பயனர்:Thillai Gowri

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது பெயர் கௌரி, எனது ஊர் தில்லையம்பூர் ஒரு அழகான கிராமம். குடமுரட்டி ஆற்றின் தண்ணீரை பருகி வளர்ந்தவள். எங்கள் ஊர் அமைதியானது, அருமையானது, நான்கு பக்கமும் பச்சை பசேல் என்று இருக்கும். சுத்தமான காற்றை சுவாசித்து வளர்ந்தவள். இப்பொழுது நான் உங்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலை பற்றி கட்டுரை எழுதப் போகிறேன். இன்று துவக்கம் மட்டுமே செய்கிறேன்.

        இதோ... திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் வரதராப்பேட்டை மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கு காவடிகள் நேர்த்திக் கடன் செலுத்தப்படுகிறது. கோவில்களில் காவடி எடுப்பது என்பது வழக்கத்தில் உள்ள விஷயம். இங்கு பால்காவடி, பன்னீர் காவடி போல இந்த கோவிலில் பாடைக்காவடி எடுக்கப்படுகிறது.எங்கள் அம்மனை பற்றி தெரியாதவர்களுக்கு புதுமையான விஷயம். உயிருக்கு போராடும் ஒருவர், உயிர் பிழைத்தால் பாடைக்காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் உயிர் பிழைப்பார்கள் என்பது இந்த கோவிலில் ஐதீகமாக உள்ளது. இங்கு நடைபெறும் பங்குனி திருவிழாவின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடைக்காவடிகள் வரும். இறந்தவர்களை எப்படி பாடை கட்டி சங்கு ஊதி எடுத்து செல்வார்களோ அதேபோல் செய்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
 
  விரைவில் விரைவாக விரிவாக கட்டுரை உங்களிடம் வந்து சேரும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thillai_Gowri&oldid=1441216" இலிருந்து மீள்விக்கப்பட்டது