பயனர்:TNSE thiruthaj KRR/மணல்தொட்டி 05

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிக்கேன் விளக்கு எல்லோராலும் லாந்தர் விளக்கு என்று அழைக்கப்படுவது அரிக்கேன் விளக்காகும். சிம்னிவிளக்கின் வெளிச்சக்குறைவைப் போக்குவதற்காக இவ்விளக்கானது உருவாக்கப்பட்டது.

அரிக்கேன் விளக்கு

மேம்பட்ட பாதுகாப்பு[தொகு]

தீப்பந்தம் போல் காற்றில் அனணந்து விடாமலும், சிம்னி விளக்கினைப் போல் வெளிச்சம் குறைவாக இல்லாமலும் மேம்பட்ட வடிவமைப்பின் மூலம் காற்றில் அணைந்துவிடாமல், மிகுதியான வெளிச்சத்தைத் தருவது அரிக்கேன் விளக்காகும்.

சொல் விளக்கம்[தொகு]

அரிக்கேன் விளக்கு

ஆங்கிலப்பெயர் தமிழ்ப்பெயர் பெயர் விளக்கம்
HURRICANE அரிக்கேன் புயல்

புயல் காற்றிலும் அணையாத விளக்கு என்பது பெயர்விளக்ககம்.

வடிவச் சிறப்பு[தொகு]

சிம்னிவிளக்கில் குறைந்த அளவு மண்ணெண்ணையே நிரப்பமுடியும். நீண்ட நேரத்திற்குப் பயன்படுத்த முடியாது. ஆனால் அரிக்கேன் விளக்கானது நீண்ட நேரம் வெளிச்சத்தைத் தரும்வகையில் பெரிய அளவிலான எண்ணெய் சேமிப்புக்கலனைக் கொண்டுள்ளது.

அமைப்பு நுட்பம்[தொகு]

எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வகையில் கைப்பிடி வளையத்தோடு இந்த விளக்குக் காணப்படும். இரவுப் பயணங்களில் இவ்விளக்கின் பயன்பாடு அக்காலத்தில் பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

அரிக்கேன் விளக்கின் பகுதிகள்[தொகு]

  1. மண்ணெண்ணை சேமித்து வைக்கும் கலன்
  2. திரி ஏற்றும் பகுதி
  3. கண்ணாடிக் குடுவைப் பகுதி
  4. புகைபோக்கிப் பகுதி
  5. விளக்கின் கைவளையப் பகுதி.

தவிர்க்கமுடியத பயன்பாடு[தொகு]