பயனர்:TNSE alphonsa KRR/மணல்தொட்டி3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீலப்பதிப்பு[தொகு]

கட்டடம் முதலிய வற்றைக் கட்டும்போதோ, எந்திரங்களை அமைக்கும்போதோ பொறியியலில் கட்டட நிருமாணர் அமைப்புப்படம் வரைஞர் சாயலமைப்பாளர் என்ஜினியர் முதலானோர் தயாரிக்கும் ஒருவகைப்படம் தக்க காகிதத்தில் அயக அமோனியம் சிட்டரேட்டு பொட்டாசியம் அயகசயனைடு ஆகியவற்றின் கரைசலைத் தடவி நீலபப்பதிப்பு காகிதம் தயாரிக்கிறார்கள்.வெண்மையாகவுள்ள இக்காகிதம் ஒளி உணர்வுடையதாகிறது. ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய சாதாரணமான காகிதத்திலோ, துணியிலோ,இந்திய மையினாலோ,பென்சிலாலோ அமைப்புப்படத்தை வரைந்து, பதிப்புச் சட்டகத்திலுள்ள நீலபதிப்புக் காகிதத்தின் மீது அப்படத்தை வைத்து நல்ல வெளிச்சத்தில் சிறிது நேரம் வைத்திருந்த பின்னர்,நீலப்பதிப்புக் காகிதத்தைத் தூய நீரில் கழுவினால்,நீலமான காகிதத்தில் வெண்மை நிறக் கோடுகளில் மேற் கூறிய அமைப்புப்படம் கிடைக்கும். இதைப்போல் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். போட்டோ எதிர்ப்படத்தலிருந்தும் நீலபதிப்பை மேற்கூறிய முறையில் பெறலாம். பொறியியல் நீலப்பதிப்பு மிக இன்றியமையாதது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_alphonsa_KRR/மணல்தொட்டி3&oldid=2363496" இலிருந்து மீள்விக்கப்பட்டது