உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Vinayaga moorthy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விநாயக மூர்த்தி நாகன்[தொகு]

செய்தியாளர் திருப்போரூர்

தமிழ் முற்றம்[தொகு]

துணை பொது செயலாளர்

                                    தூக்கி பிடிப்போம் எங்களுக்கான அந்த அறிவாயுதத்தை! 


ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக நம் நாட்டில் மாமன்னர்களும், செல்வந்தர்களும் மேல் சாதிகாரர்களும் அவர்களோடு தொடர்புடைய அறிஞர்களும் மட்டுமே கல்வி கற்று வந்தனர்,கல்வியறிவு என்பது அவர்களுக்கு மட்டும் உரித்தான சிறப்பு உரிமையாக இருந்தது.

ஏழை மக்கள் கல்வி பெற்றால் தமது உரிமைகளை பற்றி அறிந்து கொள்வதன் மூலம்,அரசுகெதிராக தமது அதிருப்தியை ,எதிர்ப்புணர்வை காட்டுவதற்கு வழி வகைகளை அறிந்து கொள்வர் என்கிற காரணத்தால் ஆட்சியாளர்கள் யாரும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி புகட்டுவதை ஒரு முன்னுரிமை பணியாக கருதியதில்லை.

இதனை அனைத்து ஆட்சியாளர்களுமே மிக கவனமாக தவிர்த்து வந்தனர். அடிமை வர்க்கம் காலம் காலமாக,பரம்பரை பரம்பரையாக வழங்கப்பட்டு வந்தவைகளையே தமது அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக்கினர். இந்நிலையில் தான்..

அறிவில் செழித்த அவ்வை ஒரு ஆட்டிடை சிறுவனிடம் தோற்று போனாள், ஏகலைவன் என்றொரு எளிய மனிதன் வில்லுக்கே விஜயனை வீழ்த்தி காட்டினான் , சூத்திரம் கற்ற கொன்பன் என்கிற அந்த கம்பன் செல்ல காசாகி போனான் ஒரு ஏற்றகாரனிடம்.

எல்லாம் தெரிந்தவர்கள் இறுமாப்பும் , தம்மை விட இங்கே யார் ? என்கிற தலைகணமும் அடித்து நொறுக்கப்பட்டு தவிடு பொடியான தருணங்கள் அவை . மகுடம் தரித்த குடி மருண்டு போனது; அலறி துடித்தது அவர் தம் அடி வருடி கும்பல். இதை வளர விடுவது வர்க்க பேராபத்து என உணர்ந்து காணிக்கை எனும் பெயரில் கட்டை விரல் பறிக்க பட்டது . ஆட்டிடை சிறுவன் ஆறுமுகத்தான் என திரிக்கப்பட்டது.

அடிமை வர்க்கத்தில் இருந்து அறிவாளிகளும் திறமைசாலிகளும் வரவே முடியாது ,அப்படி ஒருவன் தோன்றினால் அவன் உயர் குடி விந்தில் உற்பத்தியானவன் என்கிற நச்சு கருத்து நயமாய் சொல்லப்பட்டது. இதன் தொடர் நிகழ்வுதான் தேரோட்டியின் மகன் கர்ணன் சூரியனுக்கு பிறந்ததாக சொல்லப்பட்டதும் ,அவ்வை கிழவி தோற்றுப்போனது கடவுளிடம் .இடை சாதி சிறுவனிடம் அல்ல என்று மறுக்கப்பட்டதும் ....இன்னும் பிறவும்.

சதி ஆலோசனைகள் சட்டங்கள் ஆக்கப்பட்டன. படிப்பது தடை செய்ய பட்டது. உழைப்பவன் கற்பது பாவம் என உருவாகப்படுத்த பட்டது. மீறினால் தலையை வெட்டு ! காதில் ஈயம் காச்சி ஊற்று! நாக்கை அறு! என அடாவடிதனங்கள் அரங்கேறின. சாதிய படிநிலை சாமர்த்தியமாக கட்டமைக்க பட்டன. அனல் வாதம் ,புனல் வாதம் மூலம் கொஞ்சம் நஞ்சமிருந்த மக்கள் அறிவு களஞ்சியங்கள் அழித்தொழிக்கப்பட்டன.

பின் வந்த வெள்ளை அரசும், அதற்க்குபிறகான ஓட்டுபொறுக்கி அரசுகளும் தமது கட்டளைகளை புரிந்துனரவும், கணக்கு வழக்குகளை பார்க்க்கவுமான மிக மிக எச்சரிக்கையான கல்வியையே மக்களுக்கு கொடுத்து வருகிறது. அதும் ராஜபாட்டைகளிலும், மாட வீதிகளிலும், கொலு வைத்த கல்வி. ஒரு விவசாய கூலிகாரன் விரும்பினாலும் தன் சந்ததிக்கு கிடைக்காத சமச்சீர் கல்வி.

மறுக்கப்பட்டு, மறுக்கப்பட்டு இதோ.. பல ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சிதைத்து சிதைத்து மழுங்கடிக்கப்பட்ட அந்த அறிவாயுதம் எங்கள் கைகளுக்கு வந்து தவறி விழுகிறது. உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்கிற மேற்கோள்களுக்கு பின்னிருக்கும் மோசடி தனங்களை நாங்களறிவோம். தேடி எடுத்து தூக்கி பிடிப்போம் எங்களுக்கான அந்த அறிவாயுதத்தை!

தலையை வெட்டிய கும்பலே, நாக்கறுத்த கூட்டமே, கட்டை விரலை காவு வாங்கிய வர்க்கமே நந்தனை கொன்ற நெருப்பின் மிச்சமும் , நக்கீரனை எரித்த சூட்டின் வெப்பமும் அதை கொஞ்சம் கொஞ்சமாய் கூர் படுத்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vinayaga_moorthy&oldid=818875" இலிருந்து மீள்விக்கப்பட்டது