பயனர்:Tnse sps diet tut/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம்[தொகு]

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ICSSR) சமூக அறிவியல் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. இது 1969 ஆம் ஆண்டு புது தில்லியில் இந்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பால் நிறுவப்பட்டது.

அதே வருடத்தில் தேசிய சமூக அறிவியல் ஆவண மையம் (NASSDOC) என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவும் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் நூலக மற்றும் தகவல் ஆதார சேவைகளை வழங்குவதாகும்.

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் 29 ஆராய்ச்சி நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் 24 ஆராய்ச்சி நிறுவனங்கள் நேரடியாக இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் நிதி உதவியைப் பெறுகின்றது. மற்ற 5 ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தால் அங்கீகரிக்கிகப்பட்டுள்து.

மேற்கோள்கள்[தொகு]








இந்திய சமுதாய மருத்துவ இதழ்[தொகு]

இந்திய சமுதாய மருத்துவ இதழ் இந்திய தடுப்புமருந்து மற்றும் சமூக மருத்துவ சங்கத்தின் சார்பில் மெட்கோ பதிப்பகத்தால் வெளியிடப்படும் ஒர் உயர்ந்த மதிப்பாய்வு மருத்துவ இதழாகும்.

இந்த இதழில் குடும்ப சுகாதாரப் பாதுகாப்பு, நோய்த்தாக்கம், உயிரியல், பொது சுகாதார நிர்வாகம், சுகாதார பராமரிப்பு மற்றும் விநியோகம், தேசிய சுகாதாரப் பிரச்சினைகள், மருத்துவ மானுடவியல் மற்றும் சமூக மருத்துவம் பற்றிய கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

இந்த இதழில் வெளியாகும் கட்டுரைகளின் சுருக்கம் தொற்றுநோய்கள், சிஏபி அப்ஸ்டிராக்ட்ஸ், EBSCO, EmCare, ASAP, உலகளாவிய சுகாதாரம், உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆராய்ச்சி மையம், உடல்நல கல்வி மையம், IndMed, MedIND, SafetyLit, Scopus SIIC போன்ற இதழ்களில் வெளியிடப்படுகின்றது.


தலைப்பு  : இந்திய சமுதாய மருத்துவ இதழ்

பிரிவு  : பொது சுகாதாரம்

பதிப்பகம்  : மெட்கோ பதிப்பகம், இந்திய தடுப்புமருந்து மற்றும் சமூக மருத்துவ சங்கத்தின் சார்பில்

நாடு  : இந்தியா

வெளியீடு  : காலாண்டு

துவக்கம்  : 1985

இணையதளம் : http://www.ijcm.org.in

ISSN = 0970-0218

eISSN = 1998-3581

OCLC = 29807933

மேற்கோள்கள்[தொகு]

http://www.ijcm.org.in/















இந்திய இயற்பியல் இதழ்[தொகு]

இந்திய இயற்பியல் இதழ் இந்திய அறிவியல் சங்கத்தின் சார்பாக ஸ்பிரிங்ஞர் சைன்ஸ் + பிசினஸ் மீடியாவால் வெளியிடப்படும் ஒரு மாதாந்திர மதிப்பாய்வு இயற்பியல் இதழாகும்.

இது 1926 ஆம் ஆண்டில் சி. வி. ராமன் அவர்களால் நிறுவப்பட்டது.

பயன்பாட்டு இயற்பியல், சோதனை சார்ந்த இயற்பியல் மற்றும் கோட்பாட்டு இயற்பியல் சார்ந்த அறிவியல் கட்டுரைகள் இவ் இதழில் வெளியிடப்படுகிறது.

இந்திய இயற்பியல் இதழின் தலைமை ஆசிரியரான சுபாம் மஜும்தார் ஆவார்.

தலைப்பு  : இந்திய இயற்பியல் இதழ்

முதன்மை ஆசிரியர் : சுபாம் மஜும்தார்

பாடம்  : இயற்பியல்

பதிப்பகம்  : ஸ்பிரிங்ஞர் சைன்ஸ் + பிசினஸ் மீடியா

வெளியீடு  : மாதம் ஒருமுறை

துவக்கம்  : 1926

தாக்கம்  : 0.988 / 2016

இணையதளம்  : http://mailweb.iacs.res.in/ijp/, http://link.springer.com/journal/volumesAndIssues/12648

ISSN = 0973-1458

eISSN = 0974-9845

மேற்கோள்கள்[தொகு]

Indian Journal of Physics, 2016 Journal Citation Reports. Web of Science (Science ed.). Clarivate Analytics.

https://en.wikipedia.org/wiki/Journal_Citation_Reports

http://mailweb.iacs.res.in/ijp/










இயற்பியல் ஆசிரியர்[தொகு]

இயற்பியல் ஆசிரியர் அமெரிக்க இயற்பியல் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் ஒர் உயர்ந்த மதிப்பாய்வு இயற்பியல் கல்வி இதழாகும்.

இது 1963 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தற்போதைய முதன்மை ஆசிரியர் கேரி வைட் (ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்). பால் ஜி. ஹெவிட் ஒரு வழக்கமான பங்களிப்பாளராக உள்ளார்.

இவ்விதழ் இயற்பியல் வரலாறு, இயற்பியல் தத்துவம், இயற்பியல் கல்வி, (கலைத்திட்ட மேம்பாடு, கற்றல் - கற்பித்தல், கற்பித்தல் ஆய்வக உபகரணங்கள்) ஆகியன சார்ந்த இயற்பியல் ஆசிரியர்களின் படைப்புகள் மற்றும் புத்தக மதிப்புரைகளை வெளியிடுகின்றது.


தலைப்பு  : இயற்பியல் ஆசிரியர் பாடப்பிரிவு  : இயற்பியல் கல்வி ஆசிரியர்  : கேரி வொயிட் பதிப்பகம்  : அமெரிக்க இயற்பியல் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் AIP பதிப்பகம் நாடு  : அமெரிக்கா வரலாறு  : 1963 முதல் இன்று வரை இணையதளம் : http://scitation.aip.org/content/aapt/journal/tpt வெளியிணைப்பு : http://scitation.aip.org/content/aapt/journal/tpt/browse ISSN = 0031-921X OCLC = 1715336 LCCN = 66084757 CODEN = PHTEAH

மேற்கோள்கள்[தொகு]













கோட்பாட்டு இயற்பியல்[தொகு]

கோட்பாட்டு இயற்பியல் இயற்பியலின் ஒருபகுதியாகும். கணித மாதிரிகள், இயற்பியல் பொருள்கள் மற்றும் அமைப்புகளின் இயற்கை நிகழ்வுகளை பகுத்தறிய, விளக்க மற்றும் கணிக்க கருத்தியல் கோட்பாடுகளை பயன்படுகின்றனர். சோதனையை அடிப்படையாக கொண்ட இயற்பியலில் இயல்நிகழ்ச்சியை ஆய்வு செய்ய சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அறிவியல் வளர்ச்சி பரிசோதனைகள், ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

1. Physics Education Research | Physics Education Group

2. http://www.esotericka.org/cmc/tth.html













கிறிஸ்டைன் ஏஸ்நோ[தொகு]

  • அமொிக்காவைச் சோ்ந்த முன்னணி நிறுவனமான சிஸ்கோகேபிடல் நிறுவனத்தின் தலைவா், 2009-ம் ஆண்டிலிருந்து இந்தப்
 பொறுப்பில் இருந்து வருகிறார்.
  • 2006-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை சிஐடி குழுமத்தின் குளோபல் வெண்டார் பைனான்ஸ் பிரிவுக்கு தலைவா் பொறுப்பில்
 இருந்தவா்.

  • 1989-ம் ஆண்டிலிருந்து 2006-ம் ஆண்டு வரை சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் சா்வதேச நிதிச் சேவைகள் பிரிவுக்கு
 துணைத்தலைவா் பொறுப்பில் இருந்தவா்.

  • அமொிக்காவில் கோன்சாகா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் பிரிவில் இளநிலை பட்டமும் செயின்ட் மோ் கல்லூரியில்
 எம்பிஏ பட்டமும் பெற்றார்.

  • அமொிக்காவைச் சோ்ந்த ஒய்ட்பிள்யூசிஏ அமைப்பு வழங்கும் பெண்கள் சாதனையாளருக்கான விருதை 2012-ம் ஆண்டு வென்றவா்.
  • 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இஎல்எப்ஏ கூட்டமைப்பின் இயக்குநா் குழு கூட்டத்தில் உறுப்பினராக இருந்தவா்.


மேற்கோள்[தொகு]

தமிழ் இந்து நாளிதழ்







வலவன்[தொகு]

ஓட்டுநா்களின் கதைகளை எழுத்தாளர் சுதாகர் கஸ்துாரி என்பார் தொகுத்து வலவன் என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியி்ட்டுள்ளார். இப்புத்தகத்தில் எழுத்தாளர் ஓட்டுநர்களின் தொழில் சார்ந்த அனுபவங்களை பின்வறுமாறு விவரிக்கின்றார்.

வாடகை கார் ஓட்டுநா்களின் உலகமே தனி. அவர்கள் அனைவருக்கும் ஒரே பின்புலம் கிடையாது. தாங்கள் செல்லும் ஊர்களையும் வழிகளையும் மட்டும் அல்லாமல் தங்களுடைய வாடிக்கையாளா்களின் குணநலன்களையும் நினைவில் பதிய வைத்துக் கொள்ளும் அலாதியான பண்புள்ளவா்கள்.

கீதோபதேச பார்த்தசாரதியைப் போலவே நியாயம், கருமம் பற்றிப் பேசுகிறார் மஞ்சித் சிங் ஒன்ற ஓட்டுநா்.

சோட்டானிக்கரை பகவதியின் பெருமையைப் போற்றுகிறா் பஷீர்.

வளாிளம் பருவப் பெண்ணின் பொய்க் குற்றச்சாட்டில் மனம் ஒடிந்து தற்கொலை செய்துகொள்கிறார் ஆதிமூலம்.

குடும்ப மரபைக் கைவிட முடியாமல், மனைவியின் இன்னலுக்கு விடை காணும் பழங்குடி இளைஞா்.

பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்து பாிசு வாங்கும் மகள் செண்பகாவின் நிகழ்ச்சிக்காகக் கூட செல்ல முடியத தகப்பன் முத்து.

தெருவில் யுவன் - யுவதியைச் சோ்த்துப் பார்க்கும் போதே கற்பனையைத் தவறாகக்க கட்டவிழ்ப்பவா்களுக்கப் பாடமாக டிரைவர் மிஸ்ராவின் குடும்பம்.

முதலாளி மகன் நிகழ்த்திய விபத்தில் இறந்தவனின் ரத்தமும் துர்வாடையும் காரில் இருப்பதாக நினைத்து துடைத்துக் கொண்டே இருக்கும் முகேஷ்.

காலிஸ்தானியாக இருந்து நல்வழிப்பட்டு கல்லூரிப் பேராசிரியராகி பிறகு டிரைவா் வேலையில் அமைதி காணும் ஹாி சிங் என்ற பல தரப்பட்டவா்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

டிரைவா்கள் நம்முடனேயே இருந்தாலும் அவா்கள் உலகம் தனி. இன்றைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவா்கள், பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் சோடை போனாலும் உலகைப் படிப்பதில் தோ்ச்சி பெற்றவா்கள். எழுத்தாளாின் அனுபவம், கற்பனை, நடை மூன்றும் கதைகளை அயா்ச்சியில்லாமல் நகா்த்த உதவுகின்றன.


மேற்கோள்[தொகு]

சுதாகர் கஸ்துாரி, வலவன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14.







கக்கனை என்றொரு நல் அமைச்சர்[தொகு]

பலருடைய மேடைப் பேச்சுகளில் நோ்மைக்கும் நியாயத்துக்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் பெயராகப் பலரது நெஞ்சகங்களில் இப்போதும் வாழ்பவா் முன்னாள் அமைச்சா் கக்கன். தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பவா்கள் மத்தியில் நிஜமாகவே எளிமையான, தூய்மையான மனிதராகவே கக்கன் வாழ்ந்து மறைந்திருக்கிறார். இவருடைய வாழ்வியல் நிகள்வுகளை இராம் பொன்னு என்பார் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

இப்புத்தகத்தில் மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் 1909, ஜீன் 18 அன்று பிறந்த கக்கனுக்கு நாட்டு விடுதலைக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறையைத் துண்டியது காந்தியின் செயல்பாடுகள். காமராஜரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட கக்கன், 1957-ல் சமயநல்லூர் தொகுதியிலிருந்து சென்னை சட்டமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டார் போன்ற வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இவருக்கு எதிராக திமுக தனது வேட்பாளரை இத்தொகுதியில் நிறுத்தாதது, காமராஜா் அமைச்ரவையில் அமைச்சராக இருந்த கக்கன், அமைச்சா் பதவியை விட்டு இறக்கியதும் குடிமக்களுள் ஒருவராக நகரப் பேருந்துக்காக காத்திருந்தது போன்ற பல வரலாற்றுச் செய்திகளையும் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது.

மேற்கோள்[தொகு]

இராம் பொன்னு, கக்கனை என்றொரு நல் அமைச்சர், காந்திய இலக்கிய சங்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை - 625020.

https://ta.wikipedia.org/s/7tp















ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பிடித்த 240 இந்திய வார்த்தைகள்[தொகு]

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகரதியின் 9-வது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 900 புதிய ஆங்கில வார்த்தைகள் சோ்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 240 இந்திய வார்த்தைகள் இடம் பிடித்துள்ளன. அவை பெரும்பாலும் இந்திய உணவுப் பொருட்களாகும்.

கறி லீப் (கறிவேப்பிலை), சென்னா தால் (சுண்டல்), கீமா (வெட்டபட்ட இறைச்சி துண்டுகள்), பப்படம் (அப்பளம்), உள்ளிட்ட இந்திய உணவுப் பொருட்கள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சோ்க்கப்ட்டுள்ளன.

இது தொடா்பாக ஆக்ஸ்போர்டு அகராதி தயாரிப்பு குழு வெளியிட்ட அறிவிப்பில் “ஆங்கிலம் ஒரு சா்வதேச மொழியாகும். உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளைச் சோ்ந்த சொற்கள் ஆங்கிலத்தில் கலந்துள்ளன. இந்திய உணவுப் பொருட்கள் உலகளாவிய புகழ் பெற்றவை. இதன் காரணமாக அவை தற்போது ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம் பிடித்துள்ளன” என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்[தொகு]

தமிழ் இந்து நாளிதழ்












சில்வர் குளோரைடு[தொகு]

சில்வர் குளோரைடு (வெள்ளி குளோரைடு) ஒரு வேதிச் சேர்மமாகும் இதன் வேதி வாய்பாடு AgCl ஆகும். இந்த வெள்ளை படிகம் உறுதியானது. தண்ணீரில் குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது. வெளிச்சம் அல்லது வெப்பத்தில், வெள்ளி குளோரைடு வெள்ளி மற்றும் குளோரினாக மாறுகிறது. சில்வர் குளோரைடு சில மாதிரிகளில் சாம்பல் அல்லது ஊதா நிறத்தை பெற்றிருக்கும். .இதன் இயற்கை தாது குளோர்அர்கைரைட் (chlorargyrite) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6. 







இயற்பியல் கல்வி[தொகு]

இயற்பியல் கல்வி அல்லது இயற்பியல் கல்வி ஆராய்ச்சி ஆகியவை இயற்பியலைப் பயிற்றுவிக்கும் முறையையும், அந்த வழிமுறைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கான ஒரு ஆய்வக பகுதியை குறிப்பிடுகிறது. வரலாற்று ரீதியாக, இயற்பியல் பாடசாலையிலும் கல்லூரி மட்டத்திலும் முதன்மையாக விரிவுரை முறையயுடன் ஆய்வகப் பயிற்சிகளுடன் சேர்ந்து கற்பிக்கப்படுகின்றது. விரிவுரைகள், பரிசோதனைகள் மற்றும் ஏன் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்ய மாணவர்களுக்கு தேவைப்படும் கேள்விகளைக் கொண்டு கருத்துக்கள் நன்றாக புரிந்து கொள்ளப்படுகின்றன.

உதாரணமாக செயல் வழி கற்றலில் பங்கேற்கிற மாணவர்கள் பரிசோதனைகளை செய்து சுய-கண்டுபிடிப்பு மூலம் கற்றுக் கொள்ளலாம். சோதனைகளை செய்து அவற்றில் ஏற்படும் பிழைகளை திருத்துவதன் மூலம் அவர்கள் இயற்பியலில் நிகழ்வுகள் பற்றியும் அடிப்படை கருத்துக்களையும் கண்டறிய கற்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

1. Physics Education Research | Physics Education Group

2. Robert J. Beichner (2009). "An Introduction to Physics Education Research". In Charles R. Henderson and Kathleen A. Harper. Getting Started in PER. Reviews in PER 2.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_sps_diet_tut/மணல்தொட்டி&oldid=2698852" இலிருந்து மீள்விக்கப்பட்டது