பயனர்:TNSE rajammal NKL

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                                 எல்லைகள் தாண்டி சிறகடிப்போம்                                                                                

ஆர்டிக் டென் பறவை அதிக தொலைவை கடக்கும் பறவையாகும். இவை ஆண்டுதோறும் சுமார் 65 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை பயணிக்கின்றன.இதனால் இவை ஆண்டிற்கு 2 கோடை காலத்தை காணும் பறவைகள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. 10 ஆண்டுகள் இந்தப் பறவை வலசைபோகும் தூரம் நிலவுக்கு சென்று திரும்பும் தூரத்திற்கு சமமாகும்.

பறவைகள் இடப்பெயர்ச்சியில் நாட்டின் வளமையும்,வறட்சியும் ஒளிந்திருக்கிறது. நாட்டின் வளமை புதிய பறவைகளை ஈர்க்கும். வறட்சி பறவைகளை வேறிடத்துக்கு விரட்டும்.

இடப் பெயர்ச்சிக்கு சாதகமாக பறவைகளின் உடலில் இயற்கையாகவே சில மாற்றங்கள் நிகழும். அதாவது இடப்பெயர்ச்சிக்கு முன்பு பறவைகளுக்கு 'ஹைபர்பாகியா' எனப்படும் கடுமையான பசி ஏற்படும். இதனால் அவை அளவுக்கு அதிகமான உணவை உண்டு உடல் எடையைக் கூட்டுகிறது. உடலில் அதிகப்படியான கொழுப்பு அவற்றின் பயண காலத்திற்கு தேவையான சக்தியை வழங்குகிறது.

 இந்தத் தகவல்கள் முனைவர் சலீம் அலி (1896 - 1987) பறவைகளின் வாழ்க்கை முறை பற்றி கூறிய கட்டுரையின் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_rajammal_NKL&oldid=2289301" இலிருந்து மீள்விக்கப்பட்டது