உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:V.v.guNasEkaran/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்தை பெரியார் நாத்திகக் கொள்கை உடையவராக இருந்தபோதிலும் மாற்றுக்கருத்துக்களையும் மதிப்பவராக இருந்தார் ஒரு சமயம் விழா ஒன்றுக்கு அவரை அழைத்திருந்தனர்.நிகழ்ச்சி நிரலில் கடவுள் வாழ்த்துக்கு நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது பெரியார் கலந்துகொள்ளும் விழாவில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றிருந்தால் என்ன நினைப்பாரோ என்று கருதிய விழாக்குழுவினர் ,சற்றுக் கால தாமதமாகவந்தால் போதும் என்று பெரியாருக்குத் தகவல் அனுப்பினர்.ஆனாலும் பெரியார் குறித்த நேரத்திற்கு விழாவுக்கு வந்து விட்டார் .அவர் முன்னிலையில் கடவுள் வாழ்த்துப் பாடலுடன் விழாவை எப்படி துவங்குவது என்று சங்கடத்தில் நெளிந்தனர் விழாக்குழுவினர். நிகழ்ச்சி நிரலைப் படித்த பெரியார்,கடவுள் வாழ்த்தைத் துவங்குங்கள் என்றார். மற்றவர்கள் எழுந்து நிற்பதற்கு முன் அவரே எழுந்தும் நின்று விட்டார். கூட்டத்திலிருந்த

அனைவருக்கும் ஆச்சரியமாகப் போய்விட்டது. மற்றவர்கள் கருத்துக்களை விமர்சித்தாலும் எவருடைய மனதையும் புண்படுத்த அவர் விரும்பியது இல்லை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:V.v.guNasEkaran/மணல்தொட்டி&oldid=2108283" இலிருந்து மீள்விக்கப்பட்டது