பயனர்:TNSE palaniappan svg/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி[தொகு]

தோற்றமும் வளர்ச்சியும்[தொகு]

 சிவகங்கைச் சீமையிலே, தேவகோட்டை கல்வி மாவட்டத்திலே அனைவராலும் பாராட்டப்படக்கூடிய அளவில்  மிகச் சிறந்த பள்ளியாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் எம் பள்ளியான இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியானது 2013-14 ம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியானது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது 200 மாணவர்கள் கல்வி பயின்றனர். 2014 -15 ம் கல்வியாண்டில் 318 மாணவர்களும், 2015 -16ம் கல்வியாண்டில் 478 மாணவர்களும்,   2016 -17ம் கல்வியாண்டில் 705 மாணவர்களும் கல்வி பயின்றனர்  இக்கலவியாணடில் 960 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர்களின் எண்ணிக்கை[தொகு]

       எம் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட 8 பேர் பணியாற்றினர். இன்று 21 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம

தேர்ச்சி விபரம்[தொகு]

       பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், ஒவ்வொரு ஆண்டிலும் எம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். 2014 -15  கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், முதல் மதிப்பெண்  483, 2015 -16  கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில்  முதல் மதிப்பெண் 477,    2016 -17  கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், முதல் மதிப்பெண்  478. மேலும் இக்கல்வியாண்டில் சமூகவியல் பாடத்தில்  14 பேர் நூற்றுக்கு நூறு  மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இம் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெறும் பொருட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
         பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். எஸ். கண்ணப்பன் அவர்கள், 3.02.17 அன்று எம் பள்ளிக்கு வருகை தந்து, பார்வையிட்டு, சிறந்த பள்ளியென பாராட்டிள்ளார். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (முறைசாராக் கல்வி) திரு. செல்வக்குமார் அவர்களும், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக் கல்வி) திரு.நரேஷ் அவர்களும் பார்வையிட்டு, பாராட்டியுள்ளார்கள்;.

பள்ளியின் சாதனைகள்[தொகு]

  • காரைக்குடி உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்ட மலர்கொத்து செய்யும் போட்டியில் செல்வன். வினோத்குமார் முதல் இடத்தில் வெற்றி பெற்று, மாண்புமிகு மத்திய அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களிடம் பரிசு பெற்றார் என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி போட்டியில் எங்கள் பள்ளி மாணவி செல்வி. சபானா, இக்கல்வியாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.
  • குறுவளமைய அளவிலான அறிவியல் கண்காட்சியில் சிறந்த பள்ளிக்கான விருதை, எம் பள்ளி வென்றது.
  • மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், ஏழாம் வகுப்பு மாணவன் பழனிக்குமார் இரண்டாம் பரிசு பெற்றார்.
  • தேவகோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் எங்கள் பள்ளி மாணவன் செல்வன். எஸ். தீபக் பரிசு பெற்றார்.
  • 2015-16ம் கல்வியாண்டில், தேசிய வருவாய் வழி திறனறிவுத் தேர்வில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்றார். 2016 -17 ம் கல்வியாண்டில் 5 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
  • முத்தையா அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பிரமிடு அமைக்கும் போட்டியில் எம் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றனர்.
  • பள்ளி பரிமாற்றுத்திட்டத்தின் கீழ் எங்கள் பள்ளியானது, வைரவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியோடு இணைந்து மாணவர்களின் கற்றல் திறன் மேலும் சிறப்பு அடைய இணைந்து செயலாற்றி வருகிறது.
  • அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் மூலம் ELCOM PROJECT எங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி நிகழ்வுகள்[தொகு]

  • எம் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா பெற்றோர்களின் ஒத்துழைப்போடு கொண்டாடப்பட்டு வருகிறது.
  • காமராஜர் பிறந்த நாள் விழா, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, நவராத்திரி விழா, ரமலான் விழா, கிறிஸ்துமஸ் விழா, பொங்கல் விழா, கார்த்திகை தீபத்திருவிழா, குழந்தைகள் தின விழா, ஆசிரியர் தின விழா, உணவுத்திருவிழா, ஓணம் பண்டிகை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மாணவர்களின் தனித்திறன்களை அறியும் வகையில் பல்வேறு நிலைகளில் வயதிற்கு ஏற்ற வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வினாடி வினா போட்டி, கைவினைப் பொருள்கள் செய்தல் போட்டி, கோலப் போட்டி, மாறுவேடப் போட்டி, மலர் கொத்து செய்யும் போட்டி, வாழ்த்து அட்டை செய்யும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு, திறமையான மாணவர்கள் கண்டறியப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டுவருகிறார்கள்.
  • ஒவ்வொரு பருவத் தேர்வும் முடிவுற்றவுடன், பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி அதில் மாணவர்களின் கல்வித்தரம் பற்றி பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தனியாக பெற்றோர் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களின் கற்றல் மேம்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • எம் பள்ளியில் ABACUS, தையல், ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும் வகுப்புகள் போன்ற பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஒவ்வொரு பாடத்திற்கும் மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் பொருட்டு நிகழ்ச்சிகள் மாணவர்களால் நடத்தப்படுகிறது.
  • மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், கல்வியில் சிறந்து விளங்குபவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் கல்வியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு TOPPER என்ற Badge வழங்கப்படுகிறது.
  • மாணவர்களின் ஆளுமைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் Class monitor ,class.Asst. monitor என்ற Badge வழங்கப்பட்டு வருகிறது.
  • பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், ஒழுக்கத்தை சரியான முறையில் கடைபிடிக்கவும் Law Ministry and Health Ministry அமைக்கப்பட்டுள்ளது.
  • பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் 4 குழுக்களாக பிரித்து, அக்குழுவின் கல்வி, ஒழுக்கம் இதர செயல்பாடுகள் ஆகியவை கண்காணிக்கப்பட்டு சிறந்த குழுவிற்கு Best House என்ற விருது வழங்கப்படுகிறது.
  • இது போலவே சிறப்பாக திகழும் வகுப்பிற்கு Best Class Award-ம் சிறந்த செயல்;பாடுகள் உடைய Notice Board கொண்ட வகுப்பிற்கு Best Notice Board Award-ம் வழங்கப்படுகிறது. இவ்வகை விருதுகளினால் மாணவர்கள் போட்டி மனப்பான்மையுடனும் ஆர்வமுடனும் அனைத்து செயல்பாட்டிலும் பங்கேற்கின்றனர்.
  • மேலும் பள்ளியில் பசுமைப்படை, சாரண சாரணியர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகள் சிறப்பாகச் செயல்படுகிறது.
  • மாணவர்கள் பத்திரிக்கைகள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்களுக்கு பிடித்த சுட்டி விகடன், துளிர் அறிவியல், புதிய தலைமுறை கல்வி, பட்டம், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிக்கைகள் மற்றும் நாளிதழ்கள் பள்ளியில் வாங்கப்படுகிறது. மாணவர்களும் அவற்றை ஆர்வமுடன் வாசித்து வருகின்றனர்.
  • பள்ளியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் வகுப்பறை செயல்பாடுகளை, அனைத்து பெற்றோர்களும,; தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக Ramanathan Chettiar Municipal High School என்ற Facebook Account ஆரம்பிக்கப்பட்டு அதில் தினமும் பள்ளி நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் தினமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதே போல் பள்ளியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வெப்சைட் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. . WWW. rmhschool.com என்ற இணையதளத்தில் பள்ளியை பற்றி முழு விபரத்தையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதுபோல் பள்ளிக்கென பிரத்யேகமான இணையதளம் ஆரம்பித்துள்ள ஒரே அரசு பள்ளி எங்கள் பள்ளி என்பதை கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
  • மாணவர்கள் பிறந்த நாட்கள் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளன்று மாணவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களின் புகைப்படம் Facebook மற்றும் இணையதளததில் வெளியிடப்படுகிறது.
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு பற்றிய பயம் நீங்கவும், நினைவாற்றலை பெருக்கவும், மனஉளைச்சலை நீக்கவும் விழிப்புணர்வு பயிற்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகிறது.
  • மாணவர்கள் படிப்பை அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி படிக்க வேண்டும் என்ற நோக்கில் களப்பயணமாக வங்கி, தபால் நிலையம், ரயில் நிலையம், நகராட்சிப் பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அவ்விடங்களில் நடைபெறும் செயல்பாடுகள் பற்றி விளக்கப்படுகிறது.
  • ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் அவ்வப்போது கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஒவவொரு கல்வியாண்டிற்கான செயல்திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
  • எம் மாணவர்களின் பேச்சுத் திறமையை வளர்க்கும் பொருட்டு, சிறந்த பேச்சாளர்களான பேராசிரியர் சுப. வீர பாண்டியன் அவர்கள் , பேராசிரியர் பாகை கண்ணதாசன் அவர்கள்;, பொற்கிழிகவிஞர். நாகப்பன் அவர்கள், சன் டிவி புகழ் தேவகோட்டை இராமநாதன் அவர்கள் போன்ற பல்வேறு பேச்சாளர்கள் மூலம் பள்ளிகளில் இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது.
  • மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் பொருட்டு, தன்னம்பிக்கை பயிற்சயாளர்களான பேராசிரியர் ஜானகி ராமன் அவர்கள், திரு. தேவராஜன் அவர்கள், திரு. விணைதீர்த்தான் அவர்கள் போன்ற சிறந்த பயிற்சியாளர் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், இவ்வாண்டில் பள்ளிக்கு 3 கணிப்பொறிகள் வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளியில் இதுவரை 121 புரவலர்கள் சேர்க்கப்பட்டு, ரூ.1,25,000 கனரா வங்கியில் நிரந்தர வைப்பு நிதிக் கணக்காக வைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகை பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் திருமதி. அழகு சுந்தரி அவர்கள், எங்கள் பள்ளிக்கு இரண்டு போடியங்கள் அளித்துள்ளார்கள்.
  • பெருமைமிகு இப்பள்ளிக்கு, காரைக்குடி நகராட்சி நிதியிலிருந்து 14 கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. எம்பள்ளியில் SMART CLASS வகுப்பறைகள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
  • 2017-18ம் கல்வியாண்டில்; பெற்றோர்கள் ரூ.1,30,000 மதிப்புள்ள தளவாடப்பொருட்களை பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.
  • மாணவர்களிடையே பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் பல்லாங்குழி, பரமபதம், தாயம். சதுரங்கம், நொண்டி போன்ற பல்வேறு பழமையான விளையாட்டுகள் பெற்றோர்களின் ஒத்தழைப்போடு 2017-18ம் கல்வியாண்டு முதல் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
  • இவ்வளவு சிறப்பும் பெற்ற எம்பள்ளி 2014-15ம் ஆண்டிற்கான சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த அரசு உயர்நிலைப்பள்ளிக்கான விருது பெற்று, சிகரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் எம் பள்ளி, மேலும் பல விருதுகளை பெறும் என்றால் அது மிகையாகாது.

[1]

  1. "இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி". பழனியப்பன். 27 சூலை 2017. {{cite web}}: |access-date= requires |url= (help); Missing or empty |url= (help)