பயனர்:Varruneshwaran/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹெதர் பக்[தொகு]

ஹெதர் பக் ஓர் சிறந்த ஆங்கில கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.இவர் 1926 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் கெண்ட் என்னும் நகரில் பிறந்தார்.இவரின் இயர் பெயர் ஹெதர் என்துவிசிலே ஆகும். ஹெதர் பக் என்பது இவரின் புனைப் பெயர் ஆகும். இவர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். 1942 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து போர் துறை நிறுவனத்தில் வரைப்பட வல்லுநராக செயல்ப்பபட்டு வந்தார். 1945 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து நாட்டின்எஸெக்ஸ் நகரின் நகர வடிவமைப்பாளராக செயல்பட்டார் . 1947 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரை லண்டன் நகர வடிவமைப்பாளராக செயல்பட்டார். இவர் 1966 ஆம் ஆண்டு முதல் கவிதைகள் இயற்றி வந்தார். 1952 ஆம் ஆண்டு இவர் ஹ்யாட்லீ பக் என்பவரை மணந்துக் கொண்டார். இவருக்கு இரு குழந்தைகள் உண்டு.

படைப்புகள்[தொகு]

இவர் கவிதைகள் மட்டுமின்றி கதைகளும் எழுதியுள்ளார். த ஆபொஸிட் டிரெக்சொன், அத் டீ விந்டோவ், டீ ஸைந் ஆஃப் வாடர் பேரர், வைட்டிங் ஃபார் ஃபெரீ போன்ற பல சிறந்த கவிதைகளை எழுதியுள்ளார்.இவர் கவிதைகள் பல்வேறு விருதுகள் வென்றுள்ளன. இவரின் பாடல்கள் உளவியல் குறித்த நுணுக்கங்களை மக்களுக்கு தெரிவிக்கும். இவர் நான்கு பாடல் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவர் பாடல்கள் எழுதுவதற்கு காரணமாய் அமைந்தது உளவியல் குறித்த ஓர் புரட்சி ஆகும். அப்புரட்சி அவரைக் கவர்ந்தது. அப்புரட்சியின் பெயர் ஜங்கியன் ஆகும். இவரை போலவே பலரும் அக்காலத்தில் உளவியல் பற்றிய கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதினர். எலியட் , வாலேஸ் ஸ்டீவந்ஸ், ரேநர் ரில்க் போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இவர் உளவியல் சார்ந்த பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் வல்லவராக விளங்கினார்.

லாஸ்ட் ஹெரிடேஜ்[தொகு]

லாஸ்ட் ஹெரிடேஜ் ( தொலைந்து போன கலாசாரம்) இவரின் சிறந்த பாடலாகக் கருதப்படுகிறது. இவர் இப்பாடலில், இக்கால குழந்தைகள் நம் பழைய கலாசாரங்களை மறந்து விட்டார்கள் என்றும் அதற்கு காரணம் நாம் அவர்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கத் தவறியதேக் காரணம் என்று கூறுகிறார். அதைக் கற்றுக் கொடுப்பது நமது தலையாயக் கடமை ஆகும். கலாசாரம் பற்றி மக்களும் குழந்தைகளும் தெரிந்திருந்தால்தான் நம் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமையும். மக்கள் சண்டைகளின்றி சிறப்பாக வாழ முடியும் என்று கூறுகிறார்.

அத் டீ விந்டோவ்[தொகு]

அத் டீ விந்டோவ், ஹெதர் பக் முதன்முதலில் எழுதிய பாடல் தொகுப்பு ஆகும். இது தொடர்ந்து பத்து ஆண்டுகள் பத்திரிகையில் வெளி வந்தது. தன் கருத்துகளை அழகாக இப்பாடலில் புகுத்தியுள்ளார். உளவியல் சார்ந்த கருத்துகள் பெருமளவு இப்பாடலில் நாம் காணலாம். தோல்வி , காதல், மறு பிறவி, வலி போன்ற பல கருத்துகள் இப்பாடலில் புகுத்தியுள்ளார். இவர் எழுதும் அனைத்து பாடல்கள் மற்றும் கவிதைகள் அனைவருக்கும் புரியும் வண்ணம் அமைந்து இருக்கும். தான் கூற எண்ணும் கருத்துகளை எளிதில் புரியும் வண்ணம் எழுதி இருப்பார். அதனால் எளிய மக்களும் இவரின் கவிதைகள் மற்றும் பாடல்களை விரும்பி படிப்பர்.இவ்வுலகின் பொதுவானக் கருத்துகளை இவர் தன் பாடல்களில் கருவாக அமைத்து எழுதி இருப்பார். அதனால் மக்கள் இவர் பாடல்கள், கதைகள் மற்றும் கவிதைகளுடன் ஒன்றி இருப்பர். . உளவியல் நிபுணர்கள், இப்பாடலில் பல்வேறு மனம் சார்ந்த நுணுக்கமான செய்திகள் இருப்பதாக கூறுகின்றனர். மக்களுக்கு ஏற்படும் பயங்கள் மற்றும் மனதளவில் ஏற்படும் பாதுகாப்பிண்மை குறித்து தெளிவாக இப்பாடல் தொகுப்பில் எடுத்துரைக்கிறார். பைபல் வாசகங்கள் குறித்த செய்திகளும் நிறையவே இடம் பெற்றுள்ளன. நம் வரலாற்றை மறந்தாதல் நம் குழந்தைகள் ஏதும் அறியாதவர்களாக உள்ளனர். வரலாற்றை அறிந்து இருந்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும். வரலாற்றை குறித்த அறிவு குழந்தைகளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் என்று ஹெதர் பக் கூறுகிறார். இவர் இயற்கை கவிஞர் ஆவார். இவரின் பாடல்கள் அனைத்தும் இயற்கை சார்ந்ததாக இருக்கும். இவர் இயற்கை மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார். இயற்கையுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று பல பாடல்கள் மூலம் தெரிவித்துள்ளார். இவரின் கதைகள் குழந்தைப் பருவத்தை நினவுப்படுத்தும். இவர் வாழ்க்கை பற்றிய பல கோணங்களை மக்களுக்கு தெரிவித்தது. மக்கள் நள் வாழ்வு வாழ கருத்துகளை முன் மொழிந்தது. இவரின் கதைகளும் அனைவருக்கும் புரியும் வண்ணம், வாழ்வியல் குறித்த செய்திகள் நிறைந்திருக்கும். இவர் இங்கிலாந்து நாட்டில் பல பகுதிகளில் வாழ்ந்தார். எனவே அக்கால சூழல் பற்றிய கருத்துகள், மக்களின் வாழ்வு முறை, பழக்கங்கள் பற்றி தன் கவிதைகள் மற்றும் கதைகளில் கூறுகிறார்.வாழ்க்கை குறித்த உண்மையை மக்களுக்கு தெளிவுப்படுத்தினர். எவ்வாறு வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கை அன்று. குறிக்கோள் கொண்டு வாழ்தல்தான் சிறந்த வாழ்விர்க்கு வழி வகுக்கும் என்று கூறுகிறார். மனதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் நம் எண்ணங்கள் சிறப்பாக இருக்கும் என்றார். . இவர் 2004 ஆம் ஆண்டு மறைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Varruneshwaran/மணல்தொட்டி&oldid=2322786" இலிருந்து மீள்விக்கப்பட்டது