பயனர்:Tvignesh49
Appearance
தி.விக்னேஷ் தமிழில் வளர்ந்து வரும் ஒரு முக்கியமான கவிஞர்/எழுத்தாளர். இவரது முதல் புத்தகமான நகராதி சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் மூலம் 2015 ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் நீயா நானா கோபிநாத் அவர்களால் வெளியிடப்பட்டது. சமூக கருத்துகளை நுண்ணிய பகடியுடன் ரசிக்கும்படியாக கவிதைகளை எழுதக்கூடியவர். இவர் எழுதிய "பொரணிப்பேச்சு", "பெயரழகி" மற்றூம் "ஆண்ட்ராய்டு எனும் கிராமம்" ஆகியவை ஆனந்த விகடன் சொல்வனத்தில் இடம்பெற்றன. மேலும் இவர் எழுதிய "தானியங்கிக்கதவு", "பூமி எப்படி சுத்துது" ஆகிய சிறுகதைகள் அகல் மின்னிதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற கதைகள். கணினி அறிவியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றீருக்கும் இவர், யாப்பு எனும் தமிழின் முக்கியமான மென்பொருள் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.