பயனர்:UmaBalasubramanian

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                           திருமதி உமா பாலசுப்ரமணியன்

சென்னையில் பிறந்து வளர்ந்த திருமதி உமா பாலசுப்ரமணியன் , பள்ளிப் படிப்பையும் , கல்லூரிப் படிப்பையும் சென்னையில் முடித்து , திருமணம் ஆன பின் , ராஞ்சி , தில்லி , நொய்டா போன்ற பகுதிகளில் வசித்து வந்தார் ஆங்காங்கே பலவிதமான நிகழ்ச்சிகளையும் நடத்தி பல பரிசுகளையும் பெற்ற இவர் , தில்லியில் குருஜி திரு ஏ.எஸ் . இராகவன் அவர்களிடம் முறையாகத் திருப்புகழ் பாடல்களைக் கற்று, பின் சிறியவர் முதல் பெரியோர் வரை வயது வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களுக்கு இலவசமாகத் திருப்புகழ் கற்றுக் கொடுப்பதில் ஈடுபட்டார். இன்றும் அது நீடிக்கிறது . நொய்டாவில் பல குழந்தைகளுக்கு , திருப்புகழ் பாடல்களையும் , தெய்வப் பாடல்களையும் கற்றுக்கொடுத்து , அவர்களுடன் இசை நாடகம் , பஜனை , போன்ற பல நிகழ்ச்சிகளைச் செய்து வந்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு நொய்டா அவ்வை தமிழ் சங்கம் , இவருக்கு , ‘ தமிழ் சார்ந்த இறைப் பணி ‘ --- வாழ்நாள் விருது கொடுத்து கௌரவப் படுத்தினர். இவர் , தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் பிரதம சீடரான வாகீசகலாநிதி திரு கி.வா.ஜகந்நாதன் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது . இவரும் பல ஆன்மீகப் பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகளும் , தொடர் கட்டுரைகளும் எழுதித் தன் தமிழ்ப் புலமையைக் காட்டி வருகிறார் . இரண்டு வருட காலமாக சென்னையில் வசிக்கும் இவர் அன்பர்களுடன் சேர்ந்து பல திருப்புகழ் இன்னிசைப் பேருரைகளையும் , தனித்து திருப்புகழ் , இலக்கியம்போன்ற பேருரைகளையும் நடத்தி வருகிறார் . இவருடைய நீண்டநாள் குறிக்கோள் ,இளைய தலைமுறைகள் யாவருக்கும் இலவசமாகத் திருப்புகழ் பாடல்களைக் கற்றுக் கொடுத்து , பொருள்களை விளக்கி , அவர்கள் அறியும்படி செய்து , இறைவனை நினைந்து வாழ்க்கையில் முன்னேற வழி வகுத்துக் கொடுப்பதேயாகும்

( பத்திரிகைகள் ---   கலைமகள் , ஆன்மீக ஆலயம் , அம்மன் தரிசனம் , ஷண்முக கவசம் , ஞான ஆலயம் , வடக்கு வாசல், அமுத சுரபி , கோபுரதரிசம் ,உரத்த சிந்தனை, மார்க்க பந்து ) 

இன்னிசைப் பேருரை திருப்புகழில் விநாயகர் , குஞ்சரமாமுகன் , அருணகிரிநாதரும் அரன் அடியார்களும் , திருப்புகழில் தசாவதாரம் , திருப்புகழில் மகாபாரதம் போன்றவைகள் கி.வா ஜ பற்றிய உரை , பாரதியார் உ.வே.சுவாமிநாதன் அவர்களின் பிரதம சீடரான திரு கி.வா.ஜ அவர்கள் கலைமகள் ஆசிரியராகப்பல வருடங்கள் பணிபுரிந்து ,பல இளைய எழுத்தாளர்களை உலகுக்குக் காட்டியவர் . அவர் சிறந்த சிலேடை மன்னர், எழுத்தாளர், அன்மீகச் சொற்பொழிவாளர் ஆவார் அவர் எழுதிய “வீரர் உலகம் ” என்னும் நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு வாங்கியிருக்கிறார். ஸ்ருங்கேரி சுவாமிகளிடமும் , காஞ்சி பெரியவர்களிடமும் அன்பும் மதிப்பும் பூண்ட அவர் எப்பொழுதும் சென்னையில் வரவேற்புரை வழங்குவார். ஞானானந்தசுவாமிகள்,யோகி ராம் சூரத்குமார் , திருமுருக கிருபானந்த வாரியார்,முருகதாஸ், ஹரிதாஸ் , மற்றும்பல ஸ்வாமிகளிடம் நட்புகொண்டிருந்தார். சினிமா சென்சார் போர்டிலும் மெம்பராக இருந்தார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .அவர் எழுத்துக்கள் இன்றுவரை பேசப்படுகின்றது. --UmaBalasubramanian (பேச்சு) 13:39, 10 பெப்ரவரி 2015 (UTC)umaBalasubramanian

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:UmaBalasubramanian&oldid=1804727" இலிருந்து மீள்விக்கப்பட்டது