பயனர்:TNSE john VNR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

<தொகுக்கப்படுகிறது>

சாட்சியாபுரம்[தொகு]

பெயர் தோற்றம்[தொகு]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் சிவகாசி நகரின் மேற்கே புதிய குடியிருப்பு பகுதியாக அமைந்துள்ளது. சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் இப்பகுதி அமைந்துள்ளது. கி.பி.1864ல் மேலைநாட்டு கிறீத்துவ சமய தொண்டர்கள் இங்கு தங்களுக்கான புதிய குடியிருப்புக்களை உருவாக்கி தங்கி சமய தொண்டாற்றினர். அவர்களில் முதன்மையானவர்கள் த. கெ. ராக்லாண்ட் மற்றும் மெடோஸ் ஆவர். இவர்களில் மெடோஸ் இங்கிலாந்தில் தனது சொந்த ஊரின் நினைவாக இப்புதிய குடியிருப்புக்கு ஆங்கிலத்தில் விட்னஸ்ஹாம் என்பதனை சாட்சியாபுரம் என மொழி பெயர்ப்பு செய்து பெயர் சூட்டினார்.

முக்கிய இடங்கள்[தொகு]

  1. சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் உயர் நிலைப்பள்ளி, எல்வின் நிலையம்;
  2. சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி, எல்வின் நிலையம்;
  3. சி.எஸ்.ஐ.தொடக்கப்பள்ளி, வடக்கு சாட்சியாபுரம்;
  4. சி.எம்.எஸ். நடு நிலைப்பள்ளி;
  5. எஸ்.சி.எம்.எஸ். பெண்கள் மேனிலைப்பள்ளி;
  6. வட்டாச்சியர் அலுவலகம்;
  7. ஊராட்சி ஒன்றிய அலுவலகம்;
  8. கோட்டாச்சியர் அலுவலகம்;
  9. வணிக வரித்துறை அலுவலகம்;
  10. மகளிர் காவல் நிலையம்;
  11. ஆயுத படை நிலையம்;
  12. சிறுவர் பூங்கா;
  13. தொடர் வண்டி நிலையம்;
  14. காவலர் குடியிருப்பு;
  15. என்.ஜி.ஓ.காலணி;
  16. ஸ்டேட் பேங்க் காலணி;
  17. ஆசிரியர் காலணி;
  18. ஆசாரியர் காலணி;
  19. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_john_VNR/மணல்தொட்டி&oldid=2327654" இலிருந்து மீள்விக்கப்பட்டது