பயனர்:Tnse manikandan tnj/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால்ஐஇ சிங்

லால்ஜி சிங்: (பிறந்த 5 ஜூலை 1947)

  இவர் இந்தியாவின்​ தலைசிறந்த டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்ப விஞ்ஞானி. இவர் "இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். மேலும் இவர் மூலக்கூறு அடிப்படையில் செக்ஸ் திட்டமிடுதல், வனவிலங்கு பாதுகாப்பு ஆய்வுத்துறை மற்றும் பரிணாம வளர்ச்சி மற்றும் புலம்பெயர்வு மனிதர்கள் போன்ற பல பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். 
     
     மேலும் இந்திய அரசு 2004 ஆம் ஆண்டில், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.
     
      இவர்​ பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) 25 ஆவது துணை வேந்தராக பணியாற்றினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆட்சிக்குழு தலைவராக​ ஆகஸ்ட் 2011 முதல் ஆகஸ்ட் 2014 வரையிலும், உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (Centre for Cellular and Molecular Biology, CCMB) தலைவராக மே 1998 முதல் ஜுலை 2009 வரை பதவி வகித்தார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_manikandan_tnj/மணல்தொட்டி&oldid=2309231" இலிருந்து மீள்விக்கப்பட்டது