பயனர்:TNSE VIJAYA VPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திணைமயக்கம்[தொகு]

     திணைகள் ஐந்து வகைப்படும்.அவை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை ஆகும்.திணைகள் உணர்வதற்கு அடிப்படையாய் அமையும் பொருள்களே முதல், கரு, உரி என்னும் மூன்றும் ஆகும்.திணை ஒவ்வொன்றுக்கும் முதல்,கரு,உரிப்பொருள்கள் தனித்தனியாகக் கூறப்பட்டுள்ளன.


முதற்பொருள் விளக்கம்[தொகு]

    முதற்பொருள் என்பது அடிப்படைப் பொருள் ஆகும்.அவை நிலம்,பொழுது(காலம்) என இரு வகைப்படும்.

கருப்பொருள் விளக்கம்[தொகு]

    முதற்பொருளாகிய நிலத்தையும் காலத்தையும் அடிப்படைய்யாககக் கொண்டு பிறக்கும் பொருள்களே கருப்பொருள்களாகும்.இவை ஐவகை நிலத்திற்கும் இயற்கையாய் அமைந்தவை ஆகும்.

உரிப்பொருள் விளக்கம்[தொகு]

    உரி என்பது ஒழுக்கமாகும்.அவ்வவ் நிலத்துக்குரிய உயர்ந்த மக்களிடத்துக் காணப்படும் ஒழுகலாறே உரிப்பொருள்.
  
 

திணைமயக்கத்தின் இலக்கணம்

   முதற்பொருள்,கருப்பொருள்,உரிப்பொருள் என்னும் மூன்று வகைப்பொருளும் தத்தமக்கு உரிய திணைக்கே அல்லாமல் பிறதிணையிலும் இடம் பெறும்.இதுவே திணைமயக்கம் ஆகும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_VIJAYA_VPM/மணல்தொட்டி&oldid=2312233" இலிருந்து மீள்விக்கப்பட்டது