பயனர்:Tnse babu dgl/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயத்தில் தென்னை[தொகு]

விழாக்களில் பயன்பாடு;[தொகு]

இந்து திருமணவிழாக்களில் தென்னைமரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தென்னம்பாளை

தேங்காய் குடத்தின் மேல்பகுதியில் குத்துவசமாக நிறுத்திவைக்கப்படுகிறது.இது கருவைக்குறிக்கிறது. தென்னைமரப்பூக்கள் இந்துமதத்திலும் புத்தமததிலும் எப்போதும் இணைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

திருமணம் மற்றும் இதர விழாக்களில் தென்னங்கீற்றுகள் தோரணாமாக கட்டி தொங்கவிடப்படுகிறது. தென்னைமரப்பூக்கள் நெல்லுடன் கலந்து அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுகிறது. இதேபோன்று இலங்கையிலும் மங்களவிழாக்களில் தென்னை ஒரு சிறந்த இடத்தைப் பெறுகிறது.

பயன்படும் பாகங்கள்;[தொகு]

தென்னைமரத்தின் பாகங்களான தென்னங்கீற்று ,இளநீர், தேங்காய்,தென்னம்பாளை ஆகிய அனைத்தும் மங்கள விழாக்களில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

வளரும் இடங்கள்[தொகு]

இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களில் வளரும்.ஆற்றங்கரை ஓரங்கள் தென்னை வளர சிறந்த இடமாகும்.தண்ணீர் வளமிக்க பகுதிகள் மற்றும் செம்மண் நிறைந்த பகுதிகளில் சிறப்பாக வளரும்.

பிறபயன்கள்[தொகு]

தென்னைமரத்தின் கட்டைப்பகுதிகள் வீடுகட்டவும் தற்காலிக பலகைகள் செய்யவும் பயனுள்ளதாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_babu_dgl/மணல்தொட்டி&oldid=2324762" இலிருந்து மீள்விக்கப்பட்டது