பயனர்:Tnse prabavathi plr

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
        அறத்தொடு நிற்றல்

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் பழந்தமிழர் வாழ்க்கை ஒரு நாகரீகமான பண்பாட்டுச் சிறப்புக்குரியதாகும். அவர்கள் காதலையும் வீரத்தையும் போற்றினர்.சங்க இலக்கியங்கள் அகம், புறம் எனப் பிரிக்கப்பட்டு உள்ளன. அக வாழ்வானது களவு, கற்பு என இரண்டாகப் பகுக்கப்படுகின்றது.தலைமக்களது களவொழுக்கத்தைப் பெற்றோர் அறியுமாறு அகமாந்தர்கள் கூறலை அறத்தொடு நிற்றல் என்பர்.

அற மென்பது உள்நோக்கமின்றி பிறருக்கு உதவுவது.அவ்வாறு தலைமக்களது களவினைப் பெற்றோர் உளங்கொள்ளும் வகையில் தோழியும் , செவிலியும் எடுத்துரைப்பதாகும் அதாவது தலைவன் , தலைவி இருவரின் களவிற்கும் , கற்பிற்கும் இடையில் தோழி தலைவன் வரும் வழியின் அச்சம் காரணமாகவும் , தாய் தலைவியின் உடல்வேறுபாடு கண்டு வெறியாட்டு நிகழ்த்தியவிடத்தும் , தலைவன் வரைவினைத் தமர் மறுத்தபோதும் , வேற்றுவரைவு நெரும்போதும் தலைவியின் களவினைப் பெற்றோரிடம் கூறி அக்களவினைப் கற்பாக்குவதற்குரிய செயல்களில் ஈடுபடுதல் அறத்தொடு நிற்றல

தொல்காப்பியர்இதனைக் "குற்றந் தீர்ந்த அறச்செய்கையாகும்" எனக் கூறுகின்றார். அறத்தொடுநிற்றல் எனும் இச்செயல் நற்றாய்க்கும்,நற்றாயால் தந்தை, தமர் போன்றோர்க்கும் அறிவிக்கப்படும்.  இவ்வறத்தொடு நிற்றல் நிகழ்வு  வெறியாட்டு, இற்செறிப்பு,நொதுமலர்வரைவு,அலரச்சம் போன்றவற்றால் தலைவிக்கு ஏற்படும் இன்னல்களைத் தடுக்கும் பொருட்டு நிகழ்கிறது.அறத்தொடுநிற்றல் வகை  "அறத்தொடுநிற்றல்ம  முன்னிலை மொழியும் முன்னிலைப் புறமொழியும்" என இரு வகைப்படும்.களவினை நேரடியாகவோ மறைமுகமாகவோ அறத்தொடுநிற்றல்{எடுத்துரைப்பது} நடைபெறும் என்பது இதன் பொருள்அறத்ளௌதொடு  நிற்றற்கு உரியோர்."தலைவிபாங்கிக் கறத்தொடுநிற்கும் பாங்கிசெவிலிக் கறத்தொடுநிற்கும் செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்கும் என்ப  நெறியுணர்ந்தோரே" என்று நம்பி அகப்பொருளில் கூறப்பட்டுள்ளது.நோக்கம் களவு கற்பில்  முடியவேண்டும் என்பது இன்றியமையாதது.தலைவன் தலைவியரது களவு வாழ்வு கற்பில் முடிவது இன்றியமையாமை என்ற காரணத்தால் அறத்தொடுநிற்றல் துறை அக இலக்கணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_prabavathi_plr&oldid=2312860" இலிருந்து மீள்விக்கப்பட்டது