பயனர்:VINCENT RAYAPPAN

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
   "ஆற்காடு" இது தென்-இந்தியாவின் தமிழ் நாட்டில், விழுப்புரம் மாவட்டம்,திருக்கோவிலுர் தாலுக்காவில் தெண்பெண்ணை ஆற்றங்கறையில் அமைந்த அழகான, அமைதியான, பசுமையான பெரிய கிராமம். 
     நதி, ஏரி, குளம் என நீர் நிலைகள் நிறைந்த இந்த கிராமத்தின் முதன்மையான தொழில் விவசயம். இதன் மக்கள் தொகை சுமார் 6000 பேர் ஆகும்.
  "ஆற்காடு" 'புனித சவேரியார் தேவாலயம்' புதுவை-கடலூர் மறை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10ம் தேதி சிறப்பு தேர்-பவனி வரை புனித சவேரியாரின்  திருவிழா மிக பக்தியுடன் விமரிசையாக கொண்டாடபடுகிறது. 
 மேலும் தெண்பெண்ணை ஆற்றங்கறையில் அமைந்த அய்யனார் கோவில் விழுப்புரம் மாவட்டத்திலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் ஆகும்.
 ஆர்.சி நடுநிலை பள்ளி உட்பட, அரசு மேல்நிலை பள்ளி, விஜயலஷ்மி ஆங்கில பள்ளி, பஞ்சாயத்து ஆரம்ப பள்ளி போன்ற சிறப்பும், பழமையும், புகழும் வய்ந்த பள்ளிகூடங்கள் இந்த ஊருக்கு பெருமை சேர்க்கின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VINCENT_RAYAPPAN&oldid=1833682" இலிருந்து மீள்விக்கப்பட்டது