பயனர்:Thiruvennainallur/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவெண்ணெய் நல்லூர்

திருவெண்ணெய் நல்லூர் பற்றி கல்வெட்டு ( A.R.E. 1902 - No. 309 - 319; A.R.E. 1921 -420 - 483, S.I.I.Vol. VII No. 938 - 948; S.I.I.Vol.XII The Pallavas.):- திருவெண்ணெய் நல்லூர்த் தடுத்தாட் கொண்ட தேவரது திருக்கோயிலில்,

சோழ மன்னர்கள்

முதலாம் இராஜராஜ சோழன் , கோப்பரகேசரி பன்மரான இராஜேந்திர சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராச சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் இராசராச சோழன் , மூன்றாம் இராசேந்திர சோழன் இவர்கள் காலங்களிலும்;

பாண்டிய மன்னர்கள்

ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியதேவன், விக்கிரம பாண்டிய உடையான் இவர்கள் காலங்களிலும்;

பல்லவமன்னர்கள்

முதலாம் கோப்பெருஞ் சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இவர்கள் காலங்களிலும்,

விஜய நகரப் பேரரசு

மகாமண்டலேஸ்வரன் வீரபூபதி , விஜயமகாராயர், விரூபாட்சுமகாராய, குமாரமல்லி கார்ச்சுனராய, கிருஷ்ணதேவராயஉடையார் இவர்கள் காலங்களிலும்,

சாளுவ மன்னர்கள்

மகாமண்டலேஸ்வரன் நரசிங்கதேவமகாராயர் காலங்களிலும், செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

``இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள`` முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வூர், திருவெண்ணெய்நல்லூர் என்றும், கோப்பரகேசரிபன்மரான இராஜேந்திரதேவர் கல்வெட்டில் இராஜேந்திரசோழ வளநாட்டுத் திருமுனைப்பாடித் திருவெண்ணெய் நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும், இரண்டாம் இராசாதிராசன் காலம் முதல் பின்னுள்ளோர்காலம்வரை இராசராச வளநாட்டுத் திருமுனைப்பாடி திருவெண்ணெய்நல்லூர் நாட்டுப் பிரமதேயம் திருவெண்ணெய் நல்லூர் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளது.


'திருவெண்ணெய் நல்லூர் சிறப்புகள்:-'


வள்ளல் சடையப்பர்:-

கம்பரை வளர்த்து ராமாயணம் அரங்கேற்ற உதவியவர். ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று புதுச்சேரி கல்வெட்டு சொல்கிறது. திருவெண்ணெய் நல்லூரின் அரசர்

கம்பர்:-

சோழநாட்டு தெரெழுந்தூரில் பிறந்த கவிக்கம்பரை சிறுவயது முதலே தத்தெடுத்து வளர்த்து ராமாயணம் அரங்கேற்ற உதவியவர் அப்போதைய திருவெண்ணெய் நல்லூரின் மன்னரான உடையார் சடையப்ப வள்ளல் . அந்த நன்றிக் கடனிற்காக 10 பாட்டிற்கு ஒரு பாட்டென கம்பராமாயணத்தில் திருவெண்ணெய்நல்லூர் உடையார் சடையப்பர் என்ற வள்ளலை போற்றி பாடினார் கம்பர். ஆனால் ஒட்டக்கூத்தன் அதனை ஏற்காமல் அவையில் கலகம் செய்ததால் 100 ற்கு ஒன்றாக மாற்றியும் ஒப்பாமல், 1000 பாட்டிற்கு ஒரு பாடல்வீதம் மாற்றிவிட்டு சொன்னார் கம்பர்,,,,,,,

என்னப்பன் சடையப்பன் 10ல் ஒருவனாய், நூறில் ஒருவனாய்தான் நான் நினைத்தேன் ஆனால் அவன் ஆயிரத்தில் ஒருவனென உலகிற்கு உணர்த்திவிட்டீரென,,,,,

2

இராமனிற்கு பட்டாபிஷேகம் சூட்டுகையில் இன்னின்னார்க்கு இந்த பதவி பொறுப்புகள் வழங்கப்பட்டதில்,,,,,

அரியனை அனுமன் தாங்க

அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன் வெண்குடை கவிக்க 

இருவரும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க

திருவெண்ணையூர் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி

வசிட்டனே புனைந்தான் மௌலி.

திருவெண்ணெய்நல்லூர் வள்ளல் பெருமானாகிய உடையார் குடியில் பிறந்த சடையப்ப வள்ளலின் மரபில் தோன்றிய முன்னோரின் கையால் உலகையே ஆளும் தகுதியை பறைசாற்றும் விலையுயர்ந்த முத்து பவளம் மாணிக்கம் வைரம் வைடூரியமென அனைத்தும் பதிக்கப்பட்ட பொன்னாலான மணிமகுடத்தை எடுத்துக்கொடுக்க குருவான வசிட்டர் ராமனுக்கு முடிசூட்டினார். என்ற பெருமையை உடையவர்கள் எம் மக்கள்.

3.

மோட்டெருமை வாவிபுக முட்டுவறால் கன்றென்று 

வீட்டளவும் பால் சொறியும் திருவெண்ணையே

நாட்டில் அடையா நெடுங்கதவும்

அஞ்சலென்ற சொல்லுமில்லா

உடையான் சடையன் வாழ்ந்த ஊர்.

பொருள்:-

மாபெரும் மடியினையுடைய பசுவானது ஏரியில் இறங்கி நீர்பருகையில் விறால் மீன்கள் மடியினை உரச, தன் கன்றுதான் பாலிற்கு மடியினை இடிப்பதாய் நினைத்து தானாய் பால்சுரக்க, உண்மை உணர்ந்து வீட்டிற்கு ஓடுகையில் தெருமுழுதும் பால் சுரந்து ஊற்றிக்கொண்டே ஓடி கன்றிற்கு பாலூட்டுமாம்.அப்படிப்பட்ட நீர்வளம் நிலவளம், முதல்மக்களின் மனத்தினைக் கூறுகையில்,,, எப்போதும் திறந்தே கிடக்கும் நெடுங்கதவும் யார் எப்போது வந்து கேட்டாலும் இல்லையெனச் சொல்லாமல் உதவும் குணமும், வாய்த்த மக்களுக்கு தலைவணாகிய சடையப்ப வள்ளல் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஊர்.

சடையப்ப வள்ளலால் நன்கு பலகாலும் ஆதரிக்கப்பட்ட கம்பர் தன் இறுதிக் காலத்தில் வள்ளல் ஆதரித்த திறத்தையெல்லாம் ஒரு வெண்பாவாகப் பாடினார். அப்பாடல்,

ஆன்பாலும் தேனும் அரம்பைமுதல் முக்கனியும்

தேன்பாய உண்டு தெவிட்டுமனம் - தீம்பாய்

மறக்குமோ வெண்ணை வருசடையா கம்பன்

இறக்கும்போ தேனும் இனி

ஆழ்வார்களைப் போல கம்பர் திருமாலை மட்டுமே புகழ்ந்து  மற்ற கடவுள்களை –ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும், சேக்கிழாரும் திட்டித்தீர்த்ததுபோல- திட்டவில்லை என்பது மட்டுமல்ல, சைவத்திற்கும் வைணவத்திற்கும் தீராப்பகை வளர்த்துப் பக்திஇலக்கியம் எழுதப்பட்ட

காலத்திலேயே திருமாலுக்கான இராமாவதாரத்தில் சிலநூறு இடங்களில் சிவனைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்! அதுவும்

“அரன்அதிகன் உலகளந்த

அரிஅதிகன் என்றுரைக்கும்

அறிவிலோர்”

என்று ஏதோ பக்திக்கு அப்பாற்பட்டுப் பாடுவதுபோலவே கம்பர் சொல்வதை காணமுடிகிறது.

இதன் விளைவு என்னவெனில், இராமாவதார நூலை அரங்கேற்றம் செய்ய, வைணவர்கள் திருவரங்கத்தில் சிக்கல்செய்தால், சைவர்கள் சிதம்பரத்தில் செய்தனர், இறுதியாகக் கம்பர், முதலில் மக்கள் மன்றத்தில் - திருவெண்ணெய் நல்லூரிலேயே சடையப்ப உடையாரின் தலைமையில்- அரங்கேற்றிய சிறப்பு வரலாறும் உண்டு.

சுந்தரர் :-

நாயன்மார்களில் முக்கியமான சுந்தரர்பெருமானின் திருமணத்தினை தடுத்து வழக்கிலே வென்று அவரை ஆட்கொண்ட பெருமானைப் பற்றி,,,,

பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா

எத்தான் மறவாதே நினைக்கின்றேன்

மனத்து உன்னைவைத்தாய் பெண்ணைத்

தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள் 

அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.

(ஏழாம் திருமுறை, 7225)

பொன்னும் பொருளும் முத்தும் பவளமும் வைர வைடூரியங்களை வாரி வழங்கிய வள்ளல் நிறைந்த பூமியாம். அதற்கான உவமையை காட்டும் பாடலில் இருந்து.

மன்னேமற வாதேநினைக்

கின்றேன்மனத் துன்னைப்

பொன்னேமணி தானேவயி

ரம்மேபொரு துந்தி

மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்

அன்னேஉனக் காளாய்இனி

அல்லேன்என லாமே.

பொருள்:-

தலைவனே , கரையை மோதி , பொன்னும் மணியும், வயிரமும் ஆகிய இவற்றைத் தள்ளிக்கொண்டு , ஒளிமிக்கு வருகின்ற பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின் கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண்எழுந்தருளியுள்ள தாய் போன்றவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி ,இப்பொழுது , `அடியவன் அல்லேன்` என்று எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! இனிமேல் , உன்னை என் மனத்தில் ஒருபோதும் மறவாமலே நினைப்பேன்.

எனப்பாடி அருளியுள்ளார்.

மெய்கண்டார்:-

உலகிற்கே சிவஞானபோதம் அருளிய மகா சித்தர் மெய்கண்டார்,,,,

மெய்காண்டார் வரலாறு

தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே உள்ள நாடு நடுநாடாகும்; திருமுனைப்பாடி நாடு என்றும் வழங்கப் பெறும். திருநாவுக்கரசரும் நம்பியாரூரரூம் இந்நாட்டில் அவதரித்தவர் ஆவர்.

“அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும்

பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில்

சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு”

(திருநாவுக்கரசு நாயனார் புராணம் பாடல் 11)

என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டில் பெண்ணாகடம் என்பது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும். விருத்தாசலத்திலிருந்து. தென்மேற்கில் 17 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. தேவ கன்னியர், காமதேனு, வெள்ளை யானை (பெண்+ஆ+கடம்) ஆகியவை வழிபட்டதால் பெண்ணாகடம் என ஆயிற்று என்பது தலபுராணச் செய்தி. கடந்தையர் – வீரமக்கள் – வாழ்ந்தால் கடந்தை நகர் என்ற பெயர் ஏற்பட்டது. தூங்கானை மாட அமைப்பில் கோயில் உள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பர் இத்தலத்தில் தோன்றியவர் ஆவார்.

பெண்ணாகடத்தில் சைவ வேளாள மரபில் அச்சுதக் களப்பாளார் என்பவர் வாழ்த்து வந்தார். வாழ்க்கையில் எல்லாச் செல்வங்களும் நிறைந்திருந்த போதிலும் மக்கட்செல்லவம் இல்லாத பெருங்குறை. அவருக்குக் கற்பில் சிறந்த மனைவி வாய்க்கப் பெற்றிருந்தார். திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் உடன் பிறந்தவள் இவ்வம்மையார் என்பது மறைமலை அடிகளார் கருத்தாகும். அக்காலத்தில் திருவதிகையின் வடக்கேயுள்ள திருத்துறையூரில் சகலாகம பணடிதர் என்பவர் சிறந்து விளங்கினார். சைவத்தையும் சித்தாந்தத்தையும் அடியார் பலருக்கு முறையாக உபதேசித்துவந்தார்; பலருக்குச் சிவதீக்கை செய்து வைத்தார்; பலருக்குக் குலகுருவாக விளங்கினார். மெகண்டார் திருவெண்ணெய்நல்லூரில் தோன்றினார் என்பதற்கு அகச்சான்றுகள்:

மெய்கண்டாரின் மாணாக்கர் அருள்நந்தி சிவாச்சாரியார் மெய்கண்டாரைக் குறிப்பிடும் போதெல்லாம் திருவெணெய் நல்லூருடன் தொடர்புபடுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

கண்ணகன் ஞாலத்துக் கதிரவன் தானென

வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ

(இருபா இருபஃது – 2)

2. வெண்ணெய்த் தோன்றி நண்ணியுள் புகுந்து

(இருபா இருபஃது – 6)

என இரண்டு இடங்களில் வெண்ணையில் தோன்றியதாகவே அருணந்தி சிவாச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். மதுரைச் சிவப்பிரகாசரும் உரையில் திருவெண்ணெய் நல்லூரில் தோன்றியருளியதாகவே குறிப்பிட்டுள்ளார்.

சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம்

“உயர்சிவ ஞானபோதம் உரைத்தோன்

பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்

பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன்”

என்று குறிப்பிடுகிறது.

சிவஞான முனிவர் இப்பகுதிக்கு உரை எழுதம் போது திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்து அருளிய சுவேதவனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாமம் உடையான் என்றே உரைவகுத்துள்ளார்.

“விண்டமலர்ப் பொழில்புடை சூழ் வெண்ணெய் மேவு

மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன்

(சிவஞான சித்தியார் பரபக்கம் பாயிரம்)

5. மின்னமர் பொழில் சூழ் வெண்ணெய்

மேவிவாழ் மெய்கண்டான்

(சிவஞான சித்தியார் சுபக்கப் பாயிரம்)

எனச் சித்தியாரிலும் திருவெண்ணெய் நல்லூரோடு மெய்கண்டார் சேர்த்துக் கூறப்பட்டுள்ளார். என்வே, மெய்கண்டார் அவதரித்த ஊர் திருவெண்ணெய் நல்லூர் ஆகும். வேறு சாத்திர நூல்களில் மெய்கண்டாரைப் பெண்ணாகடம், திருவெண்காடு ஆகிய ஊர்களோடு சேர்த்துக் கூறப்படவில்லை.

ஞானகுரு உபதேசம்

திருவெண்ணெய் நல்லூரில் குழந்தை வளர்ந்துவரும் போது இரண்டாண்டு முடிவுற்று, மூன்றாம் ஆண்டு தொடங்கியது. கயிலாயத்திலிருந்து பரஞ்சோதி முனிவர் வான் வழியாகத் தெற்கு நோக்கிச் சென்றார். குழந்தை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தபோது முனிவருடைய வான்வழிச் செலவு தடைப்பட்டது. உடனே முனிவர் நடைபெறுப்போவதை உணர்ந்து பூமியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு உபதேசம் செய்தார். குழந்தைக்குத் தம் ஞானகுருவான சத்தியஞானதரிசினிகள் என்பதனைத் தமிழில் மெய்கண்டார் எனத் தமிழ் மரபுக்கேற்ப மாற்றியமைத்து வழங்கினார் சைவசித்தாந்தக் கொள்கைகள் தமிழகத்தில் நிலைபெற்று விளங்குமாறு நூல் ஒன்றைச் செய்யுமாறு உரைத்து விட்டு முனிவர் தம் பயணத்தைத் தொடங்கினார்.

“பின்னர்க் குழந்தையாகிய மெய்கண்டார் தாம் வழிபடுகின்ற திருவெணெய் நல்லூர்ச் சிவாலயத்திலுள்ள பொல்லாப் பிள்ளையார் சந்நிதியில் சென்றிருந்து ஞானநிட்டை கூடிச் சிவானுபவம் பெற்று, அதன் பயனாக ஏது திருட்டாந்தங்களோடு சிவஞான போதம் என்ற சைவசித்தாந்த சாத்திரத்தைத் தமிழ் மொழியில் முதன் முதலாகச் செய்தார் என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் மு.அருணாச்சலம் குறிப்பிட்டுள்ளார்.

மெய்கண்டாரும் சித்தாந்த உண்மைகளைப் பலருக்கும் போதித்துவந்தார். பலரும் இவரிடம் வந்து சைவசமய உண்மைப் பொருள்களைத் தெரிந்துகொள்ள முயன்றனர்.

அருள்நந்தியாரை ஆணவத்தின் வடிவமென்று சுட்டி இருப்பாரா?

அருள்நந்தி சிவாச்சாரியார் திருவெணெய் நல்லூரில் இருந்த தம் மாணாக்கர்களைக் காணும்பொருட்டு துறையூரிலிருந்து திருவெணெய் நல்லூர் வந்து சேர்ந்தார் மாணாக்கர், வீதி ஒப்பனை செய்து ஞானகுருவைச் சிறப்பாக வரவேற்றனர். மாணாக்கர் பலரும் அவரைக் கண்டு வணங்கி வாழ்த்துப் பெற்றுச் சென்றனர். அக்காலத்தே பெண்ணாகடத்து வாழ்ந்தவரும் தம்முடைய மாணாக்கருமான அச்சுதக்களப்பாளருக்கு மகனாகத் தோன்றிய மெய்கண்டார் தம்மை வந்து காணாமையைத் தெரிந்துகொண்டார் மெய்கண்டார் சைவசித்தாந்தத்தைச் சிறப்பாகச் சொல்வதைக் கேள்விப்பட்டு வியப்புற்றார். எனினும், தம்மை வந்து காணாத்தால் உள்ளத்தே அழுக்காறு தோன்றிற்று, உடனே மெய்கண்டார் சைவசித்தாந்தம் சொல்லும் இடத்திற்குச் சென்றார். இவரங்குச் சென்றதபோது மெய்கண்டார் மாணக்கரோடு ஆணவமலத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். இவர் சென்றதை மெய்கண்டார் கண்டுகொள்ளவில்லை. அழுக்காற்றால் உள்ளம் வெதும்பிக் கோபமுற்று “ஆணவத்தின் சொரூபம் யாது”? என்று மெய்கண்டாரைக் கேட்டார். அவர் உடனே எவ்விதத் தடையுமின்றி முகமலர்ந்து புன்முறுவல் செய்து தம் வலக்கைச் சுட்டுவிரல் நீட்டிச் சகலாகம் பண்டிதரையே சுட்டிக் காட்டினார்.

உண்மையுணர்ந்த சகலாகம பண்டிதர் கீழே விழுந்து வணங்கி, மெய்கண்டாரைக் குருவாக ஏற்றுக் கொண்டார் என்று சைவ சந்தானாச்சாரியார் புராணம் குறிப்பிடுகிறது. இது ஒரு பொய்க்கதையாகும். வேறு எங்கும் இதற்கு ஆதாரமில்லை. ஔவை.சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள், “அருணந்தி சிவாச்சாரியாருடைய அழகிய ஞான உரைகளை நாம் இன்று படிக்கின்றோம், பயன் துய்க்கின்றோம். அவற்றை நினைக்கும் போது இவ்வரலாற்றுக் குறிப்பு மெய்ம்மையோடு படாத பொய்க் குறிப்பு என்று நமது உள்ளத்தில் நன்கு தோன்றுகிறது” என்று குறிப்பிடுகிறார்.

மெய்கண்டார் மாணாக்கர்

மெய்கண்டார்க்கு நாற்பத்தொன்பது மாணாக்கர் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். தலையாய மாணக்கர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். ,மற்றொரு மாணாக்கர் மனவாசகம் கடந்தாராவார். அருணந்தி சிவாச்சாரியார் சிவஞானபோதத்திற்கு விளக்கமாகச் சிவஞான சித்தியார் என்னும் நூலைச் செய்துள்ளார். அருணந்தி சிவாச்சாரியாரும் மெய்கண்டாரை வினவும் முறையில் இருபா இருபஃது என்ற நூலைப் பாடியுள்ளார். சிவஞான போதத்தைச் செய்து, சைவத்திற்குப் பெருமை சேர்ந்த மெய்கண்டார் ஓர் ஐப்பசித் திங்கள் சுவாதி நட்சத்திரத்தன்று இறைவன் திருவடியடைந்தார்.

2.மெய்கண்டார் காலம்

மெய்கண்டார் சிவஞான போதத்தைச் செய்து உபதேசித்து வருகையில் தமிழ்நாடெங்கும் அவர் புகழ் பரவியது. திருவண்ணாமலையில் அக்காலத்தில் கோளகிமடமொன்று செல்வாக்குப் பெற்றிருந்தது. மெய்கண்டார் மடத்தின் தலைவராக இருந்து சைவ சித்தாந்தத்தைப் போதித்து வந்தார். செல்வர்பலர் மெய்கண்டாரிடம் சைவசித்தாந்தம் கேட்டுச் சிறப்புற்றனர். அவர்களில் ஊருடைய பெருமாள் என்பவரும் ஒருவர். அடுத்தது வலியவேளார் என்றும் அவருக்கு பெயருண்டு. திருவண்ணாமலைக்கு அண்மையில் மாத்தூர் என்று ஓர் ஊருண்டு. அவ்வூர் திருவண்ணாமலைக்கு தேவதானமான மாத்தூரில் கோயிலாரிடம் ஆணைபெற்றுப் புதிதாக ஏரி ஒன்றை வெட்டினார். அதற்குத் தம் ஞான குருவான மெய்கண்டார் பெயரில் மெய்கண்ட தேவப் புத்தேரி என்று பெயரிட்டார். இந்த ஏரியின் கீழ்ப் பகுதியில் அவ்வேளாளரே சிவன் கோயில் ஒன்றையும் கட்டி, அதற்கு மெய்கண்டீச்சுரம் என்றும் பெயரிட்டார். மெய்கண்டாருடைய சிறப்பையும் மாணாக்கர் சிவத்தொண்டையும் கண்ட கோயிலார் அவ்வேரியின் கீழுள்ள நிலங்களை மெய்கண்டீச்சுரம் உடைய பெருமானுக்குத் தேவதானமாக விடவேண்டும் என்று எண்ணி, அக்கால அரசனிடம் வேண்டினர். அக்காலத்தில் ஆட்சி செய்த சோழ மன்னன் திரிபுவன சக்கரவர்த்திகள் மூன்றாம் இராசராசன் ஆவான். அரசனும் மனம் மகிழ்ந்து மாத்தூருக்கு இராசராசநல்லூர் என்று பெயரிட்டு ஆணை வழங்கினான்.

“ஸ்வஸ்தி ஸ்ரீதிரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ ராசராச தேவர்க்கு யாண்டு 16 ஆவது இஷபநாயிற்று இருபத்தெட்டாந்தியதியும் சனிக்கிழமையும் பெற்று மிருக சீரிடத்து நாள் உடையார் திருவண்ணாமலை உடைய நாயனார் கோயில் சீமாகேஸ்வரக் கண்கானி செய்வார்களும் தேவர்கன்மி கோயில் கணக்கனும், திருவெணெய் நல்லூருடையான் மெய்கண்ட தேவன் ஊருடைய பெருமாளான அடுத்தது வலிய வேளாளார்க்குக் கல்வெட்டிக் கொடுத்த பரிசாவது………….. இவ்விராசராச நல்லூரில் எழுந்தருளுவிக்கின்ற உடையார் மெய்கண்டீசுரமுடைய நாயனார்க்குப் பூசைக்கும் அமுதுபடிக்கும் மூன்றில் என்று தேவதானமாகவும்…………………………….. இப்படிச் சம்மதித்துக் கல்வெட்டிக் கொடுத்தோம் இவ்வாணையோம். இது பன்மாஹோஸ்வர ரஷை” என்பது கல்வெட்டாகும். இக்கல்வெட்டு மூன்றாம் இராசராசனுடைய 16 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். மூன்றாம் இராசராசன் கி.பி. 1216 முதல் 1256 வரை ஆட்சி செய்த சோழ மன்னனாவான். இக்கல்வெட்டின் காலம் 1216 + 16 = 1232 ஆகும்.

மெய்கண்டாருக்குப் பின் அருணந்தி சிவாச்சாரியார், அவர் மாணாக்கர் மறைஞான சம்பந்தர், அவர் மாணாக்கர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். உமாபதி சிவாச்சாரியார் சங்கற்ப நிராகரணம் என்ற நூலை அருளிய காலம், “ஏழஞ்சு இருநூறு எடுத்த ஆயிரம் வாழும் நற்சகம்” எனக் குறிப்பிடப் பெறுகிறது. இது சகம் 1235 ஆகும். சக ஆண்டோடு 78ஐக் கூட்டினால் கி.பி ஆண்டு வரும். எனவே 1235+78 = 1313. இவ்வாண்டு சங்கற்ப நிராகரணம் பாடிய காலமாகும். உமாபதி சிவாச்சாரியார்க்கு மூன்று தலைமுறை முற்பட்டவர் மெய்கண்டார். எனவே 75 ஆண்டுக்கு ஏறக்குறைய முற்பட்டவர் ஆவார். 1313 – 75 = 1238, 1238 ஐ ஓட்டிய காலம் மெய்கண்டார் காலமாக இருக்கலாம். கல்வெட்டுக் கூறும் 1232ம் இதற்குப் பக்கத்தில் உள்ளது. எனவே கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி மெய்கண்டார் காலமாகலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thiruvennainallur/மணல்தொட்டி&oldid=2461754" இலிருந்து மீள்விக்கப்பட்டது