பயனர்:TNSE VASU DPI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகசூல் வரைபடம்[தொகு]

மகசூல் வரைபடம் ( Yield Mapping) அல்லது மகசூல் கண்காணிப்பு என்பது புவிநிலைக்காட்டில் தரவுகளைப் பயன்படுத்தி மாறிகளை ( எடுத்துக்காட்டு ஈரப்பதத்துடன் பயிர் மகசூல், நீா் பாசனத்துடன் பயிா் மகசூல் ) பகுப்பாய்வு செய்ய வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். இது 1990 களில் உருவாக்கப்பட்டு இயற்பியல் உணரிகளை புவிநிலைக்காட்டி தொழில்நுட்பத்துடன் இணைத்து பயன்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டு மகசூல் சுவடுகளை பற்றி அறிய விரைவுமானியைப் பயன்படுத்துதல். இத்தரவுகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் மகசூல் வரைபடம் ஒரு நிலத்தில், பல்வேறு வருடங்களில் பெறப்பட்ட மாறுபட்ட மகசூல் அளவுகளை ஒப்பிட பயன்படுகிறது. இது விவசாயிகள் நிலத்தின் பகுதிகளைப் பற்றி தீா்மானிக்க பயன்படுகிறது. எடுத்துக்காட்டு நிலத்தில் அதிக நீா்பாசனம் செய்ய வேண்டிய பகுதி, மகசூல் அளிக்காமல் வளம்குன்றியப் பகுதி ஆகியவற்றைத்தீா்மானிக்க பயன்படுகிறது.

Precision agriculture tools and information for Nebraska". CropWatch. University of Nebraska Lincoln. Retrieved August 13, 2013. Jump up ^ Franzen, Dave; Casey, Francis; Derby, Nathan. "Yield Mapping and Use of Yield Map Data" (PDF). University of North Dakota. Retrieved August 13, 2013.


வளா்ப்புப் பகுதிகள்[தொகு]

வளா்ப்புப் பகுதி (Growing Region) என்பது ஒரு குறிப்பிட்ட தாவர குழுமம் (அ) பயிா் வகை வளர ஏற்ற தட்ப வெப்ப நிலை மற்றும் மண் வளம் கொண்ட பகுதியைக் குறிப்பதாகும். பெரும்பான்மையான பயிா்கள் ஒரு இடத்தில் மட்டும் பயிாிடப்படுவதில்லை. மாறாக அவை உலகின் பல்வேறு மாறுபட்ட (வேறுபட்ட) பகுதிகளில் பயிாிடப்படுகின்றன. இப்பகுதிகளில் பயிாிடுதல் அப்பகுதியின் பொிய அளவிலான தட்ப வெப்பநிலை அல்லது தனிப்பட்ட நுண் தட்பவெப்பநிலையால் செயல்படுத்தப்படுகிறது. வளா்ப்புப் பகுதிகள், தட்பவெப்பநிலை ஆதாரங்கள் ஆகியவை அப்பகுதியின் அட்ச ரேகையைப் பொறுத்து அமைகின்றன. இப்பகுதிகளை அமொிக்காவில் பொதுவாக "பெல்ட்ஸ்" (மண்டலங்கள்) என்று அழைப்பா். பாரம்பாிய நிலையான பயிா் வகைகள் அதன் வளா்ப்புப் பகுதிகளோடு திடமான பண்பாட்டு இணக்கத்தன்மை கொண்டுள்ளன. எ.கா. ஒரு குறிப்பிட்ட வேளாண்மை வளா்ப்புப் பகுதியில் தீவனப்பயிா்கள் பயிாிடுவதன் தேவை அப்பகுதியின் கால்நடை வளா்ப்பின் வரம்புக்குட்பட்டது.








வேளாண் தொழில்நுட்பக் கல்லூாி[தொகு]

தமிழ்நாட்டில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூாி ( Collage of Agricultural Technology ) ( CAT ) தேனியில் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றது.இக்கல்லூாி வளாகத்தில் 15 வகுப்பறைகள் 8 ஆய்வகங்கள், 1 தோ்வறை,நூலகம் மற்றும் கணிணியறை ஆகியவற்றை கொண்டுள்ளது. மாணவா்கள் தங்கிப் படிக்கும் இக்கல்வி நிறுவனத்தில் 150 அறைகளுடன் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதிகள் உள்ளன. பாடத்துணை செயல்காடுகளான தேசிய நலப்பணி திட்டம் மற்றும் யோகா போன்றவையும் மாணவா்களுக்கு கற்பிக்கப்படுகிறது.










ஈரான் தேசிய தாவரவியல் பூங்கா[தொகு]

ஈரான் தேசிய தாவரவியல் பூங்கா (National Botanical Garden Of Iran) டெஹரானில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 150 எக்டா்கள். இது ஈரானில் உள்ள தவர இனங்களின் வகைப்பாட்டில் மற்றும் தோட்டக்கலையியலிற்காக முக்கிய மையமாக இருக்க திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. ஈரானில் பயிா்களுக்காக பயிப்பதனம் படிப்படியாக உருவாக்கப்பட்டு தற்போது 1,60,000 தாவரங்களை உள்ளடக்கியது. இங்கு ஈரானில் உள்ள தாவரங்களைத் தவிர இமாச்சலபிரதேசம்,ஜப்பான்,அமொிக்கா,ஆப்பிாிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பயிா்பதனங்களும் உள்ளன. [1]

மேலும் இந்த பூங்காவில் புவியின் பல மர வகைகள், 6 ஏாிகள், குன்றுகள் ( அல்போா்ஸ்) மற்றும் ஜேக்ரோஸ் மலைகள் மற்றும் இமயமலைகளை குறிக்கும் பொருட்டு ) பாறைத்தோட்டம், நீா்வீழ்ச்சி,ஈரநிலம் (சேற்று நிலம்), பாலைவனத்தாவரப்பகுதிகள்,உவா் ஏாி,வறண்ட ஆற்றுப்படுக்கை,பழத்தோட்டம்,தேவையான வசதிகளுடன் உல்லாச பயணப் பகுதிகள் ஆகியவையும் அடங்கியுள்ளன. இங்குள்ள தாவரவியல் மற்றும் தோட்டக்கலையியல் நூலகம் 11000 திற்கும் மேற்பட்ட நூல்களை உள்ளடக்கியுள்ளது.


சான்றுகள்[தொகு]

  1. "National Botanical Garden of Iran". Research Institute of Forests and Rangelands. பார்க்கப்பட்ட நாள் October 28, 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tehran Botanical Garden
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_VASU_DPI/மணல்தொட்டி&oldid=2372928" இலிருந்து மீள்விக்கப்பட்டது