பயனர்:Tnse kanishka chn/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு: வசளைக்கீரை

முன்னுரை:

        ஆங்கிலத்தில் ஸ்பினாக் (Spinach) என்றும் இந்தியில் பாலக் என்றும் வசளைக் கீரை அழைக்கப்படும். நன்கு செழித்து வளரக்கூடியது.

கீரையின் தோற்றம்:

        இலைகள் 1 முதல் 2 செ.மீ. அகலமும் 6 முதல் 7 செ.மீ. நீளமும் இருக்கும். நீா்சத்து நிறைந்து, கனத்துக் தடித்து இருக்கும் இக்கீரையின் தண்டு நன்கு உருண்டு, திரட்சியுடன் காணப்படும்.

கீரையில் காணப்படும் சத்துகள்:

        வசளைக் கீரையில் உடல் வளா்ச்சி்க்குத் தேவையான அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, வைட்டமின் A மற்றும் C, ஃபோலிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன. 
      
         100 கிராம் வசளைக் கீரை தருகின்ற சத்துக்கள்

உணவு மதிப்பு வைட்டமின் மற்றும் தாது நீா்ச்சத்து 91.2% பாஸ்பரஸ் 22 மி.கி. புரதம் 2.0% கால்சியம் 80 மி.கி. கொழுப்பு 0.7% இரும்பு 11 மி.கி. தாது 1.6% வைட்டமின் 28 மி.கி. நாா்ச்சத்து 0.7% காம்ப்ளெக்ஸ் சிறிதளவு

                   கலோாித் திறன் : 29 கலோாி 

கீரையில் காணப்படும் நன்மைகள்:

            வசளைக் கீரை உடலுக்குக் குளிா்ச்சியையும், வயிற்றில் தங்கிய கசடுகளை அகற்றிச் சுத்தம் செய்துவிடுகிறது. இக்கீரையில் இரும்புச்சத்து மிகுதியாக இருப்பதால் சோகை, பாண்டு மற்றும் இரத்த்க குறைவு முதலியவற்றிற்குச் சிறந்த மருந்தாகும்.
            களைப்பு, மூச்சு வாங்குதல், எடைகுறைதல், பசியின்மை போன்றவைகளுக்கு வசளைக்கீரை நல்ல பலனைத் தரும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_kanishka_chn/மணல்தொட்டி&oldid=2397655" இலிருந்து மீள்விக்கப்பட்டது