பயனர்:Tnse siva ganesan tnj/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேடிக்கை கணக்குகள்[தொகு]

விளையாட்டு என்றால் எந்தக் குழந்தையும் குதித்தோடி வரும். எனவே படிப்பில் விளையாட்டு முறையைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஆா்வமும் ஈடுபாடும் ஏற்படும். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதே வேடிக்கைக் கணக்குகள்.

விருந்துண்ட பின்னர் நண்பர்கள் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதும், சுற்றுலா சென்ற இடத்தில் உரையாடிக் கொண்டிருக்கும் போதும், நான் ஒரு விடுகதை சொல்கிறேன் பதில் சொல்கிறாயா? என்பதுபோல், 'நான் ஒரு வேடிக்கைக் கணக்கு சொல்கிறேன் விடை கண்டுபபிடி' எனறு மகிழ்ச்சியாக பேசி பயனுள்ள முறையில் பொழுது போக்கலாம்.

இக்கணக்குகள் மாணவர்களின் சிந்திக்கும் திறன்,ஆயும் திறன்,சொற்றொடர்களின் நுண்பொருள் காணும் திறன் ஆகியவற்றை விளையாட்டோடு விளையாட்டாக வளர்க்கின்றன. இதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவர். அத்துடன் அறிவுத்திறனிலும் சிறந்து விளங்குவர்.

எடுத்துக்காட்டு:

1.100 புறாக்கள் 100 நாள்களில் 100 கூடை அரிசி சாப்பிடுகின்றன. அப்படியென்றாள் 10 புறாக்கள் 10நாள்களில் எத்தனை கூடை அரிசி சாப்பிடும்? 2. ஈக்களும் சிலந்திகளும் சேர்ந்து மொத்தம் 9. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 62 ஈக்கள் எத்தனை? சிலந்திகள் எத்தனை?

உ.சா.துணை[தொகு]

ஆ. துரைக்கண்ணு, வாசன் வேடிக்கைக் கணக்குகள், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை 600014. முதற்பதிப்பு: சனவரி 1995.