பயனர்:TNSE raja diettry/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பனிப்பாறைகள்[தொகு]

பனிமலைகளின் துண்டுகளே பனிப்பாறைகள் ஆகும். இவை பிரிந்து உருகி, பின் பெருங்கடலில் கலக்கின்றன. பனிப்பாறை வெண்மை நிறத்தில் சிறிய காற்று நுண்குமிழிகளுடன் காணப்படும். நீர்க்குமிழிகளின் பரப்பு வெண்மை நிற ஒளியைப் பிரதிபலிப்பதால் பனிப்பாறை முழுவதும் வெண்மை நிறமாகத் தோன்றுகிறது. பனிக்கட்டியில் நீர்க்குமிழி இல்லாதிருக்கும் போது நீலநிறமாகத் தெரியும். இதற்குக் காரணம் வானத்தின் நீல நிறத்தைப் பிரதிபலிப்பதே ஆகும். இன்றைய உலகின் அதிகரிக்கும் நன்னீர்த் தேவைக்குப் பனிப்பாறை மூலம் கிடைக்கும் நீரைக் குடிநீராகப் பயன்படுத்துவதே ஒரு சிறந்த தீர்வாகும். வடஇந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளும் இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் இருந்தே தோன்றுகின்றன. பனிப்பாறை நீரைக் குடிநீராகப் பயன்படுத்துவதில் உள்ள இரண்டு நேர்மறையான சூழ்நிலை விளைவுகள். மனித இனம் நீர்நிலைகளைச் (ஆறு, ஏரிகள்) சார்ந்திருத்தல் வெகுவாகக் குறைகின்றது. இதனால் சூழ்நிலைமண்டலத்தில் மனிதத் தாக்கமும் குறைகிறது.பனிப்பாறை நீரைக் குடிநீராகப் பயன்படுத்துவதின் மூலம் துருவப்பகுதிகளில் உள்ள பனிமலைகள்உருகுவதனால் ஏற்படும் கடல்மட்டஅளவு உயர்வினைக் குறைக்கலாம்.

[1] [2]


2[தொகு]

எரிவெப்பநிலை[தொகு]

ஓர் எரிபொருள் எரிவதற்குக் குறிப்பிட்ட அளவு வெப்பநிலை தேவை. ஒவ்வொரு எரிபொருளும் வெவ்வேறு வெப்பநிலையில் எரியும். சில பொருள்கள் உடனே தீப்பற்றிக் கொள்ளும். சில எரிபொருள்கள் தீப்பற்ற நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும். ஓர் எரிபொருள் எரியத் தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலை அதன் எரிவெப்பநிலை எனப்படும். ஒரு பெரிய மரத்துண்டை எரியச் செய்யும்போது தீயானது, பரந்த இடத்தில் படுகிறது. நிறை அதிகமாக இருப்பதால், தீப்பற்றத் தேவையான வெப்பநிலையை அடைய அதிக நேரம் எடுத்து கொள்கிறது. மரத்துகளானது சிறியதாக உள்ளது, நிறை குறைவானதாகவும் இருப்பதால் தீப்பற்றத் தேவையான வெப்பநிலை குறைவாகத் தேவைப்படுகிறது. ஆகவே உடனடியாகத் தீப்பற்றிக் கொள்கிறது. எனவே, அதிக நிறை கொண்ட பெரிய மரத்துண்டு தீப்பற்ற அதிக நேரத்தையும், குறைந்த நிறைக் கொண்ட மரத்துகள்கள் தீப்பற்றக் குறைந்த நேரத்தையும் எடுத்துக் கொள்கிறது. நீர் வெப்பமடைகிறது. ஆனால் காகிதக் குவளை எரிவதில்லை. ஏனென்றால், நீரானது காகிதக் குவளையில் உள்ள வெப்பத்தை எடுத்துக் கொண்டு, வெப்பமடைகிறது. எனவே, காகிதக் குவளை தீப்பற்றத் தேவையான வெப்பநிலை கிடைப்பதில்லை. அதனால் அது தீப்பற்றுவதில்லை. இதன் மூலம் நீரானது எவ்வாறு தீத்தடுப்பாகச் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது. எரியும் பொருள் மீது நீரை ஊற்றும்போது, எரியும் பொருளில் உள்ள வெப்பத்தை நீர் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் எரியும் பொருளின் வெப்பநிலை, தீப்பற்றத் தேவையான வெப்பநிலையை விடக் குறைந்து விடுகிறது. ஆகவே எரிதல் நின்று விடுகிறது.

மெதுவாக எரிதல்[தொகு]

குறைந்த வேகத்தில் எரிதலுக்கு மெதுவாக எரிதல் என்று பெயர். இவ்வகையான எரிதல் குறைந்த வெப்பத்தையும் வெளிச்சத்தையும் கொடுக்கிறது. நம் உடலில் நடைபெறும் உணவு ஆக்சிஜனேற்றம் மெதுவாக எரிதலுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். கார்போ ஹைட்ரேட் + ஆக்ஸிஜன் கார்பன்டைஆக்ஸைடு + நீர் +ஆற்றல் முற்றுப்பெறா எரிதல் எரிபொருளோடு ஆக்சிஜன் எரிகின்றபோது எரிதல் வினை நிகழும். போதிய அளவு ஆக்சிஜன் எரிபொருளுக்கு கிடைக்காவிட்டால், எரிவது முற்றுப் பெறாது. இது முற்றுப்பெறா எரிதல் எனப்படும். முற்றுப்பெறா எரிதலின் போது கார்பன், கார்பன் மோனாக்சைடாக மாறுகிறது. கார்பன் + ஆக்ஸிஜன் கார்பன் மோனாக்சைடு

எரிதலின் வகைகள்[தொகு]

  1. தன்னிச்சையாக எரிதல்
  2. வேகமாக எரிதல்
  3. மெதுவாக எரிதல்
  4. முற்றுபெறா எரிதல்

தன்னிச்சையாக எரிதல் சில எரிபொருள்கள் எந்த ஒரு தூண்டுதலுமின்றி, தன்னிச்சையாகத் தீப்பற்றிக் கொள்ளும். உதாரணமாக வெண் பாஸ்பரஸ், எந்த ஒரு பொருளின் தூண்டுதலுமின்றி தானாகவே தீப்பற்றிக் கொள்ளும். இத்தகைய எரிதலுக்குத் தன்னிச்சையாக எரிதல் என்று பெயர். இரும்பு துருப்பிடித்தல், மெதுவாக நடைபெறும் எரிதலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இரும்பு துருப் பிடித்தலின்போது, இரும்புடன் நீரும் ஆக்சிஜனும் சேர்ந்து வேதிவினை புரிந்து, ஆற்றலை வெளியிடுகிறது.

  1. www.amazon.in/Rock-Ice-Cubes-Soapstone-Drinking/dp/B00K9KI4JA
  2. https://www.indiegogo.com/projects/ontherocks-make-crystal-clear-ice-cubes-spheres
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_raja_diettry/மணல்தொட்டி&oldid=2360892" இலிருந்து மீள்விக்கப்பட்டது