பயனர்:TNSEsanthosamNKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[[[File:Ballet de la nuit 1653.jpg|thumb|Ballet de la nuit 1653]]|240px|TNSEsanthosamNKL/மணல்தொட்டி|thumb|right]]

பாலே நடனம்[தொகு]

பாலே நடனம் (Ballet) : அபிநயத்தின் மூலம் ஒரு கதையை உணர்த்தும் ஒருவகை மேல்நாட்டு நடனமே 'பாலே" என்பதாகும். பாலே நடனத்தில் யாரும் பாடுவதோ பேசுவதோ கிடையாது. பின்னணி இசைமட்டும் ஒலிக்க, நாட்டியக் கலைஞர்கள் நடன முத்திரைகள் மூலம் கதையை ஆடிக்காட்டுவார்கள். இதற்குப் பல விதிமுறைகளும் பயிற்சிகளும் உண்டு. பண்டைய கிரேக்க, ரோமானியர் காலத்தில் கடவுளரின் கதைகளைக் கூறும் நடனங்கள் இருந்தன. இந்த நடனங்களிலிருந்து வளர்ந்ததே பாலே, இக்கால பாலே நடனம் 600 ஆண்டுகளுக்குமுன் இத்தாலிய அரசர்களின் அவையில் ஆடப்பட்டது. 200 ஆண்டுகளுக்கு முன் இந்தக் கலை பிரான்ஸ் நாட்டில் அரசர்களின் அவைகளில் புகழ்பெற்றது. பிரெஞ்சு மன்னர் 14 ஆம் லூயி, பாலே நடனப்பள்ளி ஒன்றையும் நிறுவினார். பாலே நடன முத்திரை பற்றிய விதிகளையும் பயிற்சி முறையையும் பெட்டிப்பா (Petip)என்ற பிரெஞ்சுக்காரர் வகுத்தார்.
   ரஷ்ய பாலே நடனக் கலைஞர்கள் பிரான்ஸிலிருந்து இக்கலையை  ரஷ்யர்கள் கற்றனர், அவர்கள் தங்கள் கற்பனைத் திறனால் இந்நடனத்தை ஐரோப்பிய நாட்டியங்களுள் மிகச் சிறந்த கலை நுட்பம் உடையதாக வளர்த்தார்கள். பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளிலும் பாலே நடனம் சிறந்து விளங்குகிறது.

[1]

  1. https://en.wikipedia.org/wiki/Ballet
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEsanthosamNKL/மணல்தொட்டி&oldid=2383972" இலிருந்து மீள்விக்கப்பட்டது