பயனர்:TNSE VIJAYA KRR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 அருப்புக்கோட்டை அம்மன்
    இந்தியாவின் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை என்னும் நகரில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

அமைவிடம்:

  ஆலயம் அருப்புக்கோட்டை நகரின் மத்தியில் அமைந்துள்ளது.ஆலயத்தின் கிழக்கே உயர்நிலைப்பள்ளியும் தெப்பக்குளமும் உள்ளன.மேற்கே நடுநிலைப் பள்ளியும் வடக்கே இஸ்லாமியர் தெருவும் உள்ளது தெற்கே முக்கிய சாலை அமைந்துள்ளது.

தல வரலாறு:

    அருப்புக்கோட்டையின் காடு அடர்ந்த பகுதியில் ஒரு கன்னிப்பெண் சாணம்,விறகு பொறுக்கினாள் அப்பொழுது அப்பகுதி சாணம் தெளித்து சுத்தப்படுத்தினால் காற்பணம் கிடைக்கும் என்ற அசரீரி கேட்டு அப்பெண் அந்த இடத்தை சுத்தப்படுத்தினாள் தினமும் அவளுக்குக் காற்பணம் கிடைத்தது.அசரீரி கேட்ட இடத்தில் தான் மாரியம்மனுக்குக் கோவில் கட்டினர் என்பது செவிவழிக் கதையாகும்.

முன்பு இருந்த நிலை:

     முத்து மாரியம்மன் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டில் பீட நிலையில் இருந்தது. சுற்றுச்சுவரோ, கோபுர அமைப்போ மேற்கூரையுமின்றி சிறு தெய்வம் போல பீட நிலையில் இருந்தது.

வளர்ச்சி:

      நாடார் குல மக்கள் தங்கள் குல தெய்வமாக மாரியம்மனை ஏற்று முழுமையான கோவிலை உருவாக்கினர்.

கோவில் அமைப்பு:

     நான்கு மதில் சுவர்களும்,அதனுள் அர்த்த மண்டபமும் கர்ப்பக் கிரகமும்,கோவிலின் பின்புறம் நான்கு கால் மண்டபமும் அமைந்துள்ளன.அருப்புக்கோட்டையின் மத்தியில் சுமார் பத்தாயிரம் அடி பரப்பளவில் அமைந்துள்ளது.அம்மன் வடக்கு முகம் நோக்கி உரிய முறைப்படி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்புறம் வைரவநாதன் பீட நிலையில் உள்ளது. கோவிலின் நீளம் சுமார் 108 அடி அகலம் சுமார் 38 அடி உள்ளது.

கோவில் நிர்வாகம்:

        அருப்புக்கோட்டை நாடார்கள் டிரஸ்ட்டின் நிர்வாகமே இந்த ஆலயத்துக்குரிய நிர்வாகம் ஆலயக் குடமுழுக்கு 1907 ஆம் ஆண்டு நடைபெற்றது. கோவில் தர்மகர்த்தா கோவிலுக்குரிய அனைத்து பொறுப்புகளையும் பார்ப்பார்.

வழிபாட்டு முறை:

 சாதாரண நாட்களில் மட்டுமல்லாமல் திருவிழாக் காலங்களில் கூட ஆடு,கோழி போன்ற உயிர்ப்பலி இல்லை.அம்மனுக்கு மூன்று வேளை பூஜையும் நடைபெறும்.

பூசை செய்பவர்:

    இக்கோயிலுக்கு பூசாரி அந்தணரே பரம்பரை பரம்பரையாக இவர்களே பூஜை செய்கின்றனர். தந்நைக்குப் பின் மகன் பூஜை செய்ய உரியவர்.மகன் ஒழுக்கக்கேடானவனாக இருந்தால் அவர் பூஜை செய்யத் தகுதி அற்றவராவார்.

நேர்த்திக்கடன்கள்:

    பாதம் வாங்கி வைத்தல்( களிமண்ணால் ஆனது),மாவிளக்கு எடுத்தல்,மஞ்சள் காப்பு இடித்துக் கொடுத்தல், கண்மலர் வாங்கிக் கொடுத்தல்,எலுமிச்சை மலர் மாலை வாங்கி சார்த்துதல்,பிள்ளைத்தொட்டில், ஆயிரங்கண் பானை,மண்கன்று வாங்கி வைத்தல்
மேற்கோள்:

http://m.dinamalar.com/temple_detail.php?id=41352

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_VIJAYA_KRR/மணல்தொட்டி&oldid=2312754" இலிருந்து மீள்விக்கப்பட்டது