பயனர்:Thesakkaatru

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் !

உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம்.

எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது.

தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் வீர அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகள், இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் போலவே காற்றினை எங்கள் எண்ணத்துக்கு மாற்றி அதில் பல வண்ணங்கள் காட்டி தேசக்காற்று தமிழீழ நினைவில் உலகின் அனைத்துப் பாகங்களிலும் சொல்லிலடங்கா உணர்வுகளுடன் வீசும்.

‘உங்களிடம் இருக்கும் தமிழீழ திரைப்படங்கள், ஒளிவீச்சு, தமிழீழ கானங்கள் மற்றும் மாவீரர் குறிப்புகள், புத்தக ஆவணச் சுவடுகள் உங்களிடம் இருக்குமாயின் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’.

உங்கள் கருத்துக்கள், தமிழீழ ஆவண ஆக்கங்களை thesakkaatu@gmail.com இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thesakkaatru&oldid=1607500" இலிருந்து மீள்விக்கப்பட்டது