பயனர்:Thevaraja roshan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈச்சமொட்டை


அறிமுகம்

யாழ் பெருநகரிலே அமைந்துள்ள ஊர்களில் ஈச்சமொட்டை எனும் ஊரும் காணப்படுகின்றது. இவ்வூரானது யாழ் நகரிலிருந்து ஏறத்தாள 5 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்து காணப்படுகின்றது. இவ்வூரானது யாழ் நகரை அண்மித்துக் காணப்படுவதனாலும் இதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்ததன் காரணமாகவும் இவ்வூரும் பிரதேச ரீதியில் அபிவிருத்தி அடைந்து காணப்படுகின்றது. சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், கொழும்புத்துறை, பாசையூர் போன்ற ஊர்களுக்கு மத்தியில் இவ்வூரானது அமைந்து காணப்படுவது இன்னொரு சிறப்பம்சமாகும். ஒரு பிரதேசத்தை நோக்கும் போது அதன் பௌதீக,பண்பாட்டு சிறப்பம்சங்களை ஆராய்வது பொருத்தமானதாகும் அந்த வகையில் அதனை ஆராய்வதன் மூலம் ஈச்சமொட்டைப் பிரதேசத்தின் தன்மைகளை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்

பௌதீக அம்சங்கள்[தொகு]

தரைத்தோற்றம்[தொகு]

இப்பிரதேசத்தின் தரைத்தோற்றத்தை அவதானிக்கும் போது இப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ஏறத்தாள 1.5 கிலோமீற்றர்கள் தொலைவில் கடல் காணப்படுவதால் இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் மணல் நிறைந்த பிரதேசங்களாகக் காணப்படுவதுடன் ஆங்காங்கே வண்டல் நிறைந்த களிமண்ணைக்கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் 3 பிரதான தரைத்தோற்ற வேறுபாடுகளில் ஒன்றான கரையோரச் சமவெளியிலே இப்பிரதேசம் அமைந்து காணப்படுவது இப்பிரதேச தரைத்தோற்றத்தை இலகுவாக பிரதிபலிக்கின்றது.

நீர் வளம்[தொகு]

ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்கும் முக்கியமானதொரு வளமாக நீர் வளம் காணப்படுகிறது. அந்த வகையில் இப்பிரதேசத்தின் நீர் வளத்தை எடுத்து நோக்குமானால் இப்பிரதேசம் கடற்கரையை அண்மித்த பிரதேசமாகக் காணப்படுவதால் உவர் தன்மை கொண்ட நீர் இப்பிரதேசம் முழுவதும் காணப்படுகிறது. இப்பிரதேச வாழ் மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக இப்பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர்குளாய்களைப் பயன்படுத்துகின்றனர், ஏனைய தேவைகளுக்காக தங்கள் வீடுகளின் கிணற்றிலுள்ள உள்ள உவர் நீரைப் பயன்படுத்துகின்றனர். வருடம் முழுவதும் இப்பிரதேசத்திலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறையாத தன்மை காணப்படுகிறது, இதற்குக் காரணம் இப்பிதேசத்திற்கு அண்மையில் கடற்கரை காணப்படுவதேயாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thevaraja_roshan&oldid=2157671" இலிருந்து மீள்விக்கப்பட்டது