பயனர்:Venguv/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஔவையார் இயற்றிய தனிப்பாடல்கள் தொகுப்பிலிருந்து ஒரு பா.

ஐயம் இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின் இவ்வளவேனும் அன்னம் இட்டுண்மின் – தெய்வம் ஒருவனே யென்று முணரவல் லீரேல் அருவினைகள் ஐந்தும் அறும்.

பிச்சை இடுங்கள். அறநெறியைக் கடைபிடியுங்கள்.சிறிதளவே ஆயினும் பிறருக்கு உணவு கொடுத்த பிறகு உண்ணுங்கள். இவற்றை விட ஒருவனே தெய்வம் என்று உணர்ந்து கொள்ளும் வல்லமை பெற்றீர்கள் என்றால் புலன்கள் ஐந்தின் மூலம் வரும் அரிதான வினைகள் அறுபட்டு போகும்.

பிறருக்கு, குறிப்பாக உணவு கிடைக்காதவருக்கு உணவு அளிப்பதே மனிதப்பிறவியின் தலையாய கடமை.பசி என்பது மனிதனைக் கொல்லும் பெரும் நோய்.தானங்களில் சிறந்தது அன்னதானம் மட்டுமே. மேலும் மதவாதிகளுக்கு அறிவுரையாக ஒன்று சொல்கிறார். தெய்வம் ஒன்றுதான். ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனிக் கடவுள்கள் இல்லை. கடவுளுக்கு மதச்சாயம் பூசாதீர். ஒருவனே தெய்வம் என்று உணர்ந்து கொள்வதே மிக உயர்ந்த ஆன்மீக ஞானம். இதை உணர்ந்து கொண்டாலே புலன்வழி சேரும் அரிய வினைகள் அனைத்தும் நம்மை விட்டு அகலும் என்றுரைக்கிறார் ஔவையார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Venguv/மணல்தொட்டி&oldid=2758215" இலிருந்து மீள்விக்கப்பட்டது