பயனர்:Tnse iniyavan dpi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூறு நாள்கள் சீர்திருத்தம்

  நூறு நாள்கள் சீர்திருத்தம் (the Hundred days’ Reform movement)என்பது  தேசிய, கலாச்சார, அரசியல் மற்றும் கல்வி சார்ந்த ஒரு வெற்றி பெறாத 103 நாள் சீர்திருத்த முயற்சியாகும். க்யுங் டிநாஸ்டி சைனாவில்(Qing dynasty China) 1898 ஜூன் 11 முதல் 21செப்டம்பர் வரை நடைபெற்றது. குவாங்சு(Guangxu) என்ற இளம் அரசராலும் அவரின் சீர்திருத்த ஆதரவாளர்களாளும் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது பேரரசி டவகர் சிக்சி யின்(Dowager Cixi) வழிகாட்டுதலினால் பழமைவாதிகளின் கடும் எதிர்ப்பினால் ஆட்சி கவிழ்ப்பின் மூலம் தோல்வியில் முடிவுற்றது("The Coup of 1898", Wuxu Coup).


லுக்ரிடியா மோட்

லுக்ரிடியா மோட் (ஜனவரி 3, 1793- நவம்பர் 11, 1880) ஒரு அமெரிக்க சீர்திருத்தவாதியாகவும், அடிமை முறை எதிர்பாளராகவும், பெண் உரிமை போராளியாகவும் இருந்தார். அவர் 1840 ல் அடிமை முறை எதிப்பாளர்களில் சிறந்த பெண்போராளியாக இருந்தார். அப்போது சமுதாயத்தில் பெண்களின் நிலையை மாற்றியமைக்கும் முக்கிய கருத்துகளை கொண்டவராக இருந்தார். பெண்களின் உரிமை பற்றிய முதல் கூட்டத்திற்க்கு ஜேன் ஹண்ட் அவர்களால் அழைக்கப்பட்டார்.1848 செனிகா ஃபால்ஸ் கன்வென்ஷனின் போது டிக்ளரேஷன் ஆப் சென்டிமென்ட் எழுதுவதற்கு உதவினார்.




சூசன் ப்ரவுன் அந்தோனி

Tnse iniyavan dpi/மணல்தொட்டி
Portrait of Susan B. Anthony that was used in the History of Woman Suffrage
பிறப்புSusan Brownell Anthony
(1820-02-15)பெப்ரவரி 15, 1820
Adams, Massachusetts, U.S.
இறப்புமார்ச்சு 13, 1906(1906-03-13) (அகவை 86)
Rochester, New York, U.S.
கல்லறைMount Hope Cemetery, Rochester
அறியப்படுவது
கையொப்பம்

சூசன் ப்ரவுன் அந்தோனி(பிரவரி 15, 1820 - மார்ச் 13, 1906) அமெரிக்காவைச் சார்ந்தவர். அவர் சமுதாய சீர்திருத்த வாதியாகவும், பெண் உரிமைப் போராளியாகவும், பெண்களுக்கான வாக்குரிமைக்காக போராடியவர்களில் முக்கியமானவரும் ஆவார். சமுதாய சம உரிமைக்காக போராடிய குடும்பத்தில் பிறந்த அவர் தன்னுடைய 17 ஆம் வயதில் அடிமை முறைக்கெதிராக புகார்களை சேகரித்தார். 1856 ல் அடிமை முறைக்கெதிரான நியுயார்க் நகர ஏஜென்டாக நியமிக்கப்பட்டார்.

References[தொகு]

Bibliography[தொகு]






டச் ஸ்டோன் (as you like it)

   டச் ஸ்டோன் என்பது ஷேக்ஸ்பியரின் as you like it நாடகத்தில் வரும் ஒரு கற்பனை கதாபாத்திரமாகும்.

நாடக பாத்திரம்

   டச் ஸ்டோன் என்பது ட்யுக் ஃபெட்ரிக்கின்(Duke Frederick) அரசவை கோமாளி கதாபாத்திரம் ஆகும்.நாடகம் முழுவதும் அவன் மற்ற கதாபாத்திரங்களை பற்றி கூறிக்கொண்டே இருப்பது நாடகத்தை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது.அட்ரே(Audrey) என்னும் பெண்ணுடன் டச் ஸ்டோன் காதலில் விழுந்துவிடுகிறான். அதே நகரத்தை சேர்ந்த வில்லியம்(William) என்பவன் அட்ரேவை தவறான வழிகளில் அடைய நிறைய முயற்சிக்கிறான். ஆனால் டச் ஸ்டொனால் மிரட்டி விரட்டப்படுகிறான். டச் ஸ்டோன் அட்ரேவை மனந்தாலும் ஒரு கணிப்பு அவர்கள் உறவை நெருக்கமானதாக ஆக்கவில்லை. அட்ரே டச் ஸ்டோனுடன் உண்மையான காதலுடன் இருக்க வில்லை. அவள் வெறும் பட்டிக்காட்டு பெண்ணாகவே இருந்தாள். சீலியாவின்(celia) பாதுகாப்பிற்காகவும் அவளின் வசதிக்காகவும் டச் ஸ்டோன்  காட்டில் பின்தொடர்ந்து செல்வது அவனது பாத்திரம் சுயநலமில்லாததாக காட்டுகிறது.
    ரோசலின்டும்(Rosalind) சீலியாவும் நகைச்சுவையாக அவனை இயற்கையான கோமாளி என்று கூறியிருந்தாலும் டச் ஸ்டோன் தன்னை ஒரு அறிவாளியாகவே எண்ணிக் கொண்டான்.(" fortune makes nature's natural the cutter-off of nature wit" and "hath sent this natural for our whetstone") அடிக்கடி அவனது புத்திசாலித்தனத்தைக் காட்ட அறிவார்ந்த கருத்துக்களின் மூலம் முயற்சிப்பான்.
     டச் ஸ்டோன் அவனை ஓவிட்(Ovid) உடன் ஒப்பிட்டுக்கொள்வான். டச் ஸ்டோன் என்ற வார்த்தை ஆர்தர் கோல்டிங்(Arthur Golding) என்பவரது 1575 ஆம் ஆண்டு இரண்டாம் புத்தகத்தின் மொழிபெயர்ப்பில் இருந்து தோன்றியது. அதில் மெர்குரி(Mercury) தந்திரமாக அப்பலோவின்(Apollo) கால்நடைகளை திருடி வைத்துக் கொண்டு பேட்டஸ்(Battus) இடம் கால்நடைகள் எங்கே என கேட்டு அவனை தண்டிக்க டச்ஸ்டோனாக மாற்றி விடுகிறான்.
    ஷேக்ஸ்பியரின் கோமாளிகளில், டேவிட் வில்ஸ்(David Wiles) அறிவுறுத்திய படி ராபர்ட் ஆர்மின்(Robert Armin) ஆஸ் யு லைக் இட் முதல் நாடகத்தில்(p145)டச் ஸ்டோனாக நடித்தார். ஆர்மின் டச் ஸ்டோனாக 1599 ல் நடித்ததில் இருந்து அரசவை கோமாளிக்களின் கதாபாத்திரங்களின் தொடக்கமாக அது அமைந்தது. இந்த கதாபாத்திரங்கள் முந்தைய கோமாளி பாத்திரங்களை விட மாறுபட்டிருந்தது. முந்தய கோமாளிகள் வெறும் கைக்கூலிகளாக மட்டுமே இருந்தனர்.












மேப்கிங் சிறுவர் படை(Mafeking Cadet Corps)[தொகு]

மேப்கிங் சிறுவர் படை என்பது 1899-1900 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாம் போயர் போரின் போது மேப்கிங் நகரம் முற்றுகையிடப்படுவதற்கு 217 நாள்களுக்கு முன் லார்ட் எட்வர்ட் செசில்(Lord Edward Cecil) என்பவரால் அமைக்கப்பட்ட சிறுவர் படை ஆகும்.பிரிட்டிஷ் முதன்மை அமைச்சரின் மகனான செசில் ஊழியர்களுக்கான அதிகாரியாகவும் கோட்டை காவற்படையின் துணை கமாண்டராகவும் இருந்தார். அவர்களின் படை தன் ஆர்வமுடைய போரில் பங்கு கொள்ள போதிய வயது இல்லாத வெள்ளை இன சிறுவர்களை கொண்டதாக இருந்தது. அவர்கள் போர் படை வீரர்களுக்கு உதவியாகவும் தகவல்களை கொண்டு செல்பவர்களாகவும், மருத்துவமனையில் உதவி புரிபவர்களாகவும் இருந்தனர். இதனால் போர் வீரர்களின் ராணுவ வேலை எளிதானது.[1][2][3]

       சிறுவர் படையினர் காக்கி நிற சீருடையும் அகன்ற தொப்பியும் அணிந்திருந்தனர்.ஸ்காட்லாந்து மேட்டு நிலத்தவரின் தொப்பி வகையை போன்று அது ஒரு புறம் மேல் தூக்கியவாறு அமைந்திருந்தது. நகர மக்கள் சிறுவர்களின் சீருடை அழகை பற்றி அடிக்கடி பேசிக்கொண்டனர். 13 வயது சார்ஜன்ட் மேஜர் வார்னர் குட் இயர்(Major Warner Goodyear) என்பவன் படை தலைவனாக இருந்தான்.[4]

மேப்கிங் சிறுவர் படையே பின்னாளில் சாரணர் படை(boy scouts) துவங்க ஊக்கமாக இருந்தது.[5]

படையின் பணிகள்[தொகு]

செய்திகளை நகரத்திற்குள்ளும் கோட்டைக்கு வெளியே கொண்டு செல்வதும் அவர்களின் பணிகளுள் ஒன்றாக இருந்தது. சில சமயம் திறந்த வெளியில் பல மயில் தொலைவு செல்ல வேண்டி இருந்தது.துவக்கத்தில் அவர்கள் கழுதைகளை பயன்படுத்தினர். ஆனால் கோட்டை முற்றுகைக்கு பின் உணவு பற்றாக்குறையானது. எனவே கழுதைகள் உணவானது. அதன் பிறகு அவர்கள் மிதிவண்டிகளை பயன்படுத்தினர்.[6]

கண்காணிப்பது அவர்களின் மற்றொறு முக்கிய பணியாயிருந்தது. முக்கியமாக போயர் படை நகரத்தின் எப்பகுதிகளில் எல்லாம் தாக்கத் தயாராக இருக்கிறது என்பதை எச்சரித்தனர்.

நகரத்தில் 'மேப்கிங் புளு'(Mafeking Blue) என்ற ஸ்டாம்ப் அஞ்சல் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது. அவற்றுள் ஒன்று படைத் தலைவன் 'வார்னர் குட் இயர்' மிதிவண்டியில் அமர்ந்திருக்கும் படத்தை கொண்டு இருந்தது.

பிரிட்டிஷ் பேரரசில் அப்போது மற்ற ஸ்டாம்ப்களுக்கு மத்தியில் இது வழக்கத்திற்கு மாறாக இருந்தது.

'ஃப்ரான்கி ப்ரவுன்'(Frankie Brown) என்ற 9 வயது சிறுவன் கோட்டை முற்றுகையின் போது கொல்லப் பட்டான். அவன் ஒரு படை வீரனாக இல்லாமல் இருந்தாலும் படை வீரனாக இறந்ததாகவே கருதப்பட்டான். படை வீரனாகும் குறைந்தபட்ச வயது 11 ஆக இருந்தது.

போர் முடிவின் போது தென் ஆப்பிரிக்க அரசியின் விருதினை மேப்கிங் நகரத்தை பாதுகாத்ததற்காக 24 சிறுவர் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

சாரணர்படைக்கான ஊக்கம்[தொகு]

மேப்கிங் முற்றுகையின் போது பிரிட்டிஷ் கமாண்டராக இருந்தவர் 'ராபர்ட் பேடன் பவுல்'(Robert Baden Powell) . சிறுவர் படையினால் ஈர்க்கப்பட்ட அவர், 1908 ஆம் ஆண்டு அவர்களை பற்றி 'ஸ்கவுடிங் பார் பாய்ஸ்'(Scouting for Boys) என்ற தன் புத்தகத்தில் எழுதினார். படையிலிருந்த சிறுவன் ஒருவனுடனான் உரையாடலை அவர் பின்வருமாறு எழுதினார். ' நான் அவர்களில் ஒருவனிடம் சொன்னேன், எதிரிகள் சுடும் போது நீ வந்தால், பறந்துவரும் குண்டுகளினால் நீ தாக்கப் படக் கூடும் என்று. அதற்கு அவன் , என்னால் மிதி வண்டியை வேகமாக செலுத்த முடியும் ஐயா, குண்டுகளால் என்னை தொட முடியாது என்று பதிலலித்தான்.[7]

மேலும் பார்க்க[தொகு]

வார்ப்புரு:Scouting

மேற்கோள்கள்[தொகு]

  1. Gardner, Brian (1966). Mafeking a Victorian legend. London: Cassell. 
  2. Jeal, Tim (1989). Baden-Powell. London: Hutchinson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-09-170670-X. 
  3. Pakenham, Thomas (1979). The Boer War. New York: Avon Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-380-72001-9. 
  4. "African Seeds of Scouting".
  5. ""Johnny" Walker's Scouting Milestones Pages - The Mafeking Cadets". Archived from the original on 2011-06-14.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; African Seeds of Scouting2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. Baden-Powell, Robert S.S. (1908). Scouting for boys. London: Horace Cox Books. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_iniyavan_dpi/மணல்தொட்டி&oldid=3588345" இலிருந்து மீள்விக்கப்பட்டது