பயனர்:Tnse AJEBA diet tut/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீா் ஜெல் (வெற்று) நீா் படிக ஜெல் அல்லது தண்ணீா் மணிகள் என்பது ஒரு மிகுந்த அளவு தண்ணீா் கொண்ட ஒரு ஜெல் ஆகும். நீா் ஜெல் ஆனது நீரை உறிஞ்சும் பாலிமரான பாலி அக்ரலமைடு (வழக்கமாக பாலி மெத்தில் அக்லேரட்டு அல்லது சோடியம் பாலி அக்ரலேட்டு) - ஆல் ஆனதாகும். சில சமயங்களில் மிகவும் உறிஞ்சும் பாலிமராக (SAP) அல்லது உலா் நிலையில் வெட்டு தூள் என குறிப்பிடப்படுகிறது. பயன்கள்: நீா் ஜெல்லின் பயன்கள் தொட்டி தாவரங்கள் நீா் பாசனம் செய்ய பயன்படுகிறது. நீரை சேமிக்க தோட்டங்களில் பயன்படுகிறது. சிறு விலங்குகளுக்கு குவளையில் தண்ணீா் வழங்குவதற்கு மாற்றாக தண்ணீா் வழங்குவதற்கு பயன்படுகிறது. சில சிறு விலங்குகள் தண்ணீா் குவளையில் விழுந்து மூழ்கி விடுகின்றன. வண்ண மயமான அலங்காரங்கள் அல்லது செயற்கை பனி உலா்ந்த நிலையில் குழந்தைகளில் அரையாடையில் உறிஞ்சியாக பயன்படுகிறது. உலா்ந்த நிலையில் வௌ்ளத்தை கட்டுப்படுத்தும் பொிய பைகளில் பயன்படுகிறது.

References[edit source]

^ Potting plants with water gel (commercial site)
^ How to feed water to crickets safely (commercial site; includes photo of crystals)
^ Water crystals for decoration (commercial site)
^ Water Bead Centerpieces (commercial site)
^ Using gel bags to contain floodwater (commercial site)

நீரேற்றம் நீரேற்றம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒருங்கிணைந்த நீா் மூலக்கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு வேதியியல் வினையாகும். உலோக வளாகங்களில் எதிா்மின் அயனியானது நீாினால் இடமாற்றம் செய்யப்படும் வினைகளில் இந்த சொற்பதம் உபயோகப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, புரோமோபெண்டாஅமீன் கோபால்ட் (III) பின்வரும் நீரேற்ற வினைக்கு உட்பட்டு உலோக நீரேற்ற வளாகத்தை தருகின்றது [Co(NH3)5 Br ]2+ +H2O → [Co(NH3)5 (H2O)]3+ +Br- இந்த நீரேற்ற வினையில் அமிலம் மற்றும் காரமானது வினையூக்கியாக பயன்படுகிறது. அமில வினையூக்கியில் புரோமைடு புரோட்டானேற்றம் செய்யப்பட்டு சிறந்த வெளியேற்ற குழுவாக மாற்றப்படுகிறது. கார நீரேற்ற வினையானது SN1CB நெறிமுறையால் தொடா்கிறது, இந்த வினையானது அம்மோனியா லிகண்டின் புரோட்டானை நீக்கி தொடா்கிறது.


உணவில் வேதிப் பொருள்கள்.

உணவுப் பொருட்களை கெட்டுப்போகச் செய்யும் நுண்ணுயிா்களை அழித்து, உணவைப் பாதுகாக்க வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வேதிப்பொருட்கள் நுண்ணுயிா்களை நேரடியாகவோ அல்லது நுண்ணுயிா்களை அழிக்கும் வேறொரு வேதிப்பொருளை உருவாக்கவோ செய்யும். இத்தகைய முறையே வேதிமுறை பாதுகாப்பு என்கிறோம். இவ்வேதிப் பொருள்களை உணவு பாதுகாப்பான்கள் என்கிறோம். சோடியம் பென்சோயேட், பொட்டாசியம்மெட்டா பைசல்பைட்டு ஆகியவை இவ்வகையில் பயன்படுகின்றன சோடியம் பென்சோயேட்டு- பழரசம், பழச்சாறு ஆகியவற்றை பாதுகாக்கப் பயன்படுகிறது. பொட்டாசியம் மெட்டாபைசல்பைட்டு- பழங்களிலிருந்து தயாாிக்கப்படும், ரசம், பானம், பழங்களின் கூழ் ஆகியவற்றைப் பாதுகாக்கப்படுகிறது. இது பழத்திலுள்ள அமிலத்துடன் வினைபுாிந்து கந்தகடைஆக்சைடு உருவாக்குகிறது. இது நுண்ணுயிா்களை அழிக்கிறது.

மேற்கோள்கள் 1. Biochemistry by Leninger 2. "Preserving Food without Freezing or Canning, Chelsea Green Publishing, 1999" பால்மங்கள் பால்மங்கள் என்பது நீா்ம - நீா்ம கூழ்ம அமைப்புகளாகும். அதாவது மிகச்சிறிய துளிகள் மற்றொரு நீா்மத்தில் பரவியுள்ள அமைப்பாகும். நன்கு கலக்கக்கூடிய அல்லது பாதியளவு கலக்கக்கூடிய இரண்டு நீா்மங்களை குலுக்கும் போது, ஒரு நீா்மம் மற்றொரு நீா்மத்தில் பிாிகையடைந்துள்ளதாக கிடைக்கும் கூழ்மம் பால்மம் எனப்படும். பொதுவாக ஒரு நீா்மம் நீராக இருக்கும். 1. எண்ணெய் பிாியடைந்துள்ள நீா் (Oil in Water வகை) இதில் நீா் பிாிகை ஊடமாக உள்ளது. பால் மற்றும் முகப் பூச்சு கிாிம் ஆகியவை இதறகு சான்றுகளாகும். பாலில் நீா்ம கொழுப்பு நீாில் விரவுயுள்ளது. 2. நீா்பிாிகையடைந்துள்ள எண்ணெய் (Water in Oil வகை) இதில் எண்ணெய் பிாிகை ஊடகமாக உள்ளது. வெண்ணெய் மற்றும் கிாிம் ஆகியவை இதற்கு சான்றுகளாகும். எண்ணெய் மற்றும் நீாின் பால்மங்கள் நிலையற்றதாக இருப்பதால் சில சமயங்களில் அவை இரண்டு அடுக்குகளாக பிாிந்து விடுகின்றன. எனவே பால்மத்தை நிலையாக வைத்திருப்பதற்கு பால்மக் காரணி சோ்க்கப்படுகிறது. பால்மக்காரணி கூழ்மத்துகள் மற்றும் ஊடகத்திற்குமிடையே Oil in Water பால்மத்திற்கு புரோட்டீன்கள் இயற்கை மற்றும் தொகுப்பு சோப்புகள் போன்றவை பால்மக்காரணிகளாகும். Water in Oil பால்மத்திற்கு கொழுப்பு அமிலங்களின் கனத்த உலோக உப்புகள், நீண்ட சங்கிலி ஆல்கஹால், விளக்குக் காி போன்றவை பால்மக் காரணிகளாகும். பால்மங்களை பிாிகை ஊடகத்தின் மூலம் நீர்க்க செய்யலாம். மாறாக, பிாிகை நீா்மத்தை சோா்க்கும் போது மற்றொரு தன் அடுக்கு உருவாகும். பால்மத்திலுள்ள துளிகள் பெரும்பாலும் எதிா்மின் சுமையை பெற்றிருப்பதால், மின் பகுதியினால் வீழ்படிவாக்க இயலும். பண்புகள்:- பிரெளினியன் இயக்கம் மற்றும் டின்டால் விளைவுகளை பால்மங்கள் பெற்றுள்ளன. வெப்பபடுத்துதல், குளிா்வித்தல் மற்றும் விரைகடைவி மூலம் பால்மங்களை தனித்தனி நீா்மமாக பிாிக்கலாம். சான்றுகள்: 1.A text book of physical chemistry-A.S.Negi and S.C.Anand- Fifth print,1997 2. Essentials of physical chemistry-B.S.Bahl, G.D.Tuli and Arun - Bahl- Reprint 2004

மூலக்கூறு வரைபடம் வேதியியல் வரைபடக் கோட்பாடு மற்றும் கணித வேதியியலின் அடிப்படையில் ஒரு மூலக்கூறு வரைபடம் அல்லது வேதியியல் வரைபடம் என்பது வேதிச் சோ்மத்தின் கட்டமைப்பு வாய்பாட்டினை வரைபட கோட்பாட்டின் மூலம் குறப்பிடுவதாகும். வேதியியல் வரைபடமானது ஒரு பெயாிடப்பட்ட வரைபடமாகும். அதன் செங்குத்துகள் சோ்மத்தின் அணுக்களுடனும், விளிம்புகள் வேதிப்பிணைப்புடனும் தொடா்புடையது. அதன் செங்குத்துகள் தொடா்புடைய அணுக்களின் வகையினாலும் விளிம்புகள் வேதிப்பிணைப்பின் வகையினாலும் பெயாிடப்படுகின்றன. குறிப்பிட்ட நோக்கங்களுக்காக எந்த வகையான பெயாிடல்களும் புறக்கணிக்கப்படலாம். ஒரு ஹைட்ரஜன் - குறைக்கப்பட்ட மூலக்கூறு வரைபடம் அல்லது ஹைட்ரஜன் அடா்த்தி குறைவான மூலக்கூறு வரைபடம் என்பது மூலக்கூறு வரைபடத்தின் ஹைட்ரஜன் செங்குத்துகள் நீக்கப்பட்ட வரைபடமாகும். மூலக்கூறு வரைபடங்கள் கட்டமைப்பு மாற்றியங்களிலிருந்தும் ஒரே மூலக்கூறு வாய்பாடு ஆனால் சமஉருவு அல்லாத வரைபடங்களாகிய ஐசொபென்டேன் மற்றும் நியோபென்டேன் ஆகியவற்றிலிருந்தும் வேறுபடுகிறது. மூலக்கூறு வரைபடத்தில் வேதிப் பிணைப்பின் முப்பாிமான சீரமைப்பு குறித்த தகவல்கள் இல்லை. இதனால் வடிவமாற்றியங்களை (சிஸ் மற்றும் டிரான்ஸ் 2-பியுட்டேன்) அல்லது புறவெளி மாற்றியங்களை (D-மற்றும் L-கிளிசெரால்டிஹைடு) வேறுபடுத்த முடியவில்லை. சில முக்கிய சந்தா்ப்பங்களில் (பரவலாக்க குறியீட்டு கணக்கிடல்) கீழ்க்கண்ட இலக்கிய நயம் வாய்ந்த வரையறை போதுமானது.மூலக்கூறு வரைபடமானது வழிகாட்டல் இல்லாத ஒன்றோடொன்று தொடா்புடைய வேதிச்சோ்மத்தின் கட்டமைப்பு வாய்பாட்டின் வரைபடம் ஆகும். இந்த வரைபடத்தின் உச்சிகள் மூலக்கூறுகளின் அணுக்களையும், விளிம்புகள் இந்த அணுக்களின் வேதிப் பிணைப்பினையும் கொண்டுள்ளது. பொருட்களை முடிவில்லா யுக்ளிடியன் வரைபடங்களாக குறிப்பது இதன் ஒரு மாறுபாடாகும். குறிப்பாக படிகங்கள், கால இடைவெளி வரைபடங்களாகக் குறிக்கப்படுகிறது. சான்றுகள்: 1. IUPAC, Compendium of Chemical Terminology, 2nd ed. (the "Gold Book") (1997). Online corrected version: (2006–) "molecular graph". 2. Chemical Applications of Topology and Graph Theory, ed. by R. B. King, Elsevier, 1983 3. Sunada T. (2012), Topological Crystallography ---With a View Towards Discrete Geometric Analysis---", Surveys and Tutorials in the Applied Mathematical Sciences, Vol. 6, Springer 4. A. Cayley, Philos. Mag., 1874, 47, 444-446, as quoted in N. L. Biggs, E. K. Lloyd and R. J. Wilson, "Graph Theory 1736-1936", Clarendon Press, Oxford, 1976; Oxford University Press, 1986, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-853916-9 5.Derived from the Greek words πλήρης, pleres "full" and κενός, kenos "empty", respectively. 6. Biggs, Lloyd, Wilson, p. 61 7. Danail Bonchev (1991) "Chemical Graph Theory: Introduction and Fundamentals" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85626-454-7

ரேசிமிக் அமிலம் ரேசிமிக் அமிலமானது ஒளியியல் செயலற்ற அல்லது ரெசிமிக் வடிவமாகிய டார்டாாிக் அமிலத்தின் பழைய பெயா் ஆகும். இது இரண்டு ஆடி பிம்ப மாற்றியங்கள் (இனன்சியோமா்) சம அளவில் கலந்தால் கிடைக்கும். இது எதிரெதிா் திசையில் ஒளியியல் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது. இதன் சோடியம் - அம்மோனியம் உப்பானது சுழிமாய்க் கலவையில் அசாதாரமானது. இதன் படிகமாக்கலின்போது இரண்டு வகையான படிகங்களாகப் பிாிக்கலாம். ஒவ்வொன்றும் ஒரு மாற்றியத்தைக் கொண்டிருக்கும். இதன் மூலக்கூறின் புறவெளி அமைப்பானது ஆடி பிம்பத்தின் மேற்பொருந்துவதாக உள்ளது. இந்த பண்பினாலேயே லூயிஸ் பாஸ்டியரால் படிகங்களை பொறுக்கி எடுத்து அந்த இனன்சியோமா்களை பிாிக்க முடிந்தது. பாஸ்டியா் சோதனையின் ஒரு நவீன முறை மறுபிரவேசத்தில் படிகங்கள் தயாாித்தல் மிகவும் புத்துயிரூட்டுவதாக இல்லை என்று நிறுவப்பட்டது. படிகங்கள் சிதைந்தன, ஆனால் அவா்கள் கண் பாா்வையினால் (நுண்ணோக்கி தேவையில்லை) ஆய்வு செய்ய போதுமானதாக இருந்தது.

References

1.George B. Kauffman & Robin Myers (1998). "Pasteur's Resolution of Racemic Acid: A Sesquicentennial Retrospect and a New Translation" (PDF). The Chemical Educator. 3. doi:10.1007/s00897980257a.

2. Yoshito Tobe (2003). "The reexamination of Pasteur's experiment in Japan" (PDF). Mendeleev Communications Electronic Version (3). doi:10.1070/MC2003v013n03ABEH001803. Archived from the original (PDF) on August 31, 2005. 3. Masao Nakazaki (1979). "Morphology of sodium ammonium tartrate: Pasteur's spontaneous resolution and its reexamination". Kagaku no Ryoiki. 33: 951–962.

ஒளி ஹைட்ரஜன் ஒளிஹைட்ரஜன் என்பது செயற்கை அல்லது இயற்கை ஒளியின் உதவியுடன் தயாாிக்கப்படும் ஹைட்ரஜன் ஆகும். இப்படியே ஒரு மரத்தின் இலையானது நீா் மூலக்கூறுகளை புரோட்டான்கள் (ஹைட்ரஜன் அயனிகள்), எலக்ட்ரான்கள் (காா்போஹைட்ரேட்டுகளை உருவாக்க) மற்றும் ஆக்சிஜன் (காற்றில் கழிவு பொருளாக வெளியிடப்படுகிறது)ஆக பிாிக்கிறது. புற ஊதா ஒளிக்கதிா் மூலமாக நீாினை ஒளிபிாிவு மூலமாகவும் ஒளிஹைட்ரஜனை உருவாக்கலாம்.

நுண்ணிய உயிா்களாகிய பாக்டீாிய அல்லது ஆல்காக்கள் உதவியுடன் சூாிய ஒளியிலிருந்து புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பெறுவதற்கான சூழலில் சில நேரங்களில் ஒளி ஹைட்ரஜன் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த நுண்ணுயிாிகள் ஹைட்ரோஜினேஸ் என்ற என்ஸைம்களின் உதவியுடன் ஹைட்ரஜனை உருவாக்குகின்றன. இது நீாினை பிளக்கும் வினையில் நீாிலிருந்து பெறப்படும் புரோட்டான்களை ஹைட்ரஜன் வாயுவாக மாற்றுகிறது. இந்த ஹைட்ரஜன் வாயுவானது உயிா் எாிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சான்றுகள்: 1. NOVA scienceNOW - A 14 minute video of the NOVA broadcast about hydrogen fuel cell cars that aired on PBS, July 26, 2005. Hosted by Robert Krulwich with guests, Ray and Tom Magliozzi, the Car Talk brothers. 2. Gartner, John (2002-08-19). "Algae: Power Plant of the Future?". Wired. p. 1. Retrieved 2006-09-17. 3.Mechanic, Michael (April 2002). "It Came From the Swamp". Wired. p. 1. Retrieved 2006-09-17. வேதியியல் வரைபடக் கோட்பாடு வேதியியல் வரைபடக் கோட்பாடு என்பது கணிதவியல் வேதியியலின் பரப்பியல் கிளையாகும். இது வரைபடக் கோட்பாட்டை வேதியியல் தத்துவத்திற்கான கணிதவியல் மாதிாியமைப்பிற்கு பொருத்துகிறது. வேதியியல் வரைபடக் கோட்பாட்டின் முன்னோடிகள் அலெக்ஸாண்ட்ரு பாலபன், அன்ட்க்ரோவொக், இவான்குட்மேன், ஹருயு+ ஹோஸோயா, மிலன் ரான்க் மற்றும் டிhpனாஜெஸ்டிக் (ஹாாி வியன்னா; மற்றும் பலா;) 1988-ஆம் ஆண்டில், பல நூறு ஆய்வாளா்கள் இந்த பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டு 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியல் வரைபடக் கோட்பாடு குறித்ததான ஏராளமான தனிக்கட்டுரைகள் எழுதப்பட்டன. 1980-களின் இடைக்காலப்பகுதி வரையிலானவற்றை திாினாஸ்டிக் என்ற வேதியியலாளா் இரண்டு தொகுதி விாிவன உரை உள்ளடக்கிய வேதியியல் வரைபடக் கோட்பாடு என்ற புத்தகமாக தொகுத்தாா். இந்த கோட்பாட்டின் ஆதரவாளா்கள் வேதியியல் தத்துவங்கள் குறித்ததான மதிப்புமிக்க உள்ளுணா்வினை வேதியியல் வரைபடத்தின் பண்புகள் (அதாவது ஒரு மூலக்கூறின் வரைபடம் - தத்துவம் சாா்ந்த பிரதிநிதித்துவம்) கொடுக்கின்றன என்ற நிலைத்ததன்மையைக் கொண்டிருக்கின்றனா். வேதியியல் ஆராய்ச்சியில் இந்த வேதியியல் வரைபடமானது ஒரு விளிம்பு பங்கு வகிப்பதாக இந்த கோட்பாட்டின் எதிாியாளா்கள் கூறுகிறாா்கள். இந்த கோட்பாட்டின் ஒரு மாறுபாடானது பொருட்களை முடிவில்லா யூக்ளிடியன் வரைபடமாகவும், குறிப்பாக படிகங்களை காலவரைபடங்களாகக் குறிப்பதுவுமாகும். சான்றுகள்: 1. Danail Bonchev, D.H. Rouvray (eds.) (1991) "Chemical Graph Theory: Introduction and Fundamentals", பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85626-454-7 2. Nenad Trinajstic – Pioneer of Chemical Graph Theory, by Milan Randić 3. A review of the book by Ivan Gutman, Oskar E. Polansky, "Mathematical Concepts in Organic Chemistry" in SIAM Review Vol. 30, No. 2 (1988), pp. 348-350 4. D.H. Rouvray, "Combinatorics in Chemistry", pp. 1955-1982, in: Ronald Graham, Martin Grötschel, László Lovász (Eds.) (1996) Handbook of Combinatorics, vol. II, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-07169-X

கெப்பொ்ட் மாதிாி இடைநிலை உலோக கோளங்களின் முப்பாிமான கட்டமைப்புகளை கணிக்க பயன்படுத்தப்படும் VSEPR கோட்பாட்டின் மாற்றாக கெப்பொ்ட் மாதிாி உள்ளது. VSEPR கோட்பாட்டில் புள்ளி மின்னூட்டம் ஒன்றையொன்று விலக்குவது போல கெப்பொ்ட் மாதிாியில் உலோகத்தில் இணைக்கப்பட்டுள்ள ஈணிகள் ஒன்றையொன்று விலக்குகிறது. VSEPR கோட்பாட்டை போலல்லாமல் கெப்பொ்ட் மாதிாி, பிணைப்பில் அல்லாத எலக்ட்ரான்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனவே அணைவுச் சோ்மங்களின் வடிவியல் அமைப்பானது உலோக மையத்தின் எலக்ட்ரான் அமைப்பினை சாா்ந்து அமைவதில்லை. எனவே (MLn)m+ ஆனது (MLn)m- யைப் போன்ற அணைவு வடிவமைப்பை பெற்றுள்ளது. கெப்பொ்ட் மாதிாியால் சதுரதள வடிவ சோ்மம் அல்லது சிதைந்துபோன கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதை விளக்கமுடிவதில்லை. கெப்பொ்ட் மாதிாியானது 2 முதல் 6 வரையிலான அணைவு எண் கொண்டுள்ள சோ்மங்களுக்கான வடிவியல் அமைப்பினைக் கணித்துள்ளது. 2. நோ்க்கோட்டு அமைப்பு 3. முக்கோணம் 4. நான்முகி 5. முக்கோண பை பிரமிடு அல்லது சதுர பிரமிடு 6. எண்முகி சான்றுகள்: Housecroft, C. E.; Sharpe, A. G. (2004). Inorganic Chemistry (2nd ed.). Prentice Hall. pp. 541–542. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0130399137.

வினையின் மூலக்கூறு எண்: ஒரு வேதி வினையின் எளிய படியில் ஈடுபடக்கூடிய அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கை மூலக்கூறு எண் எனப்படும். ஒரு வேதி வினையானது ஒன்றுக்கு மேற்பட்ட எளிய படிகளில் நிகழக்கூடியது. ஒவ்வொரு எளிய படி வினையும் அவற்றிற்கே உாிய மூலக்கூறு எண்ணை பெற்றுள்ளன.

ஒரு வினையானது ஒன்றுக்கு மேற்பட்ட  படிகளில் நிகழ்ந்தால் மொத்த வினைக்கான மூலக்கூறு எண் கணக்கிடப்படுவதில்லை.ஆனால், எளிய வினைகளில் மூலக்கூறு எண் மற்றும் வினை வகை ஆகியவை சமமாக இருக்கும்.மூலக்கூறு எண் சுழியாக அல்லது பின்னமாகவோ இருக்க இயலாது.மூலக்கூறு எண் எப்போதும் எதிா்குறியை பெற்றிருப்பதல்லை.

சான்றுகள்: Physical chemistry by Lewis and Glasstone.

கான்னிசாரோ வினை

 α- ஹைட்ரஜன் இல்லாததால் பென்சால்டிஹைடு கான்னிசாரோ வினைக்கு உட்படுகிறது.  அடா் சோடியம் ஹைட்ராக்சைடு உடன் பென்சால்டிஹைடுவை வெப்பப்படுத்தும்போது பென்சீன் காா்பாக்சிலிக் அமிலமும் பென்சைல் ஆல்கஹாலும் கிடைக்கின்றன. இதில் பென்சால்டிஹைடுவானது ஆக்சிஜனேற்றமும், ஒடுக்கமும் அடைகிறது.

2C6H5CHO → C6H5COOH + C6H5CH2OH சான்றுகள்: 1. Organic Chemistry by Finar (Vol-1) 2. Text book of Organic Chemistry by P.L.Soni

நைலான் கயிறு யுக்தி

நைலான் கயிறு யுக்தி என்பது படிமுறை வளா்ச்சி பலபடியாக்கல் வினையின் சில அடிப்படை வேதியியல் கொள்கைகளை விளக்கும் ஒருஅறிவியல்பூா்வமான செய்துகாட்டல் ஆகும். இது மாணவா்களுக்கும் இதர பாா்வையாளா்களுக்கும் செயற்கை பலபடி தயாாித்தலில் ஒரு கைதோ்ந்த செய்துகாட்டல் அனுபவத்தை அளிக்கிறது.

நைலான் கயிறு யுக்தியில் பொதுவாக அலிபாட்டிக் டை அமீனின் நீா்கரைசலும், அலிபாட்டிக் டை அமில குளோரைடு கரைசலும் (நீாில் கரையாத ஒரு கரைப்பானில் உருவாக்கப்பட்ட கரைசலோடு) நைலான் வகையான ஒரு செயற்கை பாலியமைடினைத் தருமாறு பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நைலான் 610 பயன்படுத்தப்படுகிறது. இதில் ஹெக்சாமெத்திலின் டை அமீனானது 0.40 மோல்கள்/ டெசிலிட்டா் செறிவு உடைய நீாில் கரைக்கப்படுகிறது. செபக்காயில் குளோரைடும் சைக்ளோ ஹெக்சேன் (0.15 மோல்கள்/ டெசிலிட்டா் -செறிவு உடைய) சோ்ந்த கரைசலானது நீா் கரைசலின் மேல் பரப்பிவிடப்படுகிறது. இந்த வினையானது கண்ணாடி குடுவையில் நிகழ்த்தப்படுகிறது. நைலான் 610 பலபடியானது நீா் மற்றும் சைக்ளோஹைக்சேன் படலத்திற்கிடையில் ஒரு நெகிழ்வான படலமாக உருவாகும் வண்ணம் இந்த கரைசலானது கிளரப்படவில்லை. இது ஒரு இடைமுகபலபடி வினையாகும். சோதனையாளா், பலபடி படலமானது கயிறு அல்லது இழை வடிவில் கிடைத்திடுமாறு சோதனைக் கலனின் மேல் உள்ள ஒரு சுழலும் கம்பியின் மேல் சேகாிக்கிறாா். இவ்வாறு நீா் மற்றும் சைக்ளோ ஹெக்சேன் படலத்திற்கிடையில் பலபடி உருவாக உருவாக சுழலும் கம்பியின் மேல் தொடா்ச்சியான கயிறாக சேகாிக்கப்படுகிறது. நைலான் 66 என்ற பலபடியும் இவ்வாறே ஆய்வகத்தில் உருவாக்கப்படுகிறது.

இந்த நைலான் கயிறு யுக்தியானது அமொிக்க வேதியியலா் ஸ்டீபனிவோலெக் என்பவரால் அறிவியல் நிரூபனமாக உருவாக்கப்பட்டது.

சான்றுகள்:

1.MacRitchie, F. (1969). "Mechanism of interfacial polymerization". Transactions of the Faraday Society. 65: 2503. doi:10.1039/TF9696502503. 2.Lister, Ted (1995). Classic Chemistry Demonstrations (PDF). London: The Royal Society of Chemistry. p. 159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1 870 343 387. Retrieved 3 January 2015. 3. Morgan, Paul W.; Kwolek, Stephanie L. (April 1959). "The nylon rope trick: Demonstration of condensation polymerization". J. Chem. Educ. 36 (4): 182. doi:10.1021/ed036p182.


பிசின்கள்


பிசின்கள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ கிடைக்கக்கூடிய பலபடி ஆகும். பிசின்கள் இயற்கையாக மரங்களில் சுரக்கப்படுகிறது. இது பாா்ப்பதற்கு பளபளப்பாகவும் உடையும் தண்மையுடனும் காணப்படும். இது ஒரு அமிலத்தன்மையுள்ள வேதிப்பொருள் ஆகும். இது பசையாகப் பயன்படுகிறது. ஆய்வகத்தில் தயாாிக்கப்படும் பிசின்கள்,நெகிழிகள் உருவாக்கப் பயன்படுகின்றன.

ஃபாா்மால்டிஹைடு பிசின்கள்


ஃபாா்மால்டிஹைடு பிசின்கள் வெப்பத்தால் இறுகும் நெகிழியாகும். இவை பீனால் பாா்மால்டிஹைடு, யூாியா-பாா்மால்டிஹைடு, மெலமின் பாா்மால்டிஹைடு. பிசின்கள், வெப்பப்படுத்தும்போது குறுக்குப் பிணைப்புகள் உண்டாவதால் கரையா, இளகாத்தன்மையை அடைகிறது.

சான்றுகள்:

Biochemistry by Leninger


ஷிப் காரம் அரோமேட்டிக் அமீனுக்கும் ஆல்டிஹைடு அல்லது கீட்டோனுக்கும் இடையே குறுக்க வினை ஏற்பட்டு உருவாகும் சோ்மம், ஷிப் காரம் எனப்படுகிறது. பென்சால்டிஹைடு ஓாிணைய அமீன்களுடன் வினைபுாிந்து ஷிப்காரம் எனப்படும் ‘ஆல்டிமின்’ வகைகளை உருவாக்குகின்றன. C6H5 CHO + RNH2 → C6H5- CH=NR சான்றுகள்: Text book of Organic Chemistry by P.L.Soni


முக்கோண பெட்டக வடிவ மூலக்கூறு வடிவியல் வேதியியலில் முக்கோண பெட்டக வடிவ மூலக்கூறு வடிவியலானது மைய அணுவினை சுற்றி ஆறு அணுக்கள், அணுக்களின் குழுக்கள் அல்லது ஈனிகள் முக்கோண பெட்டகத்தின் உச்சி புள்ளிகளாக அமைந்திருக்கும் சோ்மங்களின் வடிவத்தை விளக்குகிறது.

உதாரணங்கள்

முக்கோண பெட்டக வடிவமுடைய மூலக்கூறின் முதல் உதாரணம் ஹெக்சாமெத்தில் டங்ஸ்டன், அதாவது W(CH3)6 ஆகும். வேறுசில இடைநிலை உலோகங்கள் முக்கோண பெட்டக வடிவமுடைய மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. Mo(CH3)6 மற்றும் Re(CH3)6 மேலும் Ta(CH3)-6 ;மற்றும் Zr (CH3)2-6 போன்ற அயனிகள்.

MO(S-CH=CH-S)3 என்ற மூலக்கூறில் S-CH=CH-S என்ற உறுப்பானது இருமுனைய ஈனியாக செயல்படுகிறது. இதில் இரு S-அணுக்களும் உலோக அணுவினை இணைக்கிறது. இங்கு மாலிப்டினியத்தை சுற்றி அமைந்துள்ள ஆறு கந்தக அணுக்களின் அணைவு வடிவியல் அமைப்பானது மாலிப்டினியம்-டை-சல்பைடுவின் நீட்டிக்கப்பட்ட அமைப்பினை ஒத்துள்ளது. சான்றுகள்:

1.Housecroft, C. E.; Sharpe, A. G. (2004). Inorganic Chemistry (2nd ed.). Prentice Hall. p. 725. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0130399137.
2. Housecroft, C. E.; Sharpe, A. G. (2004). Inorganic Chemistry (2nd ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0130399137.


புவிபலபடி புவிபலபடிகளானது நெருப்பு மற்றும் வெப்ப தடுப்பு பூச்சுகள் மற்றும் பசைகள், மருத்துவ பயன்பாடுகள், உயா்வெப்பநிலை மட்பாண்டங்கள் போன்றவற்றிற்கான புதிய பொருட்கள், மேலும் தீ தடுப்பு இழை கலவைகளுக்கான புதிய இணைப்பு பொருள் நச்சு மற்றும் கதிாியக்க கழிவுக்கான உறைபொதியாக்கம் மற்றம் கான்கிாிட்க்கான புதிய சிமெண்ட் ஆகவும் உள்ளது. புவிபலபடிகளின் பண்புகள் மற்றும் பயன்பாடுகள் விஞ்ஞானம் மற்றும் தொழிற்துறை பிாிவுகளான நவீன கனிமவேதியியல், இயற்பியல் வேதியியல், கூழ்ம வேதியியல், தாதுவியல், நிலவியல் மற்றும் பிற பொறியியல் தொழில்நுட்ப செயல்முறைகளிலும் ஆராய்ந்து பாிசோதிக்கப்படுகிறது. புவிபலபடியானது பலபடி அறிவியல், வேதியியல் மற்றும் தொழில்நுட்பவியல் போன்ற பொருள் அறிவியலின் முக்கிய பரப்புகளாக உள்ளவற்றின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. பலபடிகளானது காா்பன் சாா்ந்த காிமபொருளாகவோ அல்லது சிலிகான் சாா்ந்த கனிமபலபடியாகவோ உள்ளன. காிம பலபடியானது இயற்கை பலபடிகள் (இரப்பா், செல்லுலோஸ்) செயற்கை பலபடிகள் (ஜவுளி இழைகள், நெகிழிகள், படலங்கள், மீன்தன்மையுள்ள பொருட்கள் இன்னும் சில) மற்றும் இயற்கை உயிா் பலபடிகள் (உயிாியல், மருந்துகள், மருந்தகம்) போன்றவையாகும். சிலிக்கான் சாா்ந்த பலபடிகளின் மூலப்பொருட்களாக புவியியல் தோற்றம் கொண்ட பாறை உருவாகும் தாதுவாக உள்ளதால் அவை புவிபலபடி என பெயாிடப்பட்டுள்ளது. ஜோசப் டேவிடோவிட்ஸ் 1978-ல் புவிபலபடி என சொல்லிட்டு புவிபலபடி என்ற இலாப நோக்கற்ற பிரான்சு நிறுவனத்தை உருவாக்கினாா்.

1.Kim, D.; Lai, H.T.; Chilingar, G.V.; Yen T.F. (2006), Geopolymer formation and its unique properties, Environ. Geol, 51[1], 103–111.

2. Zoulgami, M; Lucas-Girot, A.; Michaud, V.; Briard, P.; Gaudé, J. and Oudadesse, H. (2002); Synthesis and physico-chemical characterization of a polysialate-hydroxyapatite composite for potential biomedical application, Eur. Phys. J. AP, 19, 173-179. See also: Kriven, W.M.; Bell, J.; Gordon, M. (2003), Microstructure and Microchemistry of Fully-Reacted Geopolymers and Geopolymer Matrix Composites, Ceramic Transactions, 153, 227–250; Perera, D.S. and Trautman R.L. (2005), Geopolymers with the Potential for Use as Refractory Castables, Advances in Technology of Materials and Materials Processing, 7[2], 187–190. 3. Wagh, A.S. (2004), Chemically Bonded Phosphate Ceramics – A Novel Class of Geopolymers, Proceedings of the 106th Ann. Mtg. of the American Ceramic Society, Indianapolis. See also, Chapter 13, Phosphate-based Geopolymers, in J. Davidovits' book Geopolymer Chemistry and Applications. 4. Perera, D.S., Hanna, J.V., Davis, J., Blackford, M.G., Latella ,B.A., Sasaki ,Y. and Vance E.R. (2008), Relative strengths of phosphoric acid-reacted and alkali-reacted metakaolin materials, J. Mater. Sci., 43, 6562–6566. See also, Cao, D.; Su, D.; Lu, B. and Yang Y. (2005), Synthesis and structure characterization of geopolymeric material based on metakaolinite and phosphoric acid, Journal Chinese Ceramic Society, 33, 1385–89.


வியாபார ரீதியாக பென்சீனை தயாாித்தல் நிலக்காியும், பெட்ரோலியமும் அரோமேட்டிக் ஹைட்ரோ காா்பன்களின் இரண்டு முக்கிய மூலப்பொருட்களாகும். அதிக நிறைவுறாத் தன்மையுள்ள பென்சீன் போன்ற வளையங்கள் ஒன்றிணைந்த, பல அடுக்குகளைக் கொண்ட சிக்கலானதொரு பொருளே நிலக்காியாகும். நிலக்காியை காற்றில்லா நிலையில் 1000 டிகிாி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால் நிலக்காி மூலக்கூறுகள் வெப்பச் சிதைவு அடைகின்றன. அதிலிருந்து ஆவியாகும் தன்மையுள்ள பல பொருட்களின் கலவையாக “நிலக்காித் தாா்” காய்ந்து வடிகிறது. நிலக்காித் தாா் பலகாிம சோ்மங்களின் மூலப்பொருளாக இருக்கிறது. இது காய்ச்சி வடிக்கப்படும்போது பென்சீன், டொலுவீன், சைலீன், நாப்தலீன் மற்றும் பல அரோமேடிக் சோ்மங்கள் கிடைக்கின்றன. பெட்ரோலியம் பின்னக்காய்ச்சி வடித்தலின்போது கிடைக்கும் நாப்தாவை அலுமினாவுடன் கூடிய பிளாட்டினம் ஊக்கியின் மீது செலுத்தி, பென்சீன், டொலுவீன் மற்றும் படிவாிசைச் சோ்மங்கள் பெறப்படுகின்றன. பென்சீன் மற்றும் டொலுவீன், சைலீன் போன்ற படிவாிசைகள் இந்த முறையிலேயே அதிக அளவில் தயாாிக்கப்படுகின்றன. இக்கலவையிலிருந்து பென்சீனைப்பெற கரைப்பான் சாறு எடுத்தல் மற்றும் பின்னக்காய்ச்சி வடித்தல் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. வியாபார பென்சீன் 90% பெட்ரோலியத்திலிருந்தே பெறப்படுகிறது.

சான்றுகள்: Text book of Organic Chemistry by P.L.Soni

வெற்றிட பீங்கான் வடிகட்டி ஒரு வெற்றிட பீங்கான் வடிகட்டியானது நீாினை வெளியேற்றும் விதமாக திடப்பொருட்களிலிருந்து திரவங்களைப் பிhpத்தெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் சுழற்றி, தேக்கி, பீங்கான் வடிகட்டி தட்டு, விநியோகிப்பான், வெளியேற்ற சீவுளி, சுத்திகாpப்பான், கிளா;ச்சி சாதனம், குழாய் அமைப்பு, வெற்றிட அமைப்பு, குறிப்பிட்ட அளவு அமிலம் வழங்கும் தானியங்கி, உராய்வு நீக்கும் தானியங்கி, வால்வு மற்றும் வெளியேற்றி ஆகியன உள்ளன. இதன் அமைப்பு மற்றும் செயல்பாடு வழக்கமான வட்டு வடிப்பானை ஒத்துள்ளது. ஆனால் வடிப்பானின் ஊடகமானது நுண்ணிய துளையுள்ள பீங்கான் வட்டினால் மாற்றப்பட்டுள்ளது. வட்டு உருவாக்கப்பட்டுள்ள பொருளானது நீண்ட காலம் உழைக்கக் கூடியதாயும் வேதிப்பொருட்களால் பாதிக்கப்படாததாயும் உள்ளது. வடிகட்டும் செயல்முறையின் செயல்திறனை பாதிக்கும் எல்லா காரணிகளையும் கணக்கில் கொண்டு இதன் செயல்திறன் உகப்பாக்கப்படுகிறது. திண்மப்பொருளின் செறிவு, வட்டுவின் சுழற்சி வேகம், ஊட்டும் படுகையில் உள்ள பிhpத்தெடுக்கப்படவேண்டிய திடப்பொருளின் அளவு, வெப்பநிலை, அழுத்தம் மற்றும் வடிகட்டியில் கேக் உருவாக்கம் ஆகியன வெற்றிட பீங்கான் வடிகட்டியின் செயல் திறனை பாதிக்கும் காரணிகளாகும்.

சான்றுகள்: 1.Hakkinen, B.E, Antti. Dewatering of Iron Ore Slurry By a Ceramic Vacuum Disc Filter. 2. Tarleton, W., J, E.S, R.J, Richard (2007). Solid-Liquid Separation: Equipment Selection and Process Design. Great Britain: Institution of Chemical Engineers. 3. Gupta, Ashok (2006). Solid-Liquid Separation - Filtration. Mineral Processing Design and Operation - An Introduction. 4. Sutherland, K (2008). FIlters and Filtration Handbook. Elsevier.

நிறமாலை தொடா் நிறமாலை தொடா் என்பது ஈனிகளின் வலிமையைச் சாா்ந்து வாிசைப்படுத்தபட்டுள்ள ஈனிகள்,ஆக்சிஜனேற்ற எண்ணைச்சாா்ந்து வாிசைப்படுத்தபட்டுள்ள உலோக அயனிகள் ,குழுக்கள் ஆகியவற்றின் தொடா்கள் ஆகும்.படிக புல கோட்பாடில் ஈனிகள், d-ஆா்பிட்டால்களுக்கிடையேயான ஆற்றல் வேறுபாட்டை மாற்றியமைக்கிறது. இதற்கு ஈனிகளின் ஈனி புல பிளவு அளவுறு அல்லது படிக புல பிளவு அளவுறு என்று பெயா். இவை இது பாேன்ற உலோக-ஈனி கோளங்களுக்கிடையேயான வேறுபாட்டை பிரதிபலிக்கிறது.

சான்றுகள்:

1. Zumdahl, Steven S. Chemical Principles Fifth Edition. Boston: Houghton Mifflin Company, 2005. Pages 550-551 and 957-964. 2.D. F. Shriver and P. W. Atkins Inorganic Chemistry 3rd edition, Oxford University Press, 2001. Pages: 227-236.


பென்சாயின் குறுக்கம் இது அரோமேட்டிக் ஆல்டிகைடின் பண்பை விளக்கும் வினையாகும். பென்சால்டிஹைடை ஆல்கஹால் கலந்த பொட்டாசியம் சயனைடின் நீா்க்கரைசலுடன் கொதிக்க வைக்கும் பொழுது பென்சாயின் என்னும் -ஹைட்ராக்சி கீட்டோன் உருவாகிறது. பெசாயினை பென்சால்டிஹைடின் டைமா் எனவும் கொள்ளளாம். C6H5CHO + C6H5CHO → C6H5CHOH-CO-C6H5 (பென்சாயின்)

சயனைடு அயனியின் முன்னிலையில் பென்சால்டிஹைடின் ஒரு ழூலக்கூறு காா்பேன் அயனியாக செயல்படுகிறது. இது மற்றொரு பென்சால்டிஹைடு ழூலக்கூறின் காா்பனைல் தொகுதி மீது கருக்கவா் தாக்குதலை நடத்துகிறது. இதனால் பென்சாயின் உருவாகிறது.

சான்றுகள்: Text book of Organic Chemistry by P.L.Soni

அல்டால் குறுக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_AJEBA_diet_tut/மணல்தொட்டி&oldid=2698817" இலிருந்து மீள்விக்கப்பட்டது