பயனர்:Tanjongkatong/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுகாதார அறிவியல் ஆணையம்


சுகாதார அறிவியல் ஆணையம் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் ஓரு சட்டரீதியான  அமைப்பாகும்.

கண்ணோட்டம்

சுகாதார அறிவியல் ஆணையம் ஒரு பன்முக அமைப்பு. அது மருத்துவம், மருந்து மற்றும் அறிவியல் நிபுணத்துவத்தை கொண்டு மக்களின் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கச் செயல்படுகிறது. இந்த அமைப்பு மூன்று முக்கிய செயல்பாடுகளுக்குப் பொருந்தும். அவை: ▪ உடல்நல சுகாதார பொருட்களின் தேசிய சீராய்வு. ▪ தேசிய இரத்த தேவைகளை அதன் இரத்த வங்கி மூலம் உறுதி செய்வது. ▪ தடயவியல் மருந்து, தடய அறிவியல் மற்றும் பகுப்பாய்வு வேதியியல் பரிசோதனைத் திறன்களுக்கு தேசிய நிபுணத்துவ பங்களிப்பு.

ஏப்ரல் 1, 2001 -இல் சுகாதார அறிவியல் அதிகாரத்தின் கீழ் ஐந்து 

சிறப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின. அவை:

• மருந்து மதிப்பீட்டுக்கான மையம் • அறிவியல் மற்றும் தடயவியல் மருத்துவ பயிற்சி • தேசிய மருந்தக மேலாண்மை • தயாரிப்பு கட்டுப்பாடுத் துறை • சிங்கப்பூர் இரத்தம் மாற்று சேவை மையம்.


பின்னணி

 இன்று, இந்நிறுவனத்தில் தொழில்முறை அறிவு, திறன்கள் மற்றும் திறமைகளின் தொடர்பிலான மூன்று தொழில்முறை குழுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை:


• சுகாதார தயாரிப்புகளின் கட்டுப்பாட்டுக் குழு • இரத்த சேவைக் குழு • பயன்பாட்டு அறிவியல் குழு.

ஒவ்வொரு குழுவும் துறை, கிளைகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளடக்கிய பிரிவுகளாகச் செயல்படுகிறது.


சுகாதாரத் தயாரிப்புகள் கட்டுப்பாடு

மருந்து தயாரிப்புகளின் சீராய்வுக் குழு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார தயாரிப்புகளின் சீரான வினியோகம், தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்கிறது. இந்த அமைப்பு உயிரியல் மருத்துவ மேம்பாட்டிற்கும் கட்டுப்பாட்டு விதிகளுக்கும் பங்களிக்கிறது. இந்நிறுவனம் மருந்து பொருட்களின் சந்தை நிலைகளை கவனிக்கிறது. மருந்துப் பொருட்கள் சந்தைக்கு வரும்முன் அதை ஆராய்ந்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது. சந்தையில் அனுமதிக்கப்பட்ட சுகாதார பொருட்கள் மீது மறைமுக கண்காணிப்பில் ஈடுபடுகிறது. மேலும் விசாரணை மேற்கொள்கிறது. பதிவு செய்யப்படாத, போலியான மற்றும் கலப்படம் செய்யப்பட்ட உடல்நலப் பொருட்களின் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இது அமலாக்க நடவடிக்கை எடுக்கும்.

தேசிய இரத்த சேவை

இரத்த சேவை - நாட்டின் இரத்த வரவின் நம்பகத்தன்மையை பாதுகாக்கும் பொறுப்பு கொண்டது.

இரத்த வங்கி - உட்லண்ட்ஸ், டோபி காட் மற்றும் வெஸ்ட்கேட் டவர் கிளைகள் மூலம் இரத்தம் சேகரித்து, பதப்படுத்தி சிங்கப்பூரின் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இரத்த மற்றும் இரத்தக் கூறுகள் அனுப்பி வைக்கப்படும். இந்நிறுவனம் மருத்துவமனைகளில் அவசர காலத் தேவைகளுக்குப் பாதுகாப்பான இரத்தத்தை நிலையான விநியோகம் செய்ய ஒரு கட்டமைப்பை நிறுவியுள்ளது. இந்த கட்டமைப்பு இரத்த நன்கொடையாளர்கள் கொடுக்கும் இரத்த தானத்தை கடுமையான சோதனைகளுடன் பரிசோதித்து, அனைத்து சேகரிக்கப்பட்ட இரத்தத்தையும் கடுமையான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரத்தை ஒட்டிய முறையில் சேகரிப்பது.

 சுகாதார அறிவியல் அதிகாரத்தின்  தேசிய இரத்த தானம் ஆட்சேர்ப்பு மற்றும் நினைவாற்றல் திட்டம் போன்றவற்றைச் செயல்படுத்துவதில் 2001 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து முக்கிய செயலாற்றுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tanjongkatong/மணல்தொட்டி&oldid=2251173" இலிருந்து மீள்விக்கப்பட்டது