த பட்டியலில் ‘மின்மினி’ மற்றும் ‘துளிப்பா வார இதழ்’ மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர ‘வலைப்பூ’வாகவும் (ஙிறீஷீரீsஜீஷீt) பலவற்றிலும் ஹைக்கூ வந்துகொண்டிருக்கின்றன தமிழ் ஹைக்கூ கவிதைகளை உலகறியச் செய்தவர்கள் பலர். தற்கால இலக்கியச் சூழலில் புதுவை சீனு. தமிழ்மணி, மு.முருகேஷ், பா. உதயக்கண்ணன், புதுவைத் தமிழ்நெஞ்சன், பேராசிரியர் இரா.மோகன், பேராசிரியர் இராம. குருநாதன், ஓவியக்கவிஞர் அமுதபாரதி, கன்னிக்கோவில் இராஜா ஆகியோர் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர். இவர்களோடு பல இதழ்களும், பத்திரிகைகளும் ஹைக்கூ கவிதைகளுக்கு உறுதுணையாக இருந்துவருகின்றன. தமிழில் ஹைக்கூ நூல்கள் 500 மேற்பட்டவைகளும், சென்ரியு 25க்கு மேற்பட்டவைகளும், ஹைபுன் மூன்றும், லிமரைக்கூ 15க்கு மேற்பட்டவைகளும், 2013 ஆண்டின் கணக்குப்படி வந்துள்ளன. தமிழில் முதல் சென்ரியு நூலை அறிமுகப்படுத்தியவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். தனது ‘சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள்’ நூல் மூலம் அறிமுகப்படுத்தி யுள்ளார். அதோபோல் தமிழில் முதல் ஹைபுன் நூலை அறிமுகப்படுத்தியவர் நால்வர். ‘அறுவடை நாளில் மழை’ என்கிற தொகுப்பை சோலை இசைக்குயில், பல்லவிகுமார், மு.முருகேஷ், ந.க.துறைவன் ஆகிய நால்வரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். தமிழ் ஹைக்கூவை உலக அரங்கில் கொண்டு செல்லும் நோக்கில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் சிறப்பாக உள்ளுர் கடிதத்தில் ஹைக்கூ, அஞ்சல் அட்டை ஹைக்கூ, டைரி ஹைக்கூ, தேநீர் கோப்பையில் ஹைக்கூ, பேனாவில் ஹைக்கூ, விசிறியில் ஹைக்கூ, ஸ்டிக்கர் ஹைக்கூ, விசிட்டிங்கார்டில் ஹைக்கூ, 2.5 செ.மீ ஹைக்கூ நூல், மகளிர் மட்டும் கலந்து கொண்ட ஹைக்கூ நூல், கணவன்-மனைவி மட்டும் எழுதி வெளியிட்ட ஹைக்கூ நூல், தந்தை-மகள், தந்தை-மகன் எழுதிய நூல், மாணவர்கள் மட்டும் வெளியிட்ட நூல் என்ற சிறப்புகளையும் தான் வாசித்த நூறு நூல்களிலிருந்து 10 கவிதைகள் வீதம் 100 கவிஞர்களை அறிமுகப்படுத்தி ஹைக்கூ ஆயிரம் நூலை தொகுத்தவர் முனைவர் இரா. மோகன் அவர்கள். (இவரிடம் பலர் ஹைக்கூ ஆய்வுகள் சமர்ப்பித்துள்ளனர்) அந்த சாகித்ய அகாதெமி வெளியிட்டது. கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் ஹைக்கூவை வைத்து ‘ஹைக்கூ தரிசனம்’ என்ற குறும்படம் ஒன்றையும் இயங்கி யுள்ளார். அதே போன்று இணைத்தில் ஹைக்கூவைக் கொண்டு சென்று சேர்த்தப் பெருமை மதுரைக் கவிஞர் இரா. இரவியையே சாரும். இவையாவுமே தமிழில் ஹைக்கூவின் வளர்ச்சி நோக்கிய பயணமே. 16-10-1916ல் மகாகவி பாரதியார் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள ஹைக்கூ கவிதையின் காலம் நூற்றாண்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இணையத்தில் ‘துளிப்பா நாளிதழ்’ (பிணீவீளீu ழிமீஷ்sஜீணீஜீமீக்ஷீ) ஹைக்கூவின் தந்தை பாஷோவின் பிறந்த நாளான 15-09-2013 இல் முதல் இதழ் வெளியிடப்பட்டு, பாரதியின் கட்டுரை வெளியான 16-10-2013ல் அந்த இதழ் 32 நாட்களோடு நிறைவடைந்தது. அரசுக்கு நூற்றாண்டை கொண்டாடும் விதமாக ‘ஹைக்கூ அஞ்சல்தலை’ மற்றும் ‘அஞ்சல் உறை’ ஆகியவற்றை வெளிக் கொண்டுவர கடிதமும், சென்னையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சாலைக்கு ‘ஹைக்கூ சாலை’ என பெயரிடவும் முயற்சித்து வருகிறது தமிழ் ஹைக்கூ உலகம். ஏற்கனவே 1984-2009ல் தமிழகத்திற்கு ஹைக்கூ நூல் வெளிவந்து 25ம் ஆண்டை ‘வெள்ளிவிழா’ (ஷிவீறீஸ்மீக்ஷீ யிuதீறீமீமீ) வாக வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது தமிழ் ஹைக்கூ உலகம். தமிழ் ஹைக்கூ கவிதைகளுக்கு தமிழக அரசு பரிசினை வழங்கி வருகிறது. அதோ பல சிற்றிதழ்களும் சிறந்த நூலக்கான பரிசுகளை வழங்கி வருகிறது. இருப்பினும் தாராபாரதி அறக்கட்டளை சார்பில் கவிஞர் கவிமுகில் ஆண்டு தோறும் தமிழில் சிறந்த ஹைக்கூ நூல்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறார். இதுவே ஹைக்கூவாளர்கள் விரும்பும் மிகப்பெரிய பரிசாக உள்ளது. அதே போன்று ‘மின்மினி’ ஹைக்கூ இதழும் ஆண்டு தோறும் ‘கவிஞர் கார்முகிலோன் ஹைக்கூ விருதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக எங்கும் வியாபித்திருக்கும் இயற்கையின் அழகையும், மனித வாழ்வியலையும், சமூக பிரக்ஞையையும் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கும் கவிதை வடிவங்களில் ஹைக்கூ முன்னோடியாக இருக்கிறது. ஆர்வத்தின் வெளிப்பாடாக புதுச்சேரியில் கவிஞர் தமிழ்நெஞ்சன் துளிப்பா நூலகத்தையும், சென்னையில் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஹைக்கூ நூலகத்தையும் நிறுவி ஹைக்கூ ஆய்வு மாணவர்களுக்கு பாலமாக இருக்கின்றனர். அதேபோன்று ஹைக்கூ கவிதைகளுக்கென்றே தனது பதிப்பகம் மூலம் அதிக நூல்களை பதிப்பித்த பா. உதயக்கண்ணனும், ஹைக்கூக்கென்றே தம் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவழித்த வந்தவாசி மு.முருகேஷ் அவர்களும், ஹைபுன் படைப்புகளுக்கென்றே காலத்தை செலவழிக்கும் சோலை. இசைக்குயில் மற்றும் பல்லவிகுமார் அவர்களுக்கும் ஹைக்கூ ஆய்வாளர்களுக்கு பாலமானவர்கள். இவர்களோடு தமிழ் ஹைக்கூ ஆங்கில வழி அறிமுகப்படுத்தி வரும் ஆய்வாளர் அமரன் அவர்களும் குறிப்பிடத்தக்கவர். தமது நூல்களை செம்மையாக வெளியிட்டு, பிற கவிஞர்களின் ஹைக்கூவை ஆங்கிலத்தில் பெயர்ப்பதில் ஆர்வம் கொண்டு விளங்கி வருகிறார். ஹைக்கூ கவிதைகள் குறித்த பலரும் பலவிதமாக முயற்சி செய்து கொண்டே வருகிறார்கள். இந்த கட்டுரையில் அந்த கடலில் ஒரு துளிதான். தமிழ் ஹைக்கூ இலக்கியத்தை உலகறியச் செய்யும் நோக்கில் இதனை செம்மையாக்க முனைந்திருக்கும் தோழி கலாரமேஷ் அவர்களும், தோழர் இரமேஷ் ஆனந்த் அவர்களும் தமிழ் ஹைக்கூ உலகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

லிமர்புன் ஓர் புதிய அறிமுகம் கலப்பினங்கள் பொதுவாக எல்லாச் செயல்களிலும் நடந்தேறி வருகின்றன. ஏதோ ஒரு சந்தர்பங்களில் அவை தன்னை முன்னிருத்தப் பார்க்கின்றன. தனக்கு பிடித்த எளிதான செயல்களால் நம்மை வசப்படுத்தவும் தொடங்குகிறது. அதற்கொரு பெயரிட்டு அதனை அறிமுகப்படுத்த முயல்கிறோம். அதன் ஆணி வேராக ஏதாவது பின்னணி ஒன்றிருக்கலாம். ஆயினும் அவை தனித்து செயல்படும் பட்சத்தில் அந்த மாற்றங்கள் ஏற்புடையதே. ஏற்கனவே தமிழில் அவ்வாறான பல சோதனை முயற்சிகள் நடந்தேறிய வண்ணமே இருப்பது, தமிழ்சூழலுக்கு ஏற்றதாகவே அமைகிறது. லிமரைக்கூ, லிமர்சென்ரியு, கிங்பூ, நகைக்கூ, சொட்டுக் கவிதைகள் போன்றன அவ்வாறான வகைப்பாடுகளே. அமெரிக்காவின் லிமரிக் (லிவீனீக்ஷீவீநீ) கவிதைகளையும், ஜப்பானின் ஹைக்கூவையும் (பிணீவீளீu) இணைத்து லிமரிக் + ஹைக்கூ = லிமரைக்கூ என்ற புதிய இலக்கிய வடிவம் உருவானது. அதனை தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தியவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள். அவரின் ‘சென்னிமலை கிளியோபாத்ராக்கள்’ தொடங்கி, வசீகரனின் ‘கமலஹாசன் சாலை’ நூல் வரை சுமார் 12 லிமரைக்கூ நூல் வந்திருப்பதில் இருந்தே அந்த புதியவகை வெற்றி பெற்றதாகவே கருதப்படுகிறது. அதிலும் சுமார் 19 கவிஞர்கள் இணைந்து எழுதி வெளிவந்த ‘காக்கைக்கூடு’ (தமிழின் முதல் லிமரைக்கூ கூட்டுத் தொகுப்பு) பல நிலைகளிலும் வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் லிமரைக்கூ தமிழ் நிலத்தில் தனது வேரை ஆழப்புதைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் லிமரிக்கையும், ஜப்பானின் சென்ரியு கவிதைகளையும் இரண்டரக் கலந்து (லிமரிக் + சென்ரியு) ‘லிமர் சென்ரியு’ என்ற புதிய பரிணாமத்தை செப்டம்பர் 2004 நாளில் ‘கரந்தடி’ இதழில் பதிவு செய்தார் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள். அந்த இயைபு நகைத்துளிப்பா (லிமர்சென்ரியு) வடிவத்தை ‘மழை விடும் நேரம்’ என்று பிப்ரவரி 2008 நூலாகவும் கொண்டு வந்துள்ளார். அவ்வாறான புதிய முயற்சியாகவே தற்போது தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஹைபுன்’ வடிவங்களைப் போன்றே புதிய வடிவே நான் முயற்சித்திருக்கும் “லிபுன்” வடிவமாகும். ஹைபுன் என்பது ஒரு உரைநடை அல்லது சிறுகதையின் இறுதியில் முத்தாய்ப்பாய் அமைகின்ற ஒரு ஹைக்கூவைச் சுட்டும். இது இரண்டு அல்லது மூன்று என்று கூட அமையலாம் என்பதே மரபு. அதனைப் போன்றே ஹைபுனை ஒட்டியே ஒரு உரைநடை, சிறுகதை, சிறுகவிதை என அமைத்து அதன் இறுதியில் அதனைச் சார்ந்த இயைபுச் தொடையுடன், சந்த ஓசையுடன் கூடிய லிமரைக்கூவை வடிக்கும் பட்சத்தில அது ஹைபுன் என்ற நிலையிலிருந்து மாறி ‘லிமர்புன்’ வடிவம் பெறுகிறது. இது சோதனை முயற்சிதான். நால்வர் இணைந்து தமிழில் முதல் நூலாக கொண்டு வந்த ‘அறுவடை நாளில் மழை’ ஹைபுன் நூலும், அதன் பிறகு வந்த ‘தலைக்கு மேல் வானம்’ ஹைபுன் நூலும் கதையோ உரைநடையோ சேர்ந்த ஹைபுனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனை மாற்றி தனியொரு படைப்பாளியின் முதல் நூலாக வெளிக் கொண்டு வந்த கவிஞர் அன்பாதவனின் ‘மாயவரம்’ முற்றிலும் மாறுபட்ட ஹைபுன் தொகுப்பாக இருந்தது. அதாவது ஒரு புதுக்கவிதை அல்லது நவீனக் கவிதை இவைகளின் இறுதியில் ஒரு ஹைக்கூ அமைந்திருந்தது. ஆனால் அதனை அவர் தனியாக குறிப்பிட்டு காட்டவில்லை, என்றாலும் அதுவும் ஓர் புதிய முயற்சியே. மேற்கூறிய மூன்று தொகுப்புகளின் மையமும் இறுதியில் ஹைக்கூவையே வந்தடைகிறது. ஆனால் லிபுன் ஹைக்கூ + லிம்ரிக் கலவையின் கூட்டாக பிறந்த லிமரைக்கூ கவிதைகளை மையப்படுத்தவே வருகிறது. இந்த முயற்சியில் பலரும் இறங்கி முத்தெடுக்கும் பட்சத்தில் இதன் வெற்றி நிர்ணயம் செய்யக் கூடும். எந்த ஒரு புதிய முயற்சிக்கும் உடனே ஆதரவு கரம் நீளாது என்றாலும், இதன் வெற்றிக்கு யாமே விதை தூவ விரும்பி அடுத்தடுத்த இதழ்களில் லிபுன் கவிதைகளையும் அறிமுகம் செய்கிறேன். ஏற்கனவே ‘இனிய ஹைக்கூ’ இதழில் வெளியான ‘கிங்பூ கவிதைகள்’, ‘நற்றினை’ இதழில் வெளியான ‘சொட்டு கவிதைகள்’, ‘அணி’ இதழில் வெளியான ‘லிமர்சென்ரியு’ இவை அனைத்தும் சோதனை முயற்சிகள் தான். ஆங்கிலத்தில் ‘லிவீரீலீt க்ஷிமீக்ஷீsமீ’ என்ற பிரிவில் நூற்றுக்கணக்கான கவிதைகள் எழுதப்படுகின்றன. டோரத்தி பார்க்கர், ஆக்டன் நாஷ் எட்வர்ட் லியர், ஜான் அட்டை ஆகியோர் இவ்வகை கவிதைகள் எழுதியுள்ளனர். இதனை தமிழுக்கு சோதனை முயற்சியாக கொண்டு வர துடித்தவர் எழுத்தாளர் சுஜாதா. சோதனை முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்த போதும் ஹைபுன் மற்றும் லிமரைக்கூ பரவலாக எழுதி வருகிற இந்த வேளையில் ‘லிபுன்’ தனக்கென ஒரு வெற்றிப் பாதையில் வீறு நடை கொண்டு பயனிக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் ஹைக்கூ உலகில் பெண்படைப்பாளிகளின் பங்கு! தலைமுறைக் கோபம் அடிவிழ... அடிவிழ... அதிரும் பறை. மேலே படித்த இந்த மூன்று வரிகளைக் குறித்த உங்கள் மனோநிலை எப்படி இருக்கும்? என்றுக் கேட்டால்... இது ஏதோ குறுங்கவிதைப் போன்று இருக்கிறது என்றோ; சமுதாயத்தின் தாக்கமாக இருக்கிறது என்று சொல்லக்கூடும். இன்னும் ஒரு சிலர் இது குறும்பா என்றோ ஹைக்கூ என்றோ கூட சொல்லிவிடுவார்கள். எது எப்படியோ இந்த மூன்று வரிகள் உங்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மை தானே. மேலே உள்ள இந்த ஹைக்கூ முதுமுனைவர் மித்ரா அவர்களில் 1990ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இன்றும் பொருந்தி வருவது சமுதாயப் பார்வையன்றி வேறென்றச் சொல்ல... ஒரு சராசரி நபரின் கண்ணோட்டத்தைவிட, ஒரு படைப்பாளியின் கண்ணோட்டம் மிகவும் மாறுபட்டது. கவனத்திற்குரியது. அதிலும் பெண் படைப்பாளிகளின் பார்வை, சமூகம் சார்ந்த அகவியலையோ, இயற்கையைச் சார்ந்தவை களாகவோ, குழந்தைகளைச் சார்ந்தவைகளாளோ பிரிதிபலிக்கின்றன. அக்டோபர் 16, 1916ல் சுதேசமித்ரன் நாளிதழில் ஹைக்கூ குறித்தான கட்டுரையை எழுதினார். ‘உயோநே நோகுச்சி’ என்னும் ஜப்பானியர், கல்கத்தா மாநகரத்தில் இருந்து வெளிவந்த மாடர்ன் ரிவியூ என்னும் இதழில் எழுதிய கட்டுரையை அடிப் படையாகக் கொண்டுதான் பாரதி அக்கட்டுரையை எழுதினார். அதில் ஜப்பானிய ஹைக்கூவான பருவமழையின் புழையொலி கேட்பீர் இங்கென் கிழச் செவிகளே!

தீப்பட்டெறிந்தது வீழுமலரின் அமைதியென்னே! என்று மொழிப்பெயர்த்தும் தந்துள்ளார். பாரதியாருக்கு பிறகு 1968ஆம் ஆண்டு ‘நடை’ இதழிலும், 1970களில் சோதனை முயற்சியாக கவிக்கோ அப்துல் ரகுமான் செய்திருந்தாலும் 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓவியக்கவிஞர் அமுதபாரதி எழுதிய ‘புள்ளிப்பூக்கள்’ ஹைக்கூ நூலே தமிழகத்தின் முதல் ஹைக்கூ நூலாக வரையறுக்கப்படுகிறது. பெண்படைப்பாளியில் முதல் ஹைக்கூ நூல் எது? என ஆராய்ந்தால், 1987ஆம் ஆண்டு டாக்டர் தி. லீலாவதி அம்மையார் எழுதிய ‘ஜப்பானிய ஹைக்கூ’ நூலையேச் சொல்லலாம். இவரே ‘இதுதான் ஹைக்கூ’ என்கிற முதல் கட்டுரை நூலையும் தமிழுக்குத் தந்தவர். என்றாலும் ‘ஜப்பானிய ஹைக்கூ’ நூல் முழுதும் மொழிபெயர்ப்பு ஹைக்கூ என்பதைக் கருத்தில் கொண்டு, அதன்பின் மூன்றாண்டுகள் அதாவது 1990ஆம் ஆண்டில் வெளிவந்த முதுமுனைவர் மித்ரா அம்மையாரின் ‘ஹைக்கூ கவிதைகள்’ நூலையே, தமிழ் ஹைக்கூ உலகில் பெண் படைப்பாளியின் முதல் நூலென ஒப்புக்கொள்ளலாம். ஆனாலும் தமிழில் முதல் ஹைக்கூ ஆய்வு நூலான ‘ஹைக்கூ கவிதைகள்’ நூலைக் கொண்டு வந்தவர் திருமதி. நிர்மலா சுரேஷ் அவர்களையேச் சாரும். இந்நூல் தமிழகத்தில் புதியாய் எழுத வந்த கவிஞர்களை ஹைக்கூவின் பால் ஈர்த்தது. வெண்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா போன்ற பா வடிவங்களைக் கண்டு, சீரானப் பாதையில் சென்றுக் கொண்டிருந்த தமிழ் இலக்கிய உலகில் 1990ஆண்டிற்குப் பிறகே ‘பெண்களுக்கான ஹைக்கூ காலம்’ உருவானது. தமிழ் மரபில் சங்க இலக்கியக் காலத்திலேயே பெண்பாற் புலவர்கள் இருந்திருப்பதும், ஔவையார் என்ற பெயரிலேயே பலர் இருந்தனர் என்பதும் தமிழ்மொழிக்கும், தமிழருக்கும் கிடைத்த சிறப்பு. “கீழ்த்திசை பௌத்த சிந்தனையில் முகிழ்த்துச் சீனத்துப் பண்பாட்டில் திளைத்து, ஜப்பானிய அழகக் பார்வையில் மலர்ந்து கவிதை மணம் வீசுகின்றன ஹைக்கூ” எனக் கூறுவார் டாக்டர் தி. லீலவாதி அப்படி மணம் வீசிய ஹைக்கூவை தனக்கே உரிய சொல்லாடலால் பயன்படுத்தத் தொடங்கிய மித்ரா அம்மையார் மற்றும் பரிமளமுத்து ஆகியோர்களைத் தொடர்ந்து, சற்றேறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கவிஞர் சுவாதி, இ. பரிமளம் ஆகியோரின் நூல்கள் வரத் தொடங்கின. கவிஞர் இ. பரிமளம் அவர்களின் சுறுசுறுப்பான தேசிய விளையாட்டு தேர்தல் என்பதும் சோம்பேறி நாட்டில் சுதந்திர தினம் விடுமுறைநாள் என்பதும் இன்றளவும் பொருந்தி வருவது ஆச்சரியப்பட வைக்கின்றன. காலச்சூழலில் ஹைக்கூ கவிதைகள் தமிழகத்தில் வேரூன்றினாலும் 2000ஆம் ஆண்டிற்கு பிறகே அதிகமான பெண் தோழியர்கள் தங்களது நூல்களைக் கொண்டு வந்தனர். கவிஞர்கள் பரிமளமுத்து (மழைத்தூறல்கள்), பாலரஞ்சனி சர்மா (மனசின் பிடிக்குள்), மித்ரா (மித்ராவின் ஹைக்கூ கவிதைகள் & ஹைக்கூ என் தோழி), விஜயலட்சுமி மாசிலாமணி (மூக்குத்திப் பூக்கள்), மரியதெரசா (துளிப்பா தோப்பு), ஞானபாரதி (சில்லறை ஞாபகங்கள்) என வெளிவரத் தொடங்கின. புதுச்சேரி மண் புரட்சிக்கு மட்டுமின்றி, ஹைக்கூவிற்கும் ஆதரவு கரம் நீட்டியது. கள்ளிப்பால் மறு சாதிக்கும் பெண்பால் என ஏழாம் வகுப்பு படிக்கும்போதே ‘சிறகின் கீழ் வானம்’ என்ற நூலை வெளியிட்ட புதுவை கு. அ. தமிழ்மொழி, காக்கச் சொல்லி கதறியது மரமிழந்த குயில் காடழிப்பு.’ என தனது ‘நாற்று’ ஹைக்கூ மூலம் சமூகக் குரல் கொடுத்த க. காயத்ரி, குட்டிப் போடும் சின்ன சின்ன ஆசை மயிலிறகு என ‘கள்ளிப்பால்’ நூல் மூலம் பதிவு செய்த கல்லூரி மாணவி ஞா. தவப்பிரியாவோடு ‘துளிப்பாக்களில் அழகியலும் சமுதாயமும்’ என ஆய்வேட்னை நூலாகக் கொண்டு வந்த புதுவை கு. தேன்மொழி அவர்களும், அவர்களின் இரண்டு மகள்களான கோ. தமிழமுது, கோ. யுகபாரதி ஆகியோர் இணைந்து ‘உசுரு + மனசு = பெண்’ என்ற ஹைக்கூ நூலைத் தந்தனர். கவிஞர் மாநி (சுருக்குப்பை), கரசூர் பத்மபாரதி (சிசு & முகங்கள்), ஓவியம் தமிழ்ச்செல்வி (உடைபடும் வண்ணங்கள்), பிரியா புளோரி (குறுமணல்), ரேவதி இளையபாரதி (அன்றில்கள்), விக்னா பாக்கியநாதன் (அம்மா என் ஹைக்கூ), ஓவியம் தமிழ்ச்செல்வி (உடைபடும் வண்ணங்கள்), பரிமளம் சுந்தர் (ஒற்றைக்காலில் கொக்கு), சு. இராசேசுவரி (யாருமற்ற என் கனவு), மொட்டுகள் (நா. சுப்புலட்சுமி), கவி வெற்றிச்செல்வி சண்முகம் (வண்ணத்துப்பூச்சியின் ஊஞ்சல்) முனைவர் மரியதெரா அவர்களின் ஏழு (லிமரைக்கூ நூல்கள்) ஆகியவை மட்டுமே வந்துள்ளன. தனது திருமண நாளில் ‘யாருமற்ற என் கனவு’ என்கிற நூலைக் கொண்டுவந்தவர், கரந்தடி இதழை நடத்திக் கொண்டிருந்த சீனு. தமிழ்மணி அவர்களின் மனைவி சு. இராசேசுவரி ஆவார். வறண்ட குளத்தில் புதைந்து கிடக்கின்றன நீச்சல் பழகிய நாட்கள். - மு.நர்மதா முதியோர் இல்லம் அடைப்பட்டு கிடக்கிறது பெற்றோரின் பாசம். - மு. நந்தனா என்கிற படைப்புகள் ‘பாக்யா’ வார இதழின் நிரூபரான பாப்பனப்பட்டு முருகனின் இருமகள்களின் படைப்புகளாகும். விலங்குடன் குடிநீர்க்குவளை விடுதலை இந்தியா என எழுதிய சென்னை ஹேமலதா சிவராமன் அவர்கள் ஹைக்கூவில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர். வெட்டப்பட்ட சிறகுகள் பறக்கத் துடிக்கும் பறவைகள் பெண்கள் என சமூதாயத்தில் பெண் நிகழ்வுகளைப் பதிவு செய்து வரும் முனைவர் மரியதெரசா அவர்கள் ஹைக்கூ வகையில் இரண்டு நூல்களையும், அதன் கிளை வடிவமான லிமரைக்கூ வகையில் ஏழு நூல்களையும் எழுதியவர். லிமரைக்கூவில் இவரது படைப்பு தனிச் சிறப்பை பெறுகிறது. குழந்தைகள் அன்பு கற்றுக் கொடுக்கிறது மனிதநேயம் என்பது சாந்தா வரதராஜன் அவர்களின் பதிவு. இவ்வாறு பெண் ஹைக்கூ உலகம் சுருங்கிய நிலையிலேயே இருப்பதைக் கண்டு, 2007ஆம் ஆண்டு கன்னிக்கோவில் இராஜா, நிலாப்பிரியன், தமிழ்மகாலி ஆகியோர் இணைந்து ‘தென்றலின் சுவடுகள்’ என்கிற தமிழின் முதல் பெண்கள் தொகுப்பை தொகுத்தனர். அத்தொகுப்பு கோவை அரசு மகளிர் கல்லூரி மற்றும் சிவகாசி பயர் ஒர்க்ஸ் கல்லூரியிலும் பாடமாக்கப் பட்டது. இந்திய மொழிகளில் தமிழ் மொழியில் மட்டும்தான் அதிகமான ஹைக்கூ நூல்கள் வந்திருப்பது பெருமையைத் தந்தாலும், விழுக்காட்டில் பெண் படைப்பாளிகள் தனித்ததொரு தொகுப்பு மிக குறைந்த அளவிலே இருப்பது வேதனைக்குரியது. 2011 முதல் 2004 வரை ஆண்டுக்கு ஒரே ஒரு பெண் படைப்பாளியின் நூலாக நான்கு நூல்கள் மட்டுமே வந்திருக்கிறது. பெண்களின் அமைதி உறங்கும் எரிமலை விடிந்தால் விடுதலை என்கிற தன் படைப்பு மூலம் குரல் கொடுக்கும் கு. தேன்மொழி அவர்களின் குரல் மற்ற பெண் படைப்பாளிகளின் மத்தியில் எதிரொலித்து, வருகின்ற ஆண்டுகளில் அதிக நூல்களைக் கொடுக்கும் என்பதை நம்புவோம். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதில் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்ற பாரதியின் முழக்கமாக, ஹைக்கூவின் பயணத்தில் பெண்களுக்கான அழைப்பாக முன்வைப்போம். சமகாலச்சூழலில் தமிழ் ஹைக்கூ தமிழ்க்கவிதை உலகம் பல நூற்றாண்டுகளைக் கடந்து சமகாலத்திலும் வெற்றி நடைப்போட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனையோ உலக இலக்கியங்களை புகழ்ந்து கொண்டிருந்தாலும் அவை நமது நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழிலக்கியங்களுக்கு ஈடு இணையற்றது. 16-ஆம் நூற்றாண்டில் ‘ஹைக்கூவின் தந்தை’ எனப் போற்றப்படுகிற பாஷோவால் பிரசித்தப் பெற்ற ஹைக்கூ கவிதைகள் அவரை அடியொற்றி வந்த பூஸன், ஷிகி, இஷா ஆகியோர்களால் நிலைக்கத் தொடங்கியது. இயற்கையை மட்டுமே பாடுபொருள்களாகக் கொண்டிருந்த ஜப்பபானிலும் பல புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டு மாந்த சமுதாயத்தையும் பாடத் தொடங்கி விட்டனர். தங்கா, ரெங்கா போன்ற ஜப்பானிய மரபுக் கவிதை வடிவங்களின் இறுக்கமான இலக்கணக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற விரும்பிய போதுதான் ஹைக்கூ கவிதைகளை தோன்றியது. 5 + 7 + 5 = 17 என்றும் அசை அமைப்புடன் கூடிய மூன்றடிகளைப் பெற்று வரும் இக்கவிதை வடிவம் ஹைகாய் - நொ - ரெங்கா என்னும் இணைப்புக் கவிதை அல்லது தொடர்களிலிருந்து தோன்றியது. இவ்வகை கவிதைகளில் புத்தமதக் கருத்துகளை ஏற்று உரைக்கும் ஜென் தத்துவ நிலையை கொண்டிருந்தன. ஜப்பானிய ஹைக்கூகளை பொறுத்தவரை அவை தனிமை, வெறுமை, நிலையாமை, வறுமை, என்ற மனநிலைகளில் ஏதேனும் ஒன்றை பெற்றிருக்கும். ஒவ்வொரு ஹைக்கூவிலும் இரண்டு படிமங்கள் பெரும்பாலும் இருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் அந்த இரண்டிற்கும் இடையே தொடர்பு ஏதும் இருப்பதாக தெரியாது. ஆனாலும் ஹைக்கூவின் ஈற்றடியில் இரண்டு படிமங்களுக்கு இடையே மின் இணைப்பு ஏற்பட்டு ஹைக்கூ திடீரென ஒளிரத் தொடங்கும். இதனின் சொல்லாட்சி தந்தி மொழிப் போன்றது. இவ்வாறான சூழலில் ஹைக்கூ உலவிய காலகட்டத்தில் தமிழுக்கு ஹைக்கூவை மகாகவி சுப்பிரமணியபாரதி 1916-இல் சுதேசமித்திரன் கட்டுரை வாயிலாக கொண்டு வந்தார். ஆனாலும் அவர் ஹைக்கூ முயற்சியில் இறங்கவில்லை. அவருக்கு பின் அப்துல்ரகுமான், லீலாவதி, மாலன், சுஜாதா போன்ற பலராலும் ஹைக்கூ வளர்க்கப்பட்டு இன்று படர்ந்த ஆலமரமாய் பரவி கிடக்கிறது. மரபு, புதுக்கவிதை, நவீனம் என வகைபாடுகளுக்கிடையே ஹைக்கூ வகைச் சார்ந்த வகைகளும் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி, அதன்மூலம் பல புதிய சுவைஞர்களை ஏற்படுத்தி வருகிறது. இந்திய மொழிகளில் தமிழ்க்கவிதைகள்தான் அதிக இடத்தில் நிரம்பியிருக்கின்றன. புதிதாக எழுத வருகிற கவிஞர்களில் பெரும்பாலோரின் முதல் தொகுப்பாக ஹைக்கூ அமைந்து விடுவது வரவேற்புக்குரியது. 2012-ஐ நெருங்கும் இத்தருணத்தில் தமிழில் சுமார் 450 ஹைக்கூ நூல்களுக்கு மேல் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அதிலும் பல்வேறு யுத்திகளைக் கொண்டு வலம் வருவது கவனிக்கத்தக்கது. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மட்டுமே போற்றி புகழ்ந்தவர்கள், தமிழ் ஹைக்கூ வெறும் பொய்க்கூ என ஏளனம் செய்தவர்கள் எல்லோரையும் இச்சமகாலச் சூழலில் தமிழ் ஹைக்கூ தம்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஓவியக்கவிஞர் அமுதபாரதியின் ‘புள்ளிப்பூக்கள்’ நூலே தமிழில் முதல் ஹைக்கூ நூல். அதே போல் அவரின் ‘ஐக்கூ அருவி’ நூல் மட்டுமே இதுவரை தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது. சொற்சிக்கனம், செறிவு, இணைப்புச் சொற்களை தவிர்த்தல், சொல் தேர்வு, உத்தி பயன்பாடு, அலங்காரமின்மை என்ற வகைப்பாட்டோடு கவிஞரின் குரலை மிகுதியாக ஒலிக்க விடாமல், வாசகர்களுக்கு கூடுதலான பங்களித்தல் ஆகியவை சிறந்த ஹைக்கூ பண்புகளாக ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். ஆனாலும் தமிழில் வருகிற பெரும்பாலான ஹைக்கூகளில் அசல் ஹைக்கூவை தேடுதல் பணியே அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு புதுக்கவிதைகளின் தாக்கமும், விடுகதை / பொன்மொழிகள், மூன்று வரி இவைகளே மையப் பொருளாக விளங்குகிறது. விதையின் உறக்கத்தை தட்டி எழுப்பியது முதல் மழைத்துளி.

என்ற புதுவைத் தமிழ்நெஞ்சனின் கவிதை படித்த உடனே புரிந்து விடுகிற ஹைக்கூதான் என்றாலும், உள்ளீடாக புதைந்துகிடப்பது என்ன? என்ற வினாவே வாசகனின் ஞானத்தேடலுக்குக்கு பாதையாக அமையும்.

“ஹைக்கூ என்பது வாழ்க்கை அனுபவம். காட்சி வழியின் ஊடே பொருளை ஊகித்து உணர்த்துவது. அரும்பு நிலையிலிருந்து மலர்ந்த மணம் வீசிய ஹைக்கூ, ஐரோப்பா முதலான நாடுகளில் தனக்கென்று ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.” - என்கிற பேராசிரியர் இராம. குருநாதன் அவர்களின் கூற்றை மேற்கண்ட ஹைக்கூ பிரதிபலிக்கிறது. தொடர்ந்து இவ்விலக்கியத்தில் பயணப்படும் ஆய்வாளர்கள் பலரும் தமிழ் ஹைக்கூவை, ஜப்பான் ஹைக்கூவுடன் ஒத்துப் போவதை கண்டு சிலாகிக்கிறார்கள். தமிழ்ச் சிற்றிதழ்களில் வெறும் துணுக்குகளாக இடம் பெற்றிருந்த ஹைக்கூ இன்று பெரும் வரவேற்பை பெற்று, தனக்கென சிறப்பான பதிவை பதியமிட்டிருக்கிறது. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பலரும் முனைந்து ஹைக்கூவில் ஆய்வுகள் மேற்கொண்டு வருவது இவ்விலக்கிய வளர்ச்சிக்கான நிதர்சன உண்மை. ஜப்பானிலிருந்து தமிழை வந்தடைந்த அயலகக் கவிதை வடிவமான ஹைக்கூ பரவலான வாசகர்களைப் பெற்று உலா வருகிறது. இதனை கொண்டுச் சென்ற செயலில் பெருபாண்மை வகித்த பெருமை சிற்றிதழ்களையேச் சாரும். புதிதாக எழுத வருகிற கவிஞர்கள் முந்தைய தொகுப்புகளையும், கட்டுரைகளையும் குறைந்த பட்சம் முனைவர் தி. லீலாவதிவதியின் ‘இதுதான் ஹைக்கூ’ மற்றும் சுஜாதாவின் ‘ஹைக்கூ ஓர் அறிமுகம்’ ஆகிய நூல்களையாவது படித்து சிறந்த ஹைக்கூ கவிதைகளை தமிழுலகத்திற்கு அளிக்க முன் வரவேண்டும். அப்பொழுதுதான் இயல்பான கவிதைகள் படிக்கிற வாசகனின் நெஞ்சக் கூட்டில் குடி அமரும். இலை விழும் நேரம் மௌன குளம் ஒளிரும் நிலா. - மேற்கண்ட கன்னிக்கோவில் இராஜாவின் கவிதையைப் போல உங்களுக்குள்ளும் ஹைக்கூ ஒளிர இக்கட்டுரை உதவினாலே, அது இலக்கியச் சோலை ஹைக்கூச்சிறப்பிதழுக்கான வலு சேர்க்கும். தொடர்ந்து ஹைக்கூவில் பயணிப்போம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vishwarajar/மணல்தொட்டி&oldid=2120671" இலிருந்து மீள்விக்கப்பட்டது