பயனர்:Vaithibala

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைத்திலிங்கபுரம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.

ஆலங்குளம் வட்டம்,

நல்லூர் பஞ்சாயத்து

Pin code 627853

ஆலங்குளத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது,

வைத்திலிங்க சுவாமி திருக்கோவில் உள்ளதால் இந்த கிராமத்துக்கு வைத்திலிங்கபுரம் என்று பெயர் வைத்துள்ளனர்.

முன்னோர்கள் இந்த கிராமத்தை செக்கடிவிளை என்று அழைப்பார்கள்.

வைத்திலிங்கபுரம் கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் பீடி சுற்றுதல், மற்றும் ரைஸ் மில். பத்துக்கும் மேற்பட்ட ரைஸ் மில் உள்ளது,

இந்த கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில், பன்றி மாட சுவாமி கோவில் மற்றும் முத்தாரம்மன் கோவில் உள்ளது,

பன்றி மாடனுக்கு ஆனி மாதம் கடைசி வெள்ளியும், முத்தாரம்மனுக்கு ஐப்பசி மாதம் இரண்டாவது செவ்வாயும் திருவிழா நடைபெறும்,

வைத்திலிங்கபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் மாட்டுடையார் குடும்பத்தினர்.

இந்த வைத்திலிங்கபுரம் ஊரில் ராயல் கிங்ஸ் என்ற குழு ஒன்று உள்ளது.

இந்த குழுவினர் பொங்கள் பண்டிகையில் விளையாட்டு போட்டியும், பன்றி மாட சுவாமி கோவில் கொடையில் அண்ணதானமும், முத்தாரம்மன் கோவில் கொடையில் கேரள மேளமும் நடத்துகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vaithibala&oldid=2460532" இலிருந்து மீள்விக்கப்பட்டது